search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தென்மண்டல மருத்துவ இயக்குனர், டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    முகாமினை விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் அபிஷியா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். மேலாளர்கள் ராபின், பேச்சிமுத்து மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமினை நடத்தினர். இதில் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
    • தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு, முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகி களிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வீரபாகு, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, முன்னாள் அரசு வக்கீல்கள் யு.எஸ்.சேகர், சுகந்தன் ஆதித்தன், ஆண்ருட்மணி,முனியசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலூமுத்து, பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, ஓன்றிய செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், பகுதி இளைஞரணி செய லாளர் திருச்சிற்றம்பலம், துணைசெயலாளர் டைகர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பும், முத்தையாபுரம் பல்க் சந்திப்பிலும் அமைக்கப்பட்டு இருந்த கோடை கால தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், பழவகைகள் வழங்கினார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
    • தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தி னரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பிரபாகரன் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, வடபாகம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (29) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

    இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இயேசு உயிர் துறந்த புனித வெள்ளி நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை கொண்டா டும் ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டது.

    தூத்துக்குடி

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்ளில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ . ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடத்தினார்.

    அனைவருக்கும் கேக் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை இன்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் பங்குத் தந்தை ஆன்றனி புருனோ பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார். இதில் இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது, கிறிஸ்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு பிறப்பை வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்காக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில்  சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.


     


    • திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன.
    • ஜூன் 3-ந் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் தங்களது பகுதியில் வீடு, வீடாக சென்று தினமும் 1மணி நேரமாவது கட்சிக்கு உழைக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர்களை சேர்க்க லாம்.

    தி.மு.க. ஆட்சி வந்த பின்பு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் முன் வைக்கின்றனர். செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ அல்லது மேயரி டமோ தெரியப்படுத்துங்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன. சாதி, மதம் கிடையாது. சட்டமன்றத்தில் கவர்னர் தெரிவித்த கருத்துக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து நம்முடைய உரிமையை முதல்-அமைச்சர் பாது காத்தார். மற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தனர்.கொள்கை உணர்வோடு நாம் இருக்க வேண்டும்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜூன் 3-ந் தேதிக்குள் நமது மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துகொடுக்க வேண்டும். பூத் கமிட்டியை வரும் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    அதில் இளைஞர்கள் பெண்கள் இடம் பெற வேண்டும். வட்டச் செயலாளர்கள் வட்டப்பிரதி நிதிகள் தான் அந்த பகுதியில் தி.மு.க. வளர்ச்சிக்கு துணையாக இருந்து செயல் படக்கூடியவர்கள்.

    தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன. அதற்கு தகுந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தரவேண்டும். அதை முறையாக தலைமை கழகம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்சாண்டர், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன் தாஸ் சாமுவேல், ஜெபசிங், பிரதீப், பிரபு, ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், சேர்மபாண்டி, சக்திவேல், செந்தில்குமார், மாநகர அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
    • உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடையாள அட்டை

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.

    2022-2023-ம் நிதி யாண்டில் 110 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 27 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 885 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்கப்பட்டு ள்ளது.

    உதவித்தொகை

    முதல்-அமைச்சர், 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதம் கடும் உடல் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவ ட்டத்தில் 6,554 மாற்றுத்திறனா ளிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.15 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள்

    2022-2023-ம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1,000 வீதமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும் மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம் வீதமும், இளங்கலை பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம் வீதமும் மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.7 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் வழங்கப்ப ட்டுள்ளது.

    நிதியுதவி

    2022-2023-ம் நிதியாண்டில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 176 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரணம் நிதியுதவி ரூ.1 லட்சம் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவி ரூ.17 ஆயிரம் வீதம் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் நிதியாண்டில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்ப ட்டுள்ளது.

    பஸ் பயண அட்டை

    பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் மாவட்டம் முழுவதும் கட்டண மில்லாமல் பயணிக்க இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், தேசிய அடையாள அட்டை நகலுடன் கட்டண சலு கையில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்ல போக்குவரத்துத் துறையில் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
    • முருகேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 45) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், அவரது இருசக்கிர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது இந்திரா நகரை சேர்ந்த லில்லி (32)ரங்கநாதபுரம் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 650 கிராம் கஞ்சா, ரூ.8,630-ஐ பறிமுதல் செய்தனர்.

    • கோகுல்ராஜை அந்த வழியாக அந்த வாலிபர்கள் வழிமறித்து பணம் கேட்டு கத்தியால் குத்த முயன்றனர்.
    • ஜான்சன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பெறமுத்துவிளையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது33) கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு வேலை முடிந்து கிருஷ்ணராஜபுரம் அருகே வரும்போது அந்த வழியாக அந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியால் குத்த முயன்றனர். சுதாகரித்து கொண்ட அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

    ரவுடி கைது

    இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திரேஸ்புரம் அண்ணா காலனியை சேர்ந்த ஜான்சன் (என்ற) சுறா ஜான்சன் (27) மற்றும் ஆனந்த் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ஜான்சன் மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜான்சனை கைது செய்த போலீசார், ஆனந்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • சின்னத்துரை தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • டேனியல்ராஜ்,ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நடராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது53). தூத்துக்குடியில் சமையல் தொழி லாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது பேத்தியை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு, அருகில் இருந்த ராஜாஜி பூங்காவில் சின்னத்துரையும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். உடனடியாக சின்னத் துரை தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.இதில் திரேஸ்புரத்தை சேர்ந்த டேனியல்ராஜ் (22), டேவிஸ் புரத்தை சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டேனியல் ராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேனியல்ராஜ் மீது தருவைகுளம், தாளமுத்துநகர், வட பாகம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    • கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங் களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி, பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப் பாளர் அருண்குமார், கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
    • ஏ.டி.எம். மையங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிநகர் சந்திர மஹாலில் நடைபெற்றது, மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:-

    கண்காணிப்பு காமிராக்கள்

    ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண் காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட வேண்டும்,முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும்.

    மேலும் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப் படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.கொள்ளை யர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்த வேண்டும். அனைத்து வங்கி ஏ.எடி.எம். மையங்களிலும் பாதுகா வலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் (பொறுப்பு)சம்பத் தலைமையிலான காவல் துறையினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்ெபக்டர் ராஜாராம், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×