search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில்உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சுடலை யாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் துறைமுகம் மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆயிரக்க ணக்கான லாரிகள் , பஸ்களும், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றது.

    ஆனால் அப்பகுதியில் முறையற்ற வாகன பயணம் மேற்கொள்ளப் படுவதாலும், மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேலும் மிகப்பெரிய கிடங்குகள் ஏற்பட்டு இருப்பதாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன ர்.

    இதில் குறிப்பாக சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கூலி தொழிலாளி கலைச்செல்வியின் வீடு தூத்துக்குடி அன்னை இந்திராநகரில் உள்ளது.
    • வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது40). கூலி தொழிலாளி. இவரது மகள் இலக்கியா. அப்பகுதியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    தீ விபத்து

    இவர்களுடன் கலைச்செல்வியின் தங்கை முத்துலெட்சுமி (39) என்பவரும் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். அப்போது கலைசெல்வி வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    மின்கசிவு

    இது தொடர்பாக சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதி குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
    • சாகுல்அமீது கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதியில் குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது(வயது 45).இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம்போல நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் சாகுல் அமீதுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராம்குமாரை முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
    • மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (42).

    இவரது அண்ணன் முருகேசன் (49) என்பவர் அதே தெருவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

    கணவன்-மனைவி கொலை

    நேற்று இரவு ராம்குமார் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

    பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும், ராம்குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராம்குமாரின் மனைவியும், தனது சகோதரியுமான மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தந்தை-மகனுக்கு வலைவீச்சு

    அதில் மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த சொத்து மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது மகன் மகேஷ் (20) ஆகியோர் ராம்குமார் மற்றும் மாரியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவான தந்தை-மகன் எங்கு உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். 

    • தூத்துக்குடி வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • ஜனவரி 31-ந் தேதிக்குள் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி புதிய பஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளில் 200 மீட்டர் மட்டுமே அமைக்க வேண்டியுள்ளது. அதனை பார்வையிட்ட மேயர் அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில், இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவு பெற்று இந்த சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதற்கு தீர்வு காணும் வகையில் அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேயரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.
    • விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் வரவேற்று பேசினார். விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது. பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் இயேசுபிரான் பிறந்ததை விளக்கும் வகையிலான நிலைக்காட்சியை மாணவ மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். ஆசிரியர் ஜான் சாமுவேல், எபநேசர், ஆறுமுகசாமி மற்றும் ஆசிரியைகள் சிறப்பு பாடல்கள் பாடினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முடிவில் ஆசிரியர் ஜேம்ஸ் இக்னேஷியஸ் நன்றி கூறினார்.

    • புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • தெற்கு மண்டல அலுவலகத்தில் அலுவலர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் பணிகள் குறித்தும், மழை நீர் தேங்கும் பகுதிகளில் புதிய வடிகால் வசதி, மற்றும் புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஆர்வமுடன் திரண்டு வந்து மேயரை வரவேற்ற பொதுமக்களிடம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகில் நீர் தேங்கும் பகுதி, ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பொது சுடுகாடு செல்லும் பாதை களில் வரும் நாட்களில் மழை நீர் தேங்காதவாறு வரும் நாட்களில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நேற்று முழுவதும் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக தெற்கு மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அப்போது சொத்துவரி, தண்ணீர் கட்டண வசூலை துரிதப்படுத்துமாறும், பிளான் அப்ரூவல் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் அதிகாரிகள், அலுவலர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முள்ளக்காடு ஊர் எதிரில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஊரணிகுளம் தற்போது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது குளத்தின் மேல்பரப்பு முழுவதும் பேவர்பிளாக் சாலை அமைத்து அதன் ஒரத்தில் கைப்பிடி கம்பிகள் வைத்து,பொதுமக்கள் ஒய்வெடுக்க ஏதுவாகவும், பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகள் பயன்படுத்த கழிப்பறைகள் அமைக்கவும், சுற்றிலும் மரங்கள் வைத்து, பென்சிங் அமைத்து பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஊரணி குளத்தினை சீரமைத்து இதுபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றி தரும் வகையில் மாநகர மேயர்ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அறிந்த மேயருக்கு முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனிய தங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேயருடன் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் முத்துவேல், விஜய குமார்,ராஜதுரை சுயம்பு, பட்சிராஜ், வெற்றிச்செல்வன் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி, உதவி செயற்பொறியாளர் குறள்செல்வி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது.
    • புஷ்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3 வது மைல், புதுக்குடி,

    டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர் , மில்லர்புரம் , ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தி நாதபுரம், சங்கர் காலனி, எப்.சி.ஏ. குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    அதேபோல் வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணா நகர் 2- வது மற்றும் 3 -வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர்,அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிறிஸ்துவின் பிறப்பை சிறப்பிக்கும் வேத பாடங்களை மாணவ, மாணவிகள் வாசித்தனர்.
    • ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் குடில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீதஆராதனை நடைபெற்றது

    இதில் இஸ்ரேல் ராஜசிங் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் நற்செய்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி அனைத்து துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கிறிஸ்துவின் பிறப்பை சிறப்பிக்கும் வேத பாடங்களையும் வாசித்தும், கிறிஸ்துவ கீதங்கள் பாடினர். மேலும் கல்லூரியில் பேரா சிரியர்கள், அலுவலர்களும் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களை பாடினர்.

    புத்தாண்டுக்கான வாக்குத்தத்த வசனங்களை இஸ்ரேல் ராஜசிங், பெர்சி பத்மாவதி ஆகியோர் அளித்து மாணவ, மாணவிகளை ஆசீர்வதித்தனர்.

    விழாவில் ஸ்டீபன் தலைமையில் கார்பர் ஹார்மோனீஸ் பாடகர் குழு வினர் கிறிஸ்துவ கீதங்களை இசைத்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உணர்த்தும் கிறிஸ்மஸ் குடிலும் கல்லூரியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருந்தது.

    ஆராத னையில் கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார், தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் , பிரியா பிரகாஷ் ராஜ்குமார், மற்றும் கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், ஐ.எம்.எஸ். ஊழியர் தாமஸ் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கல்லூரி சார்பில் ஏழை, எளியோருக்கு பரிசு பொருட்கள், இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.    

    • தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வனராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆத்தூர் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி சென்றார். மற்றொறுவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் அதில், அவர் ஆத்தூர் புல்லாவெளியை சேர்ந்த அய்யப்பன் (வயது21) என்பதும், தப்பி ஓடியவர் அதேபகுதியை சேர்ந்த அதிபன் (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் 2 செல்போன்கள், 64 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சாயர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூட்டாம்புளியை சேர்ந்த வனராஜ் (21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • அன்பழகன் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
    • கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்குஅமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சி யின் முன்னாள் பொதுச்செய லாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சரவணன், கவிதாதேவி, ஜேசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாப்பிள்ளையூரணியில் சிலோன் காலணி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அன்ப ழகன் படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
    • வங்கியின் உதவியை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ராயப்பன் விளக்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நற்பணி மன்ற பொருளாளா் தேவதிரவியம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ராயப்பன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது பனை தொழிலாளர்கள் வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் குளத்தூா் சுப்பிரமணியபுரம் அாிபாகரன், பனைவாாிய உறுப்பினா் எடிசன், ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ், தருவை குளம் பனை தொழிலாளர் பிச்சையா ஆகியோர் பனையின் வரலாறு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பேசினர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரேசன் கடையில் சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×