search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தகவல்.
    • 10ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது.

    பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

    இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மேலும், 10ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • இஸ்ரோ ராக்கெட் ஏவும்போது அதுகுறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்தார்.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker திருமதி. வளர்மதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்."

    "மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு. இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • நிலவின் புகைப்படங்களையும் அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது
    • இந்த நடவடிக்கை நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகள் எடுக்க பயன்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14-ம் தேதி நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து, நிலவை அடைந்து, தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    அவை பூமிக்கு அனுப்பும் நிலவின் புகைப்படங்களையும் அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து தற்போது இஸ்ரோ அறிவித்திருப்பதாவது:

    விக்ரம் லேண்டர், திட்டமிட்ட குறிக்கோளை தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளையிட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரைப்பரப்பிலிருந்து 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது. எதிர்காலத்தில், நிலவின் மேற்பரப்பில் இருந்து 'மாதிரிகள்' எடுப்பதற்கும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கவும், வெற்றிகரமாக லேண்டர் உயரே எழும்பிய இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக பயன்படும். அனைத்து சாதனங்களின் இயக்கங்களும் அதனதன் கட்டுப்பாடுகளுக்குள் ஆரோக்கியமான நிலையில் செயல்படுகின்றன. ரேம்ப், (Ramp) சேஸ்ட் (ChaSTE) மற்றும் இல்ஸா (ILSA) ஆகியவை முதலில் செயலாக்கப்பட்டு, அதில் வெற்றி கண்ட பின்னர், மீண்டும் மடக்கப்பட்டு, பிறகு மீண்டும் மறுசெயலாக்கத்திற்கு வெற்றிகரமாக உட்படுத்தப்பட்டது.

    இவ்வாறு இஸ்ரோ தனது தற்போதைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    ஒரு விண்கலன் நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைவது, இதுவரையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லரசுகள் உட்பட எந்த நாடும் செய்யாததால், உலகிலேயே பெரும் சாதனையாக இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலன் முயற்சி கருதப்படுகிறது.

    • மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டு, அதுவும் வெற்றிகரமாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 'எக்ஸ்போசாட்' என்ற கண்காணிப்பு விண்கலனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    பூமியின் துணைக் கோளான நிலவின் நிலப்பரப்புத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சந்திரயான் 1, 2, 3 ஆகிய விண்கலன்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதன் வாயிலாக, நிலவில் தண்ணீா் இருப்பதாக ஏற்கனவே கண்டறிந்துள்ள சந்திரயான், தற்போது நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், சிலிகான், கால்ஷியம், இரும்பு போன்ற மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

    அதேபோல, செவ்வாய்க் கிரகத்தின் தன்மைகளை அறிந்துகொள்ள 'மங்கள்யான்' விண்கலம் செலுத்தப்பட்டு, அதுவும் வெற்றிகரமாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, சூரியனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு செலுத்தியுள்ளது. இதன் தொடா்ச்சியாக, வானியல் நிகழ்வுகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற கண்காணிப்பு விண்கலனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    எக்ஸ்போசாட் விண்கலத்தில் போலிக்ஸ் (எக்ஸ்ரே ஒளிக்கதிா் வழியாக செயல்படும் முனைவுமானி அல்லது எக்ஸ்ரே போலரிமீட்டா்), எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஒளிக்கதிா் நிறமாலைமானி, காலம் அறிதல்) ஆகிய இரண்டு அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணியில் ஈடுபட இருக்கும் 'எக்ஸ்போசாட்' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • புகைப்படம் ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.
    • சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

    சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை ஒரு சிறுவன் பரிசளித்துள்ளான்.

    இதுகுறித்த புகைப்படம் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. சந்திரயான்-3 பயணத்தின் போது சந்திரனுக்கு எடுத்து செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் மாதிரியை அந்த சிறுவன் மிக நுணுக்கமாக வடிவமைத்து சோம்நாத்திடம் வழங்கி உள்ளான். சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தி ஆழமான தாக்கத்துக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி இருக்கிறார்.
    • விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த நிகர் ஷாஜி இருக்கிறார். அவரை பாராட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சுலைமான் நபி பள்ளிவாசல் வாசலில் ஜமாத் சார்பில் பள்ளி பேஷிமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    பின்னர் விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு ஜமாத்தின் சார்பில் ஜமாத்தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். தொடர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி நிகார்ஷாஜி சகோதரர் சேக்சலீம், ஜமாத் தலைவர் செய்யதுபட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.
    • ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

    பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் நேற்று புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்சு புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி நேற்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.

    சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.

    இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.

    3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறது.பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.

    இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.

    பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி நேற்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    இந்நிலையில், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்சு புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது.
    • நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது என இஸ்ரோ அறிவித்தது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    இதற்கிடையே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ, செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

    • ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    • ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.

    இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இது மிகவும் துல்லியமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் 235 க்கு 19,500 கிமீ நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இங்கே மிகவும் தனித்துவமான பணி முறை, பிஎஸ்எல்வி-ன் மேல் நிலை முதல் முறையாக முதன்மை செயற்கைக்கோளை உட்செலுத்துவதற்கு இரண்டு எரிப்பு காட்சிகளை எடுக்கும். எனவே இன்று மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறைக்காக பிஎஸ்எல்வியை நான் வாழ்த்த விரும்புகிறேன்.

    இப்போதிலிருந்து, ஆதித்யா-எல்1 அதன் பயணத்தை மேற்கொள்ளும். சில புவி சூழ்ச்சிகளுக்குப் பிறகு, அது எல்1 புள்ளிக்கு அதன் பயணத்தைத் தொடங்கும். இது மிக நீண்ட பயணம். கிட்டத்தட்ட 125 நாட்கள். எனவே ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.

    ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ரோவர் லேண்டரில் இருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் நகர்ந்துவிட்டது, மேலும் அது (சந்திர) இரவைத் தாங்கும் என்பதால், வரும் ஓரிரு நாட்களில் இருவரையும் தூங்கச் செய்யும் பணியைத் தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
    • விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.

    இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.

    சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
    • நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் சென்றும், ரோவர் பயணத்தை தொடர்வதாக இஸ்ரோ தகவல்.

    இதற்கிடையே, நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் நிலவில் இருக்கும் ரோவரை உறங்க வைக்கும் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    ×