search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை"

    • வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

    இதில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த 114 திருநங்கைகள் மற்றும் 3 திருநம்பிகள் மற்றும் 5 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அவருக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துறை இயக்குனர் அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம் வடவத்தூர் எல்லை கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் நேற்று திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகார் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையின் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் பிணமாக கிடந்த திருநங்கை சேந்தமங்கலத்தை அடுத்த பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜூ மகன் ஸ்ரினிகா(வயது 26) என்பது தெரிய வந்தது. அவரது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    அவர் இறப்பதற்கு முன்பாக யாருடனும் செல்போனில் பேசினாரா? அவர் யாருடனாவது வாக னத்தில் சென்றாரா? அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு காமிராக்க ளில் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.எருமபட்டி அருகே

    திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு 

    • கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார்.
    • எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    கன்னியாகுமரி:

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கணை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். 

    • பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
    • ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.

    இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
    • மாயமான திருநம்பியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி என்கிற அம்மு (35). திருநங்கையான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புட்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சகோதரன் அமைப்பு மூலம் திருநம்பியாக மாறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா என்கிற செய்யது செரீப் (21) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முவின் வீட்டுக்கு சிலர் வந்து செய்யது செரீப்பை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் அம்மு புகார் செய்தார். அதில் மாயமான திருநம்பி செய்யது செரீப்பை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேலூர் அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற பூமிகா (வயது27). திருநங்கையான சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது பூமிகா அங்குள்ள தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பூமிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார்.
    • 8 மாத கர்ப்பத்தில் இருக்கும் சஹாத் ஜோடி இப்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் போட்டோஷூட் இப்போது டிரெண்டாகி வருகிறது.

    கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

    தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை உணர்ந்த இந்த தம்பதி, முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்கவே முயன்றுள்ளனர். இருப்பினும், இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்ததால் சட்ட ரீதியாக அவர்களுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

    அதன் பின்னரே அவர்களுக்கு இந்த ஐடியா வந்துள்ளது. சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இருப்பினும், இப்படி செய்தால் ஊர் என்ன பேசும் என்று நினைத்து சஹத் இந்த ஐடியாவுக்கு முதலில் சற்று தயக்கமே காட்டியுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே பெண்ணாக இருந்து ஆணாக மாறியதில் இதில் பல சிக்கல்களும் இருந்தன. இருப்பினும், ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர். மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சஹத்திற்கு வேறு எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவருக்கு முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு வேறு எந்தவொரு உடல்நிலை பிரச்சினையும் இல்லை என்பது உறுதியான பிறகு இதற்கு தேவையான சிகிச்சை தொடங்கப்பட்டது. ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி பிரசவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே 8 மாத கர்ப்பத்தில் இருக்கும் சஹத் ஜோடி இப்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தன்னால் குழந்தை பெற முடியாது என்பதால் சஹத் குழந்தை பெறுவதாகவும் கூறுகிறார் ஜியா. குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தரவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின ஜோடியான இவர்களில், ஜியா ஒரு நடனக் கலைஞர் ஆவார். சஹத் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

    • ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
    • தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-

    தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

    நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம்.
    • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். கடந்த முறை எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் எங்களது காளைகள் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வலைதளம் மூலமாக நாங்கள் பதிவு செய்தோம். அதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.

    அந்த குளறுபடிகளை நீக்கி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகளும் பங்கு பெறுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகள் பங்கு பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திருநங்கைகள் தாங்கள் வளர்த்து வரும் காளைகளும் போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மேலூர் ஒன்றிய செயலாளர் கருப்பணன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தில் மேலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறைகளை மீறி ஆள் மாறாட்டம் செய்த வேறு ஒரு நபருக்கு முதலாவது பரிசு அறிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதி, அலங்காநல்லூர் விழாக்குழு முடிவு எடுத்து எனக்கு பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை.

    எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு சேரவேண்டிய முதல் பரிசை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.
    • வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடியில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    புதுப்பிக்கப்பட்ட இச்சந்தையைத் கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

    ஆனால், பொது ஏலத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகளுக்கு சாவி வழங்கப்படாமல் இருந்தது.

    இதனிடையே, இச்சந்தையில் ஏற்கெனவே கடை நடத்தியவா்கள், தங்களுக்கும் கடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக பழைய வியாபாரிகளிடம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொது ஏலத்தில் கடைகள் எடுத்த புதிய மற்றும் பழைய வியாபாரிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வியாபாரிகளிடம் மேயா் சண். ராமநாதன் சாவியை ஒப்படைத்தாா்.

    அப்போது, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உடனிருந்தாா்.பின்னா், மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொது ஏலத்தில் கடைகள் வியாபாரிகளுக்கும், இரு கடைகள் எடுத்த திருங்கைகளுக்கும் சாவி வழங்கப்பட்டது.

    சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.இச்சந்தையின் கடைகள் வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    • 2 பேரும் தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
    • நண்பர்கள் உதவியுடன் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

    பாலக்காடு :

    திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நீலம் கிருஷ்ணனா(வயது 31). இவர் பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆத்மிகா(25). இவர் ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்.

    இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று பாலக்காடு அருகே காலாங்குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதியும் பெற்று இருந்தனர். ஆனால் திடீரென நேற்று முன்தினம் அனுமதி இ்ல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனினும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்த அவர்கள், தங்களது நண்பர்கள் உதவியுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்தனர். தொடர்ந்து அந்த மண்டபத்தில் அவர்களுக்கு நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. கடைசி நேரத்தில் கோவிலில் திருமணம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

    • மதுரை தெப்பக்குளத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக இறந்து கிடந்தார்.
    • இது தொடர்பாக தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    மேலும் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரி கே.ஆர்.சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதன்பிறகு தெப்பக்குளத்தில் கிடந்த பிணம் மீட்கப்பட்டது. அப்போதுதான் அது பெண் அல்ல, திருநங்கை என்பது தெரிய வந்தது.

    அவர் சிமெண்ட் கலர் டாப், ரோஜாப்பூ கலர் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இது தொடர்பாக தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×