search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
    • மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன் என்று கூறினார்.

    சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

    முதல் கட்டமாக சந்திரயான் -3ன் ஏவப்பட்டதை மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் அவர் முழு தரவுகளையும் ஆராய்ந்து ராக்கெட் எவ்வளவு அழகாக இருந்தது.

    பொறியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற முறையில் எனக்கு ராக்கெட்டுகள் மீது பிரியம் உண்டு. ராக்கெட்டின் பிறப்பு, வளர்ச்சி, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, ராக்கெட்டை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன். வளர்ச்சி, அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் இயக்கவியல் மற்றும் அதன் வாழ்க்கைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது ஆகும்.

    கடந்த சந்திரயான் ராக்கெட்டில், கிட்டத்தட்ட 2,000 அளவீடுகள் இருந்தன. இறுதியாக அவை வரைபடங்கள் மற்றும் வளைவுகளாக நம்மிடம் வந்தன. ஒரு மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    அந்த வளைவுகளுடன் நாங்கள் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம். வரைபடங்கள், மற்றும் ஏற்ற தாழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அதன் வேகம் என்ன... எப்படிப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
    • கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக வடிவமைத்ததுடன் அதனை பல்வேறு பரிசோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

    லேண்டர் கலன் தரையிறங்கும்போது சம தளத்தில் இறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இம்முறை லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    அதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் வகையில் புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேண்டர் கலன் தரையிறங்கும் வேகத்தை கணக்கிடுவதற்கான லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டமிட்டதைவிட வேகமாக தரையில் இறங்குகிறது என்பதை அறியலாம். கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு என்ஜின் புழுதிகளை தணிப்பதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில எதிர் விளைவுகள் ஏற்படலாம் என கருதி தற்போது அந்த என்ஜின் நீக்கப்பட்டு நான்கு என்ஜின்களுடனேயே லேண்டர் செல்கிறது. லேண்டர் கலனில் உள்ள 7 வகை சென்சார்கள், கேமரா நுட்பங்கள் மூலம் மென்மையான தரையிறக்கத்துக்காக வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ள என்ஜின்களின் வேகக் கட்டுப்பாட்டு விதத்திலும் சில நுட்பமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இறுதி நிலை தரையிறக்க வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    • சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.
    • இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது.

    இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது.

    தீப்பிழம்பை கக்கியபடி சென்ற ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

    பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.

    புவியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதியில் புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் புதிய பயணத்தை தொடங்கும். அப்போது நிலவின் ஈர்ப்பு விசையின் துணையுடன் அந்த சுற்று வட்டப் பாதையில் விண்கலம் பயணிக்கும்.

    அதன்பின் நிலவின் சுற்றுப் பாதையை சுற்றி வந்து ஆகஸ்டு 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் நாட்களில் நிலவுக்கு செல்லும் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு வர சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

    நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டதும், ஆகஸ்டு மாத இறுதிக்குள் தரையிறங்கும் வரிசை பணி தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    • ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று ஏவியது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இதைதொடர்ந்து, இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:-

    இன்று, நம்மில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வானத்தைப் பெருமிதத்துடன் பார்க்கிறோம்.

    சந்திரயான்- 3 என்பது 1962ல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து விஞ்ஞான சமூகத்தின் பல சதாப்தங்களாக உழைப்புக்கு கிடைத்த பலனாகும். அதைத் தொடர்ந்து 1969ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது.

    சந்திரயானின் வெற்றி, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றும். உண்மையிலேயே நம்பமுடியாத சாதனை!

    இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
    • சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23, மாலை 5.47க்கு நிலவில் தரையிறக்க திட்டம்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இந்நிலையில், அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான் விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரூ.600 கோடி மதிப்பீட்டில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "சந்திரயான்- 3 ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தொழில்நுட்ப ரீதியாக சவாலான மென்மையான தரையிறக்க முயற்சிக்கும்" என்று கூறினார்.

    • இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக செலுத்தியது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில், சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. சந்திர பயணத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
    • சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று செலுத்தி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், எல்.வி.எம்.3- எம்4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் கூறினார்.

    • 40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    • விண்கலகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.

    சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
    • சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

    பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கு மனிதர்களை வாழ வைக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பிரபஞ்சத்தில் நீண்ட தொலைவில் உள்ள மற்ற கிரகங்களை ஆய்வு செய்ய மிக எளிதாக நிலவில் இருந்து விண்கலங்களை அனுப்ப முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே நிலவில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்து உள்ளன. இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங் கின. முதல் சந்திரயான் விண்கலம் செலுத்தப்பட்டபோது அது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதற்கான படங்கள் ஆதாரத்தையும் உலக நாடுகளுக்கு வழங்கி சந்திரயான் பிரமிக்க வைத்தது.

    நிலவில் மிக எளிதான பகுதிகளில்தான் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. நிலவின் தென் துருவத்தில்தான் அதிக கனிம வளங்களும், நீர்ச்சத்துக்களும் உள்ளன. எனவே அங்கு முதல் கட்ட ஆராய்ச்சியை முதல் நாடாக தொடங்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்திரயான்-3 விண்கலத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்தன. சில மணி நேரங்களில் இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கிரையோஜெனிக் எந்திரத்தில் அடுக்கடுக்காக திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது.

    இதையடுத்து இறுதி கட்ட ஆய்வுகள் நடந்தன. அதில் சந்திரயான்-3ல் உள்ள அனைத்து கருவிகளும் திருப்திகரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுபோல சந்திரயா-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் பாகங்களும் திட்டமிட்டபடி இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து இன்று பிற்பகல் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் தனது பயணத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. சந்திரயான்-3  விண்கலம் ஏவுதலை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.


    அமெரிக்கா, ரஷியா, சீனா அனுப்பிய விண்கலன்கள் சக்தி வாய்ந்தவை. எனவே அவை விரைவில் நிலவை சென்று அடைந்தன. ஆனால் சந்திரயான்-3 விண்கலத்தை 10 கட்டங்களாக நிலவுக்கு அருகே கொண்டு செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    எனவே சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அதன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூர் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.

    40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்தால் மட்டுமே நிலவில் அது தரை இறங்குவதில் சில மணி நேரம் மாறுபடலாம். எனவே திட்டமிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

    சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

    இந்த திட்டம் வெற்றி அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர்.
    • நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது.

    சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!

    விஞ்ஞானி வீர முத்துவேலுக்குக் கீழ் 29 துணை இயக்குநர்கள் உள்பட பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கல திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

    இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர். முதல் இரண்டு திட்டங்களைப் போலவே சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பணிபுரிந்துள்ளார். அவர்தான் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல்.

    இவரது தந்தை பழனிவேல் ரெயில்வே ஊழியராக இருந்தவர். இவரும் ரெயில்வே பள்ளியில் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால், விண்வெளியில் இருந்த ஈடுபாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்படிப்பை நிறைவு செய்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.

    நுணுக்கமான ஹார்டுவேர் பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்யக்கூடிய ஆர்வம் கொண்ட இவருக்கு, 1989-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு அமைந்தது. இஸ்ரோவில் சேர்ந்த பின்பு அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், இஸ்ரோவில் பணியாற்றுவதையே அவர் விரும்பினார்.

    2016-ம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரை தொடர்பான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. வீர முத்துவேல் தன் ஆய்வில் கையாண்டிருக்கும் தொழில்நுட்பம் நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கவும், விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்குவதற்கும் உதவக்கூடியது.

    30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல பொறுப்புகளில், வெவ்வேறு திட்டங்களிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்க வீர முத்துவேல் கடந்த 2019-ம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பாராட்டுகளைக் குவித்த அவரது ஆய்வுதான் இதற்கு காரணமாக இருந்தது. சந்திரயான் 2 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா பணியாற்றினார். அவருக்குப் பின் விஞ்ஞானி வீர முத்துவேல் அந்தப் பொறுப்பை ஏற்றார். இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்களுடன் இன்னும் பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

    நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கே பெருமை சேர்க்கும் இத்தகைய திட்டத்தில் தமிழர் ஒருவர் முக்கிய பங்காற்றி வருவது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த பெருமை.

    • சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம்.
    • சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன.

    சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுகிறது- சந்திரனின் மேற்பரப்பில் கால் தடம் பதிக்க தயாராகும் இந்தியா

    சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திராயான்-3 குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

    பணியில் பயன்படுத்தப்படும் லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-3 ராக்கெட்டின் தனித்தன்மைகள் என்ன?

    எல்.வி.எம்-3 இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 4 அல்லது 5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியான ககன்யானை எளிதாக்கும் வகையில் அதே ராக்கெட் மாற்றியமைக்கப்படும். இது எல்.வி.எம்-ன் 3-வது பணியாக இருக்கும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ராக்கெட் அடிப்படையில் அதே தான்.

    ககன்யான் பணிக்கு ஏற்றவாறு ராக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

    பணியாளர்களுக்கு இடமளிக்க ஒரு குழு தொகுதி மற்றும் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு வசதியை நாங்கள் சேர்த்துள்ளோம். மின்னணு அமைப்பு, மூட்டுகள் மற்றும் முத்திரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் ராக்கெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்ற மாற்றங்களைச் செய்தது. ககன்யான் ஏவுகணையை விஎஸ்எஸ்சி தயாரிக்கிறது. ககன்யான் தொகுதியை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு விஎஸ்எஸ்சி பொறுப்பாகும். பெங்களூருவில் விஎஸ்எஸ்சி இதற்கென பிரத்யேகமாக ஒரு மையம் உள்ளது. திட்டத்தின் 66 சதவீத பணிகள் விஎஸ்எஸ்சி-ல் செயல்படுத்தப்படுகிறது. பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு தொகுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

    2019-ல் சந்திரயான்-2 திட்டம் ஓரளவு தோல்வியடைந்தது. இதனால் சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்க முடியவில்லை. முந்தைய பணியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

    சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம். அதன்படி சந்திரயான் 3-ல் மாற்றங்களை செய்தோம். உந்துவிசை அமைப்பு, மென்பொருள் மற்றும் அல்காரிதம்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் புதிய சென்சார்களை சேர்ந்துள்ளோம். சோலார் பேனலின் பரப்பளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2-ல் இருந்து கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

    உந்துவிசை தொகுதிக்கு அடுத்ததாக லேண்டர் உள்ளது. இந்த லேண்டர் சந்திரயான் 2-ஐ விட 300 கிலோ கிராம் அதிக எடை கொண்டது. லேண்டரில் அதிக அவன செலுத்த உந்துவிசை தொகுதியின் எடையை விகிதாசாரமாக குறைத்தோம், மேலும் லேண்டரின் உந்துவிசை அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் மோதினாலும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் அதன் கால்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. லேண்டரின் தரையிறங்கும் வேகம் மற்றும் திசையை கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவறுகளை சரி செய்துவிட்டதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    சந்திரயான்-3 திட்டத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள சந்திர சூழலை செயற்கையாக உருவாக்கியுள்ளீர்கள். அவை என்னவாக இருந்தன?

    த்ரஸ்டரை இயக்காமல் ஹெலிகாப்டரில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டோம். சென்சார்கள் சரியாக வேலை செய்து தரவை அனுப்புகிறதா என்பதை நாங்கள் சோதித்தோம். பெங்களூருவில் செயற்கையான சூழல் உருவாக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் கிரேனில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டு, த்ரஸ்டர்களை இயக்கினோம். இது சென்சார்கள் மற்றும் பிற செயல்பாடுகளை சோதிக்க இருந்தது. கூடுதலாக, லேண்டர் மற்றும் மென்பொருள்-வன்பொருள் அம்சங்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை நாங்கள் சோதித்தோம்.

    நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும்?

    நிலவில் இறங்குவது ஒரு சிக்கலான செயல். ஒரு விமானி தனது விமானம் தரையிறங்குவதைக் கட்டுப்படுத்துவார். குழ்நிலைக்கு ஏற்ப லேண்டரை கட்டுப்படுத்த யாரும் இல்லை. சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன. பூமியின் இருக்கும்போது ஏதாவது நடந்தால் மனித தலையீடு என்பது சாத்தியமாகும்.

    விண்வெளியில் லேண்டர் அல்காரிதம்கள் மற்றும் மென்பொருளின் உதவியுடன் நிலைமையை எதிர்கொள்கிறது. உந்துவிசை தொகுதியிலிருந்து லேண்டர் பிரிக்கப்பட்டவுடன், 4 உந்துதல் தீக்காயங்கள் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்க அனுமதிக்க ஒரு எதிர்சக்தியை வழங்குகிறது. உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 இலோமீட்டர் தொலைவில் லேண்டரை வழங்கும். மேலும் அது 30 கிலோ மீட்டர் வரை குறைக்கப்பட்டு படிப்படியாக தரையிறங்கும். முழு செயல்முறையும் பல கட்டங்களைக் கொண்டுள்ளது.

    லேண்டரை தரையிறக்கும்போது நீங்கள் கவனம் செலுத்தும் பகுதிகள் என்ன?

    லேண்டர் சந்திர மேற்பரப்பில் ஒரு சந்திர நாளுக்கு இருக்க வேண்டும். இது 14 நாட்களுக்கு சமம். சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளி 14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். லேண்டர் முக்கியமாக சூரிய ஆற்றலைச் சார்ந்தது. மேலும் அது 14 நாட்களுக்கு மட்டுமே சூரிய சக்தியைப் பெறும். எனவே 14 நாட்களுக்குப் பிறகு போதுமான மின்சாரம் கிடைக்காது. லேண்டருக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளோம். லேண்டர் 1.4 டன் எடை கொண்டது. தூசி மற்றும் பாறைகள் சந்திரனின் மேற்பரப்பை 5 முதல் 10 மீட்டர் வரை மூடுகின்றன.

    லேண்டர் தரை இறங்கும்போது, தூசியை கிளப்பும். சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியின் விசையில் 1/6 ஆகும். இதனால் தூசி படியை அதிக நேரம் ஆகும். தூசி படியும் வரை காத்திருக்க வேண்டும். தூசி படிந்தவுடன் லேண்டரின் வளைவு திறக்கப்பட்டு ரோவர் உருளும். 25 கிலோ எடை உள்ள ரோவரில் 2 பேலோடுகள் உள்ளன. அவை சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் லேண்டரிடம் ஒப்படைக்கப்படும். ரோவர் பூமிக்கு தரவுகளை அனுப்ப இயலாது.

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிட்டுள்ளோம். அந்த பகுதியில் நீர்ச்சத்து இருப்பதால் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை கூட பொருத்தமானது.

    லேண்டரில் உள்ள மற்ற பேலோடுகள் என்ன?

    உந்துவிசை தொகுதியில் ஷேப் எனப்படும் பேலோட் உள்ளது. லேண்டரை வெளியேற்றிய பிறகு உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றும். ஷேப் என்பது சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியை ஆய்வு செய்வதாகும். உயரமான சுற்றுப்பாதையில் இருந்து நாம் வாழும் கிரகம் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காணவும் ஷேப் உதவும். இந்த ராக்கெட் சந்திரயானை 170x36000 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட சந்திரயான் அதன் 4 உந்துதல்களை எரிக்கும். பின்னர் அது சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும்.

    ஆகஸ்டில் சூரியனைக் கண்காணிக்க ஆதித்யா எல்-1 என்ற பணியைத் தொடங்குவோம். இதை அடைய பூமிக்கும், சூரியனுக்கும் இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த வேண்டும். அது பூமியின் ஈர்ப்பு விசைக்கு வெளியே இருக்க வேண்டும்.

    • சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருமலை:

    சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி சந்திரயான்-3 ரோவர் நிலவில் தரையிறங்கும் என்றனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார்பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம் பெற்றனர்.

    ×