search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை"

    • சாலையோரம் “டிப் டாப்” உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி “லிப்ட்” கேட்டார்.
    • காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார்.

    சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால் (18).பெங்களூரில் தங்கி விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் சென்னை வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஷால் தனது காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கே.கே நகர் 80-அடி சாலையில் வந்தபோது சாலையோரம் "டிப் டாப்" உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி "லிப்ட்" கேட்டார்.

    இதையடுத்து காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார். கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் திடீரென விஷால் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்த திருநங்கை காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    • ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
    • சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 26 வயது திருநங்கை. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகதாம்பா சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்தார். பின்னர் வீடு திரும்ப ஒரு ஆட்டோவில் ஏறினார்.

    அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 வாலிபர்கள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் திருநங்கையின் மீது கை வைத்து தொடங்கினர்.

    தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனை தடுத்த திருநங்கையை அடித்து துன்புறுத்தினர். அதனால் திருநங்கை அழுது கூச்சலிட்டார்.

    பயத்தில் அவர்கள் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்து திருநங்கை இறங்கி தப்பி ஓடினார்.

    இதுகுறித்து திருநங்கை அங்குள்ள திஷா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதன் மூலம் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாசுபள்ளி சீனிவாசு (வயது 33), ஹனிஷ்குமார்(26), சதீஷ்குமார் (30), மனோஜ் குமார் ( 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.

    ஆனால் இந்த சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    தயவு செய்து திருநங்கைகள் இதை சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி அவர்கள் சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

    இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வேமுலவாடா கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரும் சாமி சன்னதியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீநிவாஸ் பிங்கி கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    ஆட்டோ டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர்.
    • திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

    சென்னை:

    மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ் சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வானகரத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரே நாளில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள். எனவே இந்த பகுதியில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற் கொண்டனர். அதன்படி போக்குவரத்து போலீசார் தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக் கொண்டு வானகரத்தில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான பகுதிக்கு வந்தனர். விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர். திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர்கள் சாலையில் உடைத்த பூசணிக்காயை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். விபத்து நடக்கக்கூடாது என்பதற்காக சாலைக்கு திருஷ்டி சுற்றியவர்கள், சாலையில் கிடக்கும் பூசணிக்காயால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுமே என்பதை பற்றி கூட கவலைப்படாமல் உடைத்து போட்ட பூசணிக்காயை அகற்றாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

    • மோகன்ராஜ் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.
    • திருநங்கை ஒருவர் மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26). இவர் கடலூர் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருநங்கை ஒருவர் திடீரென்று மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் திருநங்கை பிடிப்பதற்கு முயன்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகன்ராஜிடம் நகையை பறித்தது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தைச் சேர்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, 2 பவுன் நகையை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • பத்மலட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வக்கீல் என்ற சிறப்பை பெற்றார்.
    • பத்மலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்மலட்சுமி என்ற திருநங்கை, சட்டம் படித்து கேரள பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

    இதன்மூலம் பத்மலட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வக்கீல் என்ற சிறப்பை பெற்றார். இதற்காக பத்மலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

    இந்த நிலையில் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முன்னியூர் கோவில் திருவிழாவில் நடந்த சாமி ஊர்வலத்தில் பத்மலட்சுமியின் உருவ படம் பொறித்த பதாகைகளை பக்தர்கள் ஏந்தி சென்றனர். அதில் தடைகளை தாண்டி, எதிர்ப்புகளை சமாளித்து, இழிவாக பேசியவர்களை புறந்தள்ளி வெற்றிக்கோட்டை தொட்ட உங்களை பாராட்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    திருநங்கை வக்கீல் பத்மலட்சுமியின் உருவ படத்துடன் சென்ற கோவில் ஊர்வல காட்சிகளை திருநங்கைகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் ஆர்வலர் ஷீத்தல் ஷியாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பாராட்டி சமூக ஆர்வலர்களும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    • அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.

    இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

    இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

    பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

    அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    • பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாக அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.
    • தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    சென்னை :

    சென்னை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும் ரெயில்வேயின் உதவி மையத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் நின்றபோது ரெயில் பயணியிடம் அடையாளம் தெரியாத 2 திருநங்கைகள் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை ரெயில்வே போலீஸ் எஸ்.பி.பொன்ராமு நேற்று நேரில் அழைத்து பேசினார். அப்போது சங்க உறுப்பினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார். தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    • திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, துன்புறுத்துவது அவர்களுக்கு மன நிதியாக ரீதியாக தொல்லை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குண்டூரில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் இதற்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தொடர்பு கொண்டு கூறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருநங்கைகள் பாதுகாப்பு சட்டபடி இந்த உதவி மையம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் என்பதாலும், கட்டணம் ஏதும் இல்லை என்பதாலும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    திருநங்கைகளுக்கும் சுயமரியாதை உள்ளது. அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த எண் திருநங்கைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று சரிதா தெரிவித்தார்.

    • 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
    • கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து நேற்று திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருநங்கை என்பது தெரியவந்தது.

    அந்த திருநங்கை எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக காந்திபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். உங்களுடன் வசித்த திருநங்கைகளில் யாராவது மாயமாகி இருக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த திரு நங்கை செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய ப்படுகிறது.

    • திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.

    மதுரை

    திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், மாடுகளை விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கு மாடுகளை விற்பனை செய்துவிட்டு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி புறப்பட்டார்.

    5 ரோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை அந்த வாலிபர் பார்த்தார். வாலிபரை கண்டதும், திருநங்கைகள் பேச்சு கொடுத்தனர். அப்போது திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார். அவரை திருநங்கைகள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அதன் பிறகு சில மணி நேரம் கழித்து அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தந்தையிடம் பணத்தை கொடுத்தார். அதனை எண்ணி பார்த்த போது ரூ.1 லட்சம் மட்டும் இருந்தது. ரூ.65 ஆயிரத்தை காணவில்லை. இதைக்கண்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சேலம் விரைந்து வந்தார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு நின்ற திருநங்கைகளை அந்த வாலிபர் அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்தான், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார். அவருடன் நாங்கள் நீண்ட நேரம் செலவிட்டோம். அதற்காகத்தான் அவர் ரூ.65 ஆயிரத்தை கொடுத்தார் என்றனர்.

    உடனே போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.65 ஆயிரத்தை வாங்கி அந்த வாலிபரிடம் ஒப்படைத்தனர். அப்போது திருநங்கைகளிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர்.

    மேலும் வாலிபரிடம், இவ்வளவு பணத்தை கொண்டு போகிறோமே என்ற அச்சம் கூட இல்லாமல் திருநங்கைகளை கண்டு சபலபட்டு இருக்கிறீர்களே என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×