search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 


    காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வென்றது.
    • இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் 8வது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் கியூபா அணியை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய பி அணி, 3-1 என வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் பேபியானோ கரானாவை வீழ்த்தினார். இதன்மூலம் குகேஷ் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரவுனக் சத்வானி, லீனியர் டொமிங்குவேசை வென்றார். 

    • நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
    • இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.

    இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.

    இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.

    • வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 27ம் தேதி தொடங்குகிறது.
    • சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும்.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

    சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

    • 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    • ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.

     பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
    • மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது.

    காங்கயம் :

    உரம் விலை உயர்வு, உரங்களின் மானியம் குறைந்துள்ளது ஆகியவற்றாலும் மத்திய அரசு அலட்சியத்தாலும் உணவுப்பொருள் உற்பத்தி குறையும் பேராபத்து உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    பயிர்களுக்குத் தழைச்சத்து கொடுக்கும் யூரியாவைத் தவிர அனைத்து உரங்கள் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.1000-க்கு விற்கப்பட்டு வந்தது. இது ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது. நுண்ணூட்டுச் சத்துக்களைக் கொடுக்கும் உரங்களும் விலை உயர்வில் இருந்து தப்பிவிடவில்லை.இன்று காம்ப்ளக்ஸ் உரம் எங்கும் கிடைப்பதில்லை. நிலத்திற்கு தலைச்சத்து கொடுக்கும் யூரியாவைக் கூடுதலாகப் போட்டால் நோய் பெருமளவில் தாக்கும். விளைச்சல் வெகுவாகக் குறையும். சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி எண்ணையே பூர்த்தி செய்து வருகிறது. பருப்பு நுகர்வில் இது 60 சதவீதமாக உள்ளது.

    இந்தச் சூழ்நிலையில் உரம் விலையைக் கூட்டினால் இறக்குமதி அதிகரிக்கும். நாட்டிற்கு அந்நிய செலவாணி இழப்புக்கூடும். உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்.இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது பேராபத்து.

    இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உரப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தியதே ஆகும். இலங்கையிடமிருந்து இந்திய அரசு இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாமல் போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். 1947-ல் இந்தியாவின் மக்கள் தொகை 27 கோடி. மக்கள் தொகைப் பெருக்கத்தை அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

    இன்று நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு உரம் விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.மேலும் உரங்களின் மீதான சரக்கு - சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும். படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவதே இந்தியாவை வல்லரசாக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
    • சுகாதாரப் பணி கட்டமைப்பு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை இருநாடுகளும் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து வர்த்தகத் துறையின் செயலாளர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் மத்திய உயர்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

    இதன்படி, மேல்நிலை பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய கல்வி சான்றிதழ்கள் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.

    மேலும் சுகாதாரப் பணி கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் பி ஆர் சுப்பிரமணியம், இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    ×