search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. நிறுவனத்தின் புதிய GT பிளாக் சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
    • இதன் விலை ரூ. 5 கோடியில் இருந்து துவங்குகிறது.

    மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. GT பிளாக் சீரிஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய GT பிளாக் சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 5 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.


    ஏ.எம்.ஜி. GT ரேஸ் கார் 720 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த காரில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. GT பிளாக் சீரிஸ் மாடலில் காயில்-ஓவர் சஸ்பென்ஷன் செட்-அப், அடாப்டிவ் டேம்பிங் மற்றும் வீல் கேம்பர் மற்றும் ஆண்டி-ரோல் பார்களுக்கு மேனுவல் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செலக்ட் செய்யக் கூடிய 9 ஸ்டெப் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    • போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விர்டுஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் துவக்க விலை ரூ. 11 லட்சம் ஆகும்.

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த விர்டுஸ் காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Comfortline டைனமிக் லைன் (MT) ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (MT) ரூ. 12 லட்சத்து 98 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (AT) ரூ. 14 லட்சத்து 28 ஆயிரம்

    போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (MT) ரூ. 14 லட்சத்து 42 ஆயிரம்

    போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (AT) ரூ. 15 லட்சத்து 72 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.5 TSI GT Line பெர்பார்மன்ஸ் லைன் (AT) ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம்


    ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 1 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் TSI 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 148 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தனது வாகனங்களை ரிகால் செய்ய முடிவு செய்து இருக்கிறது.
    • இதில் மூன்று கார் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று கார் மாடல்களை உலகம் முழுக்க ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இவற்றில் 2nd Gen மெர்சிடிஸ் பென்ஸ் ML கிளாஸ் W164, 1St Gen GL கிளாஸ் X164 மற்றும் R கிளாஸ் W251 போன்ற மாடல்களின் 9 லட்சத்து 93 ஆயிரத்து 407 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.


    கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் இந்திய சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றையும் ரிகால் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 மாடல் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    • இந்த மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 மாடல் இந்திய சந்தையில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த மாடல் இருவதி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், டூயல் குரோம் ஸ்லாட் முன்புற கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. புதிய சிட்ரோயன் C3 மாடல் நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இதன் மோனோ டோன் வேரியண்ட்கள் போலார் வைட், ஸ்டீல் கிரே, செஸ்டி ஆர்ஞ்சு மற்றும் பிளாட்டினம் கிரே நிறங்களிலும், டூயல் டோன் வேரியண்ட்கள் செஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே ரூஃப் மற்றும் போலார் வைட், செஸ்டி ஆரஞ்சு நிற ரூஃப் நிறங்களில் கிடைக்கிறது.


    புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டடர் பெட்ரோல் மற்றும் 1டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.

    • லம்போர்கினி நிறுவன கார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.
    • புது மைல்கல் எட்டிய லம்போர்கினி கார் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச சந்தையில் உருஸ் மாடல் உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்கள் எனும் புது மைல்கல் எட்டி உள்ளதாக லம்போர்கினி அறிவித்து உள்ளது.


    கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் லம்போர்கினி நிறுவனம் தனது உருஸ் மாடல் உற்பத்தியில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்தது.இந்த நிலையில் 12 மாதங்களில் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற மைல்கல் எட்ட ஹரிகேன் மாடல் எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    லம்போர்கினி உருஸ் 20 ஆயிரமாவது யூனிட் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • டாடா ஹேரியர் மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் மற்றும் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. இவை ஜூன் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.

    அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தற்போது இடம்பெற்று உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது டாடா ஹேரியர் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ ஹேச்பேக் மற்றும் டிகோர் சப் காம்பேக்ட் செடான் மாடல்களுக்கு ரூ. 23 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு,வி. மாடல் டாடா நெக்சானுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் CNG மாடல்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் வழங்கவில்லை. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. 

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் பிளக் இன் ஹைப்ரிட் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் உள்ள பேட்டரி பேக் உடன் அதிகபட்சம் 50 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு உள்ளது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் பிளக் இன் ஹைப்ரிட் (PHEV) மாடலின் இந்திய விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி புதிய லேண்ட் ரோவர் ஹைப்ரிட் மாடல் விலை இந்தியாவில் ரூ. 2 கோடியே 61 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 4 கோடியே 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இத்தகைய விலைப் பட்டியலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பிளக் இன் ஹைப்ரிட் வாகனமாக புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் அமைந்துள்ளது. ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடல் ரெகுலர் மற்றும் லாங்-வீல்பேஸ் என இரண்டு விதமான பாடி ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.


    புதிய ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடலில் 3.0 லிட்டர் இன்ஜெனியம் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. ஸ்டாண்டர்டு ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடல் - P440e மற்றும் P510e என இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இதில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 105 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை P440e மாடல் 435 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இதன் P510e மாடல் 503 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஹைப்ரிட் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு லேண்ட் ரோவர் மாடல் 113 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. நிஜ பயன்பாடுகளில் இந்த மாடல் 88 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.

    • மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புதிய பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலில் மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய தலைமுறை மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் இந்திய சந்தையில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது மாடலின் பெயரில் மாற்றம் செய்யவும் மாருதி சுசுகி முடிவு செய்து உள்ளது. அதன் படி புதிய மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் விட்டாரா என்ற பெயர் நீக்கப்படுகிறது.

    சமீபத்தில் புதிய பிரெஸ்ஸா மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியானது. அந்த வகையில், புதிய பிரெஸ்ஸா மாடலின் முன்புறம் முற்றிலும் புதிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப் மற்றும் L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.


    உள்புறம் மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிப்டர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, சுசுகி கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் தற்போதைய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 84 ஆயிரத்தில் துவங்குகிறது. அந்த வகையில் ஏராளமான அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது மாடலுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

    அடுத்த தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஸ்பை படங்களின் படி புதிய பார்ச்சூனர் மாடலின் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் மாடை போன்று காட்சியளிக்கிறது.


    வெளிப்புற தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் இல்லாத நிலையில், இந்த மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இத்துடன் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இங்கு புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் எம்.ஜி. குளோஸ்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Source: Rushlane

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய கார் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மேட் இன் இந்தியா மாடல் ஆகும்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் மேட் இன் இந்தியா வாகனம், சிட்ரோயன் C3 காரை இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே தகவலை டீலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் டீலர் தரப்பில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபிளாக்‌ஷிப் C5 ஏர்கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தி சிட்ரோயன் நிறுவனம் களமிறங்கியது. புதிய C3 மாடல் மூலம் பிரெஞ்சு பிராண்டு சந்தையில் தனது இடத்தை நிலைநிறுத்த முடிவு செய்து உள்ளது. அசத்தலான டிசைன், காண்டிராஸ்ட் ட்ரிம் எலிமண்ட்களை கொண்ட சிட்ரோயன் C3 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.

    • ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது காரின் என்ஜின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.


    புதிய வென்யூ மாடல் மொத்தம் 16 வேரியண்ட்களில், மூன்று வித என்ஜின் மற்றும் மூன்று வித டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் ஏராளமான அதிரடி அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் மாடல் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

    வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் என்ஜின் அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ GDi மற்ரும் 1.2 லிட்டர் Mpi கப்பா பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் ஆப்ஷ்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    • பா.ஜ.க. மாநில செயலாளர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகிறார்.

    சாயல்குடி

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகிறார். அவரை வரவேற்பதற்காக பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் ராம்குமார் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் காரை நிறுத்தினர். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது கல்வீசினார். இதில் அவர் தப்பித்துக் கொள்ள காரில் பின்னால் உள்ள கண்ணாடி உடைந்தது.

    கார் மீது கல்வீசிச் சென்ற மர்ம நபரை சாயல்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

    ×