search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • சண்முகம் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதனை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
    • நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பா.ஜ.க. பொருளாதார பிரிவை சேர்ந்த கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதனை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

    நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கே.ஜே. பிரபாகர், பில்லா விக்னேஷ், ஏரல் பேரூராட்சி செயலாளர் அசோக் குமார், போக்குவரத்து பிரிவு மண்டல இணைச்செயலாளர் லட்சுமணன், ரத்தின சபாபதி, வட்ட செயலாளர் பூர்ண சந்திரன், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்.

    • ராமகிருஷ்ணன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாதபோது ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-எட்டையபுரம் ரோடு,கே.டி.சி.நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது37).இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகாமல் இருந்து வந்ததால் விரக்தியில் இருந்து வந்த ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை கம்பெனி நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டது. இதனால் கூடுதல் விரக்தி அடைந்து காணப்பட்ட ராமகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு அவரது தாய் நாகலட்சுமி வீடு திரும்பியுள்ளார். வீடு பூட்டி கிடந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையில் தூக்கு போட்ட நிலையில் ராமகிருஷ்ணன் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மகளிர் தின விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா பள்ளியில் மாநகர தி.மு.க. மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பேச்சு போட்டி, கேள்வி- பதில், அறிவுத்திறன் போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கள் வழங்கி பேசியதாவது:-

    கல்வி வேலைவாய்ப்பு களில் 30 சதவீதம் ஒதுக்கீடு, 8 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி, இப்போது பிளஸ்-2 வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

    இதனால் 2 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப் புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக் குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

    வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும். அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி, மதம், ஏழை- பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லா மல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சி ராணி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ம.தி.மு.க. கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • ஏழை, எளியோருக்கு நன்மைகளை செய்ததால் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்று சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர 6,7- வது வார்டு பொதுமக்கள் மற்றும் என்.எம்.சி. கபடி குழு சார்பில் கபடி போட்டி, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பிள்ளைவிளையில் நடைபெற்றது

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    எம்.ஜி.ஆர் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகளை செய்ததின் மூலம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அவர் வழியில் கட்சியை தலைமையேற்று ராணுவ கட்டுபாட்டுடன் வழிநடத்தி முதல்-அமைச்ச ராக பணியாற்றி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக வழங்கியவர் ஜெயலலிதா. அவரை தொடர்ந்து 3-வது தலை முறையாக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்கிறார். ஜெய லலிதாவின் கொள்கை களை தாங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். எதிர்வரும் காலங்களில் அ.தி.மு.க.விற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் ெதாகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் (பொறுப்பு), வட்ட செயலா ளர்கள் ராஜா, துரைசிங், அரசு போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கவுதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஏற்பாடுகளை வட்ட செயலாளர் அம்பைமுருகன், முன்னாள் வட்ட செயலாளர் பாக்கியராஜ், இளைஞர் பாசறை செயலாளர் கோவில்பிள்ளை விளை தெய்வகுமார், வேல்முருகன், பாலமுருகன், வட்ட பிரதிநிதி பிரகாஷ் ராஜ் மற்றும் ஆரோக்கியராஜ், அசோக் ஆகியோர் செய்திருந்தனர்

    • செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
    • 6 பேர் கொண்ட கும்பல், பாலாஜியை தாக்கி மோதிரம், பணத்தை பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. (வயது28). எலக்ட்ரீசியன். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் தங்கள் வீட்டில் எலெக்ட்ரிக் வேலை இருப்பதாக முகவரி கூறி அழைத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பாலாஜி முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த வாட்ச், மோதிரம், ரூ. 12 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர்.

    மேலும் கூகுல்பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 45 ஆயிரத்தையும் எடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்த் தெர்மல் அனல் மின் நிலையத்தில் கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
    • நீண்ட நேரமாகியும் பிரசாந்த் திரும்பி வரததால் சக ஊழியர்கள் அவரை தேடி சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் கோவில்பிள்ளை நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 33). இவர் தெர்மல் அனல் மின் நிலையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் ஒப்பந்த ஊழியராக கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு இரவு பணியில் இருக்கும்போது பிரசாந்த் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரததால் அவரை தேடி சக ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி யுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் பிரசாந்த் உடலை மீட்டனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு-பொறுப்பு) த.ச.சஜின் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்று வரும் சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    இதில் அந்த கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்களும், தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தூத்துக்குடி, டான்ஜெட்கோ செயற்பொறியாளர், பெல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
    • பாஸ்கர் என்பவரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகே இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாதுரைச் சாமிபுரத்தை சேர்ந்த தினேஷ் (29), குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூட்டாம்புளியை சேர்ந்த நாமோ நாராயணன், கோரம்பள்ளத்தை சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கு மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர்

    தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அரசுதிட்டங்களில் செயலாக்கம் குறித்தும், பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் நடைபெறும் ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்ப புரத்தில் நாளை மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியான ஜின் பேக்டரி ரோடு, சிவந்தாகுளம், தெற்கு புதுத்தெரு ஆகிய 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

    இத்திட்டத்தில் 3 மாநகராட்சி பள்ளி களில் மொத்தம் 905 பள்ளி குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார், துணை ஆணையர் குமார், பொறுப்பு செயற்பொறியாளர் சரவணன், ஸ்மார்ட் திட்ட பொறியாளர் சந்திரமோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார், கவுன்சிலர்கள் பொன்னப்பன், மும்தாஜ், பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜீவன் ஜேக்கப் மணி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, தலைமை ஆசிரியர்கள் பீரிடா, தங்கமணி, எமல்டா வெலன்சியா ஹெசியா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சிக்கு சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி திராவிட நட்புகழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நிறைவரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார். பாபு, எட்வின், மாறன், முத்தையா, குமரன், இளங்கோவன், கருப்பையா, மணிவண்ணன், ஜெகநாதன், கணேசன், சரவணன், ஆனந்த், விஷ்னு, செல்லப்பா, மாரியப்பன், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிட நட்புக்கழக தென்மண்டல அமைப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வருவதில்லை. எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்பதும் இல்லை. நாம் மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்று பல மசோதாக்களை அறிமு கப்படுத்தும் போது அது சம்பந்தமாக பேசுவதற்குள் தீர்மானத்தை நிறைவேற்றி முடித்து விடுகின்றனர்.

    முத்தலாக் சட்டம் கொண்டு வந்து இஸ்ஸாமியர் உரிமையை பறிக்கின்றனர். இப்படி கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அவர்களது உரிமைகளையும் பல வகையில் பறித்து, தான் சொல்லுவதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    பா.ஜனதா எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கின்றனர். நாம் ஏதாவது கேள்வியை கேட்டால் வேறு பதில்களை கூறி திசைதிருப்புகின்றனர். இந்த நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

    இதே ஆட்சி மறுபடியும் திரும்பி வந்தால் நம்முடைய எதிர்காலம் சமூகநீதி, மதநல்லிணக்கம் பறி போகிவிடும். தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். அதை மீண்டும் மீண்டும் உறக்க சொல்ல வேண்டும். வரும் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் நமக்கு முக்கியம்.

    மற்ற மாநிலங்களில் இல்லாத பல பண்பாடுகள், வளர்ச்சிகள் என அனைத்திலும் முன்னேற்றமடைந்த தமிழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்முடைய பணிகள் அமைய வேண்டும்.

    இவ்வறு அவர் பேசினார்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், வடமாநிலங்களில் இன்று வரை பெண்கள் எல்லா இடத்திலும் சமமாக அமர்ந்து இருக்க முடியாத நிலை உள்ளது. அதே போல் ஜாதி வேறுபாடு உள்ளன.

    தமிழகத்தில் பெரியார் சொத்தில் சம உரிமை கொண்டுவந்து பல உரிமைகளை பெற்றுக்கொடுத்து உள்ளார். அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை தி.மு.க. கொடுத்துள்ளது. இதுபோன்று எல்லா துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் 10 ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கு தி.மு.க.வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர் என்றார்.

    மாநாட்டில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் உமா, சிங்கராயர், உமாபதி, செல்வராசு, ரவீசந்திரன், தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.

    மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ் சாமுவேல், மாநகர அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜெயசீலி, மரியகீதா, ரெக்ஸின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் சந்தானம் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.
    • விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்க தலைவர் பீட்டர் தலைமை தாங்கி சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா,தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ராஜம், தூத்துக்குடி 3-ம் மைல் வியாபாரி சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மேலாளர் கணேச பாண்டியன்,குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத் தலைவர் முப்பிலி யன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வியாபாரி சங்கத் தலைவர் முனியசாமி, வியாபாரிகள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளான தர்மராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழை எளியவருக்கு தையல் எந்திரம், மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்,பரத்,ராஜன் ஆகியோர் வழங்கிய கண்காணிப்பு காமி ராக்களை 3 முக்கிய சந்திப்புகளில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி பொருத்தி திறந்து வைத்தார்.

    நெல்லை- தூத்துக்குடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணி நிறைவு பெறும்போது கனரக வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்படும். எனவே பழைய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

    ×