search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.
    • இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தலா 2 ராக்கெட்டுகளை மட்டுமே ஏவியது. தொடர்ந்து நடப்பாண்டு 3-வது ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராகி வருகிறது.

    குறிப்பாக சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ரகத்தில் 1-ஏ, 1-பி, 1-சி, 1-டி, 1-இ, 1-எப், 1-ஜி என 7 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் 2013-ம் ஆண்டு ஜூலை, 2014-ம் ஆண்டு ஏப்ரல், அக்டோபர், 2015-ம் ஆண்டு மார்ச், 2016-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.

    இதில் 2016-ம் ஆண்டு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து தற்போது அதனுடைய ஆயுட்காலம் நிறைவடைந்து உள்ளது. இதற்கு மாற்றாக இஸ்ரோ என்.வி.எஸ்-2 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டும் செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 29-ந்தேதி காலை 11.15 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, கூடுதலாக, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3-வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்த ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை, வருகிற 2025-ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இலக்கை எட்ட இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    • செயற்கைக்கோள் வெளிநாட்டு செயற்கைக்கோள் அமைப்புடன் சார்ந்து இருப்பதை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2018-ல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை வருகிற 29-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

    இதனை இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இந்திய பிராந்திய செயற்கைக்கோள் அமைப்பாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விளங்கி வருகிறது. இது 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்று வட்டப்பாதையிலும், 4 சாய்வான புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த செயற்கைக்கோள் வெளிநாட்டு செயற்கைக்கோள் அமைப்புடன் சார்ந்து இருப்பதை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ். போன்ற அமைப்புகளை வெளிநாடுகளை நம்புவது நம்பகத்தன்மையாக இருக்காது. ஏனெனில் அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு முகமைகளால் அவைகள் இயக்கப்படுகின்றன.

    எனவே அந்த சேவைகள் அல்லது அவற்றின் தரவுகள் இந்தியாவுக்கு மறுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே உள்நாட்டு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கவும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்கைக்கோளின் நீள் வட்டப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

    • இந்தியாவின் நிலவு ஆய்வு திட்டமான சந்திரயான், இஸ்ரோவின் தொடர்ச்சியான விண்வெளி பயணமாகும்.
    • ஆதித்யா-எல்1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அறிவியல் பணியும் தொடங்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து உள்நாடு மற்றும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.

    இதனுடன் நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான பணிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற ஜூலை மாதம் சூரியன் மற்றும் நிலவை நோக்கிய பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட உள்ளது.

    இந்தியாவின் நிலவு ஆய்வு திட்டமான சந்திரயான், இஸ்ரோவின் தொடர்ச்சியான விண்வெளி பயணமாகும். முதல் நிலவு ராக்கெட், சந்திரயான்-1, 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சந்திரயான்-2 வெற்றிகரமாக 2019-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

    ஆனால் அதில் பொருத்தப்பட்டிருந்த ஆராய்ச்சிக்கான லேண்டர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி அன்று தரையிறங்க முயன்றபோது, மென்பொருள் கோளாறால் அதன் பாதையில் இருந்து விலகி சந்திரனில் வேகமாக தரையிறங்கி சேதம் அடைந்தது. தொடர்ந்து, சந்திரயான் 3-ஐ வருகிற ஜூலை மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து ஆதித்யா-எல்1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அறிவியல் பணியும் தொடங்கப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தையும் தொடர்ந்து விண்ணில் செலுத்த இலக்கு வைத்துள்ளோம். இந்த பணியானது 400 கிலோ எடையுள்ள 'விஇஎல்சி' என்ற ஒரு கருவியை சுமந்து செல்லும் ஆதித்யா-1 என்ற செயற்கைகோள் 800 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முடித்து வருகிறோம்.

    சூரியன்-பூமி அமைப்பின் முதல் 'லாக்ராஞ்சியன்' என்ற புள்ளியை (எல்1) சுற்றி ஒளிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள், சூரியனை எந்த மறைவு அல்லது கிரகணமும் இல்லாமல் தொடர்ந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தும். ஆதித்யா-1 பணிக்கு ஆதித்யா-எல்1 என பெயர் மாற்றப்பட்டது. பூமியில் இருந்து சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் இது நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    • சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

    விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

    மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ராக்கெட் 12-14 கி.மீ. வரை சென்று அதன் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்.

    தொடர்ந்து 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்த சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

    அமெரிக்காவின் 'ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த ராக்கெட் சில நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பி வரும்.

    இஸ்ரோவின் வரவிருக்கும் விண்வெளி பயணங்களில், விண்வெளி நிறுவனம் 'ஆதித்யா எல்-1', வழிகாட்டும் செயற்கைகோள்கள், அதிக எடை கொண்ட ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.யுடன் வணிக ரீதியான ஏவுதல் மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவுகணை வாகனத்துடன் (எஸ்.எஸ்.எல்.வி.) ஒரு பணியை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

    சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதேபோல், '72 ஒன் வெப்' செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு - ரூ.1,000 கோடிக்கு மேல் எல்.வி.எம் 3 ராக்கெட்டுடன் நல்ல வணிக வாய்ப்பு உள்ளது.

    விண்வெளி நிறுவனம் அதன் செயல்திறனில் சமரசம் செய்யாமல் செலவை குறைக்க சில மறுசீரமைப்புகளை செய்து வருகிறது.

    குறிப்பாக ராக்கெட்டின் மேல் பகுதி நீண்ட காலம் இருக்கும் என்பதால் அதனை சுற்றுப்பாதை தளமாக பயன்படுத்துவது குறித்த எண்ணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அதன்படி தற்போது அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி.55 ராக்கெட்டின் மேல் தளத்தில் அறிவியல் சோதனைகள் நடத்துவதற்கான 7 கருவிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.
    • இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் சிங்கப்பூரின் மற்றொரு  செயற்கைக்கோளான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து, சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

    இதற்கு முன்பு, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
    • இந்த ராக்கெட்டில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

    அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கியது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.

    • பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வருகிற 22-ந்தேதி சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.
    • புதிய அணுகுமுறையானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்தவகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

    இந்த ராக்கெட்டில், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவப்படுகிறது. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிச.16-ந்தேதி டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

    இதனை தொடர்ந்து டெலியோஸ்-2 செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டில் பொறுத்தப்பட்டு வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெலியோஸ்-2 செயற்கைகோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும்.

    முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

    புதிய அணுகுமுறையானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.
    • தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    பெங்களூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.

    இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்த கொண்டு செல்லும் ராக்கெட்டின் பாகம் விண்வெளியில் சுற்றும் அல்லது கடலில் விழும். மேலும் வெடித்து சிதறும் வாய்ப்பும் உள்ளது.

    செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஆய்வில் இஸ்ரோ ஈடுபட்டது. 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வந்த நிலையில் விண்ணில் இருந்து ராக்கெட் பூமியில் தானாக தரையிறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ணயித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது.

    செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது.

    மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவு குறையும். கால விரயம் தடுக்கப்படும். மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதுகுறித்து இஸ்ரோ கூறும்போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் என்ற கனவு யதார்த்தத்திற்கு இந்தியா ஒரு படி நெருக்கமாக வருகிறது.

    மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

    சோதனை முடிந்த பிறகு மென்பொருள் தரையிறங்கும் கருவி சரிபார்ப்பு, ஓடு பாதையில் உள்ள உத்தேச இடத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சென்சார் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
    • பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கை கோள்கள் மட்டுமல்லாமல், வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

    இஸ்ரோ நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்.-மார்க்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் மார்க் 3 ராக்கெட் 640 டன் எடை மற்றும் 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட் இதுவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 இணைய சேவை செயற்கை கோள்களை விண்ணில் ஏவ அந்த நிறுவனம், இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் சுமார் ரூ. 1000 கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

    2-வது கட்டமாக மீதமுள்ள 36 செயற்கை கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன. தீப்பிழப்புடன் கரும்புகையை கக்கியபடி 36 இணைய தள சேவை செயற்கை கோள்களை சுமந்துகொண்டு எல்.வி.எம்.-மார்க்3 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த செயற்கைகோள்கள் மொத்தம் 5,805 கிலோ எடை கொண்டவை. ஒவ்வொரு செயற்கைகோளும் 150 கிலோ எடை கொண்டது.

    பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் தடையில்லா பிராட்பேண்ட் இணைய தள சேவையை வழங்கும்.

    • இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
    • எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.

    இந்த 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.

    இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    • 36 செயற்கைகோள்களை சுமந்தபடி 'எல்.வி.எம்-3' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
    • எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.

    அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும். 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும்.
    • எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.

    அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும்.

    36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×