search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • திருச்சி விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சி விமான நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி :

    மத்திய அரசின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியினைஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான சுகந்திரதினவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில் விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதன் முக்கிய பங்காக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பானது இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.

    மேலும் விமானத்தில் பயணம் செய்ய தேங்காய், எண்ணெய் வகைகள், மிளகாய் தூள், மிளகாய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது தொடரும் எனவும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோப்பநாய் குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள புது ஆற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

    • மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடிகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • தனியார் கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களில் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை தேசியக்கொடி ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    3 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னா தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • விழுப்புரத்தில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
    • அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர்.

    விழுப்புரம், ஆக.5-

    விழுப்புரம் நகரின் மைய பகுதியில் வி.மருதூர் ஏரி உள்ளது. இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் உள்ளது. ஏரி ஆக்கிரமிக்கப்பட்ட தால் பாசனத்துக்கு வழியின்றி அனைத்து வாய்க்காலும் தூர்ந்து போய் காணப்பட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. எனவே மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வந்தது. வி.மருதூர் ஏரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆக்கிர மிப்பாளர்கள் வீடுகளை அகற்றவில்லை.

    இந்த நிலையில் இன்று வி.முருதூர் ஏரியில் உள்ள வீடுகள் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. அதன்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஏராளமான போலீசார் ஏரி பகுதிக்கு சென்ற னர். அப்போது அக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர். உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அனுமதிக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அங்கு பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கோர்ட்டு உத்தரவு படி ஆக்கிரமித்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில், டி.எஸ்.பி. பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெயசங்கர், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் :

    நன்னிலம் தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், எதிர்வரும் வட கிழக்கு பருவமழையால், பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் பத்மினி தலைமை தாங்கி னார். வருவாய் ஆய்வாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் வட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் உத்தமன் முதலுதவி முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்சியாளர் பரிமளா காந்தி, முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலிருந்து, தேர்வு செய்ய ப்பட்ட முதல் நிலை பொறு ப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    • குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம்- 2014 -ன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துப வா்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
    • விடுதிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே 24 மணிநேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்து பவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடை பெற்றது. இதில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:-

    தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம்- 2014 -ன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துப வா்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

    இல்லம் அல்லது விடுதியின் உரிமையாளா் தங்கள் இல்லத்தில் உள்ள பணியாளா்களின் கல்வித் தகுதி, விடுதியை நடத்தும் சங்கம் அல்லது அறக்கட்டளையின் பதிவுச் சான்றிதழ், புதுப்பித்தல் சான்றிதழ், சங்க விதி முறைகள், நிா்வாகக் குழுவினரின் விவரங்கள், கட்டடத்தின் வரைபடம், கட்டடத்தின் உறுதிச் சான்றி தழ், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட கட்டடத்தின் உரிமம், தீயணைப்புத் துறையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வசிப்பிட தகுதிச் சான்றிதழ், உணவுப் பாதுகாப்பு சான்றிதழ், வருடாந்திர அறிக்கைகள், விடுதியில் தினசரி வழங்கும் உணவுப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட கலெக்டருக்கு படிவம் 4-ல் மனு செய்தல் வேண்டும். தாங்கள் நடத்தும் விடுதி அல்லது இல்லங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். விடுதிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே 24 மணிநேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    55 வயதுக்கு மேற்பட்ட ராணுவத்தினா், ஓய்வு பெற்ற போலீசாரை பாதுகாவலராக நியமிக்கலாம். பெண்கள் விடுதியில் பெண்கள் மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க் வேண்டும். பாா்வையாளா் பதிவேடு, விடுதியின் மேலாளா் விவரங்கள், குழந்தை அல்லது பெண்களின் பெற்றோா் விவரங்கள், பாதுகாவலா் விவரம் மற்றும் அவருக்கான அடையாள அட்டை விவரங்க ளை வைத்திருக்க வேண்டும். உரிமம் தவறிய விடுதி உரிமை யாளருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 50,000 அபரா தம் விதிக்கப்படும். சட்டத்தி ற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.

    அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.

    • குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு மாணவிகளுக்கான பாதுகாப்பு, உரிமைகள் குறித்து பேசினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யாகுரு குலம் பெண்கள்மேல்நிலை ப்பள்ளியில் குழந்தை களுக்கான சட்ட பாதுகா ப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமை கள் குறித்தான கலந்து ரையாடல் நிகழ்ச்சி குருகுலம் நிர்வாக அறங்கா வலர் கயிலை மணி வேதர த்தனம் தலைமையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் சரண்யா ஜெயக்கு மார், வேதாரண்யம் நீதிம ன்ற நீதிபதி (பொ) தீப்கா, வக்கீல் பாரிபாலன், துணை தாசில்தார் ராஜா உட்பட பலர் மாணவிகளுக்கான சட்ட பாதுகாப்பு, உரிமைகள், குறித்து பேசினர்.

    • முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • கப்பலில் உள்ள நிலக்கரியை, அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, காலன் குடி யிருப்பு கிராம பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியர் நிலங்கள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    3 கட்டங்களாக அனல்மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த இரு கட்டங்களில் 660 மெகா வாட் கொண்ட அனல்மின்நிலையங்கள் அமைக்கபடவுள்ளது. மேலும் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பணி யாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு பகலாகநடந்து வருகிறது.

    அருகில் உள்ள தருவை குளத்து தண்ணீர்அனல்மின் நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குபகுதியையொட்டி கல்லா மொழி கடற்கரை பகுதியிலிருந்து பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50கோடிடன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான துறை முகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, கப்பலில் உள்ள நிலக்கரியை, உயர்மட்ட ராட்சச பாலம் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.

    கப்பலில் கொண்டு வரப்படும் நிலக் கரியைராட்சத கன்வெயர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாககொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென்மண்ட லத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன், நவீனமாடலில் கூடுதல் சக்தி கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியில் உருவாக்கப்படுகிறது.

    கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடி கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் பணி முடிந்தவுடன் முதலில் முதல் மின் அலகு மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

    • கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களில் கிராம விழிப்புணர்வு கூட்டங்கள்

    கன்னியாகுமரி:

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீசாரும் இணைந்து "சாகர்கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்த கடலோரபாதுகாப்பு ஒத்திகையை தமிழக கடலோர பாதுகாப்பு குழும ராமநாதபுரம் மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார். அதன்பிறகு கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.அதன்பின்னர்அவர்அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ராமநாதபுரம்மண்டலத்தில் 53 கடலோர பாதுகாப்பு குழும சோதனைச் சாவடிகள் உள்ளன.

    22 கடலோர காவல் நிலையங்களும்செயல்பட்டுவரகின்றன.16 அதிநவீனபடகுகளும்நீரிலும்நிலத்திலும் ஓடக்கூடிய15படகுகளும்பாதுகாப்புபணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்தப்படகுகள் இல்லாத பகுதிகளில் மீனவர்களின் மீன்பிடி படகு களை வாடகைக்கு எடுத்து ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.

    கன்னியாகுமரி யில் கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக 4 அதி நவீன படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடல் வழியாக தீவிர வாதிகள் ஊடுருவலை கண்காணத்து வருவதோடுமட்டுமின்றி ஆபத்துக் காலங்களில் மீனவர்களுக்கு உதவியும் செய்து வருகிறோம். தெற்கு மண்டலத்தில் 350 முதல் 400 காவலர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு உதவும் வகையில் குமரி மாவட் டத்தில் 48 கடற்கரை கிராமங்களில்கிராம விழிப்பு ணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு உதவுவதோடுசந்தேகப்படும் வகையில் யாரேனும் கடற்பகுதிகளில் ஊடுரு வினால் அரசுக்கு தகவல் தரும் வகையில் அவர்களை பயிற்சி அளித்து வருகிறோம்.

    தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவு வதற்கான எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. சுற்றுலா தலமாக விளங்கும் கடலோரப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்ப டுத்தும் வகையில் கடலோர பாதுகாப்புகுழுமபோலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடற்கரை பகுதிகளை சுகாதாரமாக பேண வலியுறுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் மற்றும் நம்பியால் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பல்லடம் தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறியதாவது: -

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பேலட் யூனிட் 3,280, கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. பழுது பார்த்து அவைகளை சரிசெய்ய பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.மற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீவிரவாதிகள் போல படகில் வந்த 4 பேரை மடக்கி போலீசார் விசாரணை
    • கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு

    கன்னியாகுமரி:

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீசாரும் இணைந்து"சாகர்கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.

    2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று மாலை வரை நடக்கிறது. 2-வது நாள் காலையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதி நவீன ரோந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் நவீன் நேற்று மாலை 6 மணிக்கு கூடங்குளம் கடல் பகுதியில் போலீசாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு படகில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்து கொண்டிருந்தனர். மாறுவேடத்தில் இருந்த அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் யார்? என்பது தெரியவந்தது.

    அதில் 2 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் என்பதும், ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சுங்க இலாகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    கடல் வழியாக படகில் ஊடுருவியவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்

    ×