என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜவாஹிருல்லா"
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Jawahirullah
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.
தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
கோபி:
கோபியில் த.மு.மு.க. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் நாடாளுமன்ற மாண்புகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை.
அதேபோல் மனைவி புகார் அளித்தால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதினால் குடும்பங்கள் சீர் குலைந்து விடும். இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள்.
சிவில் சட்டத்தில் இருந்த திருமண பந்தத்தை கிரிமினல் சட்டத்தில் கொண்டு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது. உடனடியாக எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.
அதற்கு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடையும். அதற்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக அமையும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாததால் தமிழகத்தில் நடைபெறுவது பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சி என்பதை காட்டுகிறது.
இலங்கை போர் குற்றம் என தி.மு.க. மீது அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. வை குற்றம் சொல்ல அ.தி.மு.க. விற்கு எந்த அருகதையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #hraja #bjp
ராமநாதபுரம்:
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும, ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல் டீசலின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய பா.ஜனதா அரசு வேடிக்கை பார்த்து வருவது வேதனைக்குரியது. எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் நடை முறை கொண்டு வரப்பட்டதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, நமது நாட்டில் குறைக்காமல், அதன் முழுபயனை மக்களுக்குத் தராமலும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மத்திய பாரதீய ஜனதா அரசு.
தற்போது சர்வதேச பிரச்சினைகளால் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.
மத்திய அரசின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க கோரியும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்ப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்சு வேன் வழங்கும் நிகழ்ச்சி கல்ப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் உடனடியாக கைது செய்துள்ளனர்.
ஆனால் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? அவர் மைலாப்பூர் பகுதி கடைகளுக்கு துணிச்சலாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று வருவது போலீசுக்கு தெரியவில்லையா?.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்