search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர்அ.தி.மு.க. சார்பாக பொதுச் செயலாளராக தேர்வு செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனி யன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, பிரியதர்ஷினி, வெங்க டேஸ்வரி, பஞ்சவர்ணம், கீதா சரவ ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைச்செயலாளர் சந்தன துரை வரவேற்றார்.

    இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொது மக்களுக்கும், நிர்வாகி களுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், வார்டு செயலாளர்கள் கோட்டையன், திருப்பதி, பாரத் சங்கு, ரங்கராஜ், வில்லி, பிரேம், பாண்டி, அழகர், ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    • விருதுநகரில் நாளை காமராஜர் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வித்தி–ருவிழாவாக விருதுநகரில் நாளை (15-ந்தேதி, சனிக் கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி காலை 8.30 மணிக்கு காமராஜர் இல்லத் தில் நோட்டு, புத்தகங்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காளீஸ்வரி குழுமம் ஏ.பி.செல்வராஜன் பங்கேற்கி–றார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை காமாட்சி என்ற காமராஜர் விளக்கிற்கு நாடார் மகளிர் மன்றத்தினர் மலர் அர்ச் சனை செய்கிறார்கள்.

    இதையடுத்து நாடார் மகளிர் மன்றத்தினர் திரு–விளக்கு ஏற்றுகிறார்கள். விழாவில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் வரவேற் புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் இயக்கு–னர்கள் பி.விஜய–துரை, கே.நாகராஜன், பி.சி.ஜி.அசோக்குமார், முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்தி–ரன், குளோபல் பாலிபேக் அதிபர் முரளிதரன் ஆகி–யோர் கல்வித்தாய், கல்வித் தந்தை விருதுகளை வழங்கு–கிறார்கள்.

    இதையடுத்து மாநில அளவில் பேச்சுப்போட்டி–யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெறு–கிறது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஏ.ஆர்.ஆர்.ரகுமான், பழனி நாடார் ஆகியோர் கலந்துகொள்கி–றார்கள்.

    மேலும் விழாவில் முன் னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச் சர் மாபா க.பாண்டியராஜன், மான்ராஜ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன், எஸ்.எஸ்.கதிரவன், கே.சுரேஷ்குமார், பார்த்திபன், பா.ஜ.க. மாநில துணைத்த–லைவர் கரு.நாகராஜன், ஆறுமுக நயினார், அவனிமா–டசாமி, மாரிக்கண்ணு, வேலுச்சாமி, வி.எஸ்.கந்த–சாமி மற்றும் நிர்வாகி–கள் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • சோழவந்தான், அலங்காநல்லூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • உசிலம்பட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா கே.ஆர்.ராஜா தலைமையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். பி.உதயகுமார் பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதாகரன், இளைஞரணி மாநிலதுணைச் செயலாளர் போஸ் சிவசுப்பிரமணியன்,

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகேந்திர பாண்டியன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, பவளக்கொடி ராசு காளை, ரகு, சசிகுமார், பெருமாள், டி.ஆர். பால்பாண்டி, ராமமூர்த்தி மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதில் யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் உன்னால் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகரசெயலாளர் முருகேசன், நிர்வாகிகள் முனியாண்டி, கேபிள்மணி, தியாகு, ராமன், கண்ணன், மணிகண்டன், வார்டு கவுன்சிலர்கள் ரேகாராமச்சந்தி ரன், சண்முக பாண்டிய ராஜா, வசந்தி கணேசன், சரண்யாகண்ணன், டீக்கடை கணேசன், மருத்துவர் அணி கருப்பையா, பேட்டை மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் முன்னாள் அமைச் சரும், மாவட்ட செயலாளரு மான ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதல்படி ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • பொழுதுபோக்கு தினமாக மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு நடத்தப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2023-24 வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய பொழுதுபோக்கு தினமாக மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் எம் .எஸ் .நகர். பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் , சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல பிளாக் சீப் யூ டியூப் சேனல் அணியினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

    தொடர்ந்து இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டம் , கும்மியாட்டம் , காவடியாட்டம் , ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் இளைஞர்களுக்கான டி.ஜே நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் நடனம் ஆடினர்.

    இதே போல் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது. மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு நடத்தப்படும் எனவும் அடுத்த மாதம் 3வது மண்டலத்தில் நடத்தப்படுவதாக மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.

    • மகிழ்ச்சியான ஞாயிறு” கொண்டாட்டம் நடைபெறுகிறது.
    • கலைநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் "மகிழ்ச்சியான ஞாயிறு" கொண்டாட்டம் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மண்டலம்-2, 17வது வார்டு புதிய பேருந்து நிலையம் அருகில், 60 அடி ரோடு, கண்ணகி நகர், எம். எஸ். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே கடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை போல், இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாட்டில் சிறந்த நிகழ்ச்சியாக்க அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
    • திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருப்பூர் மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டதுடன் மருத்துவர்களிடம் பணிகளின் மகத்துவங்களை கேட்டு அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி மற்றும் பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பள்ளியின் முதல்வர் பிரமோதினி , ஒருங்கிணைப்பாளர்கள் வி.மோகனா , நித்யா , பள்ளியின் இன்ட்ராக்ட் பொறுப்பாளர் ஆசிரியை ரஞ்சிதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.

    பசுமையை போற்றும் வகையில் பசுமை உலக சுற்றுப்புற சூழல் குறித்தும், மழை வளம் வேண்டியும் , புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி கவிதை, கட்டுரை, பாடல்கள் மூலம் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று மரங்கள் குறித்து வரைந்தனர்.

    எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பசுமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை தலைமை யாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
    • தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படு கிறது.

    இப்பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்க ளும், பெண்களும் அணிவ குத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சுன்னத்துல் ஜமாத், தல்ஹீத் பிரிவினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு இன்று காலையில் ரமலான் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையி லான 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்பகுதியைச் சார்ந்த ஆயி ரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    • குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் நடந்தது
    • பாயும் ஒளி நீ எனக்கு என்ற புதிய திரைப்படம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் திரையிடப் பட்டது

    கன்னியாகுமரி :

    நடிகர் விக்ரம் பிரபு நடித்த பாயும் ஒளி நீ எனக்கு என்ற புதிய திரைப்படம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் திரையிடப் பட்டது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் திரைப்படத்தை பார்த்து கண்டுகளிக்க வந்த ரசிகர்களுக்கு குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி.ஆர். சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற தலைவர் கருத்திருமன், அகில இந்திய சிவாஜி மன்ற பொதுச்செயலாளர் கோலப்பன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை துணை செயலாளர்கள் சத்யன், பணிஜெஸ்டஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஜோ, தன பால், ராம்குமார் ஜெகரா ஜன், நாகராஜ பிரபு, சுரேஷ், ஜெயன், சுரேந்திரன், பாலமுருகன், சுந்தர் மற்றும் குமரி மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள், குமரி மாவட்ட பிரபு அறக்கட்ட ளை நிர்வாகிகள், குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
    • மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர்.

    புதுக்கோட்டை,

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் ஏவிசிசி மழலையர் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிறுவனரும், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி கணேசன் குத்துவிளக்கேற்றி யோகா தின விழாவை துவக்கி வைத்து யோகா பயிற்சியின் அவசியத்தை விளக்கி பேசினார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான், கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதையும், அமெரிக்கா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. சபையில் யோக தினம் கொண்டாடுவதை பெருமையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர். ஏவிசிசி பள்ளி நிர்வாகி மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஆலங்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் பிரதான பகுதியான அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்களும், பா.ஜ.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து மூடப்படும் கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் ஆலங்குடி பழைய கோர்ட் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்னதாக திரண்ட பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடியிருந்த டாஸ்மாக் கடையின் கதவிற்கு மாலை அணிவித்து, கடை மூடப்பட்டதாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீஸிற்கு மாலை அணிவித்ததனர். மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    • கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது.
    • தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.

    வால்பாறை,

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் கோடை விழாக்களை நடத்துகிறது. அதன்படி நடப்பாண்டும் கோடை விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி ஆகியவை சார்பில் நேற்றுமுன்தினம் கோடைவிழா தொடங்கி நடக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாணவிகளின் பரதநாட்டியம், தப்பாட்டம், மேஜிக் ஷோ, இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக படகுசவாரி செய்தனர்.

    அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள இயற்கை பேரழகு காட்சிகளை கண்குளிரகண்டு களித்தனர். அடுத்தபடியாக வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தில் பாராகிளைடிங் சாகசம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வானில் இருந்தபடி வால்பாறை மற்றும் ஊட்டியின் பேரழகை மெய்மறந்து ரசித்தனர். தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.

    இதில் வெளியூர்- உள்ளூரை சேர்ந்த பல்வேறு வகை நாய்கள் கலந்து கொண்டன. இது வெளியூர் சுற்றுலா பயணிகளைவெகுவாக கவர்ந்தது. வால்பாறையில் கோடைவிழா நேற்று தொடங்கிய நிலையில், மதிய நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் அங்கு கலைநிகழ்ச்சிகள் தடைபட்டன. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக மழையில் நனைந்தபடி வால்பாறையில் காலாற நடந்து சென்று இயற்கை கண்காட்சிகளை நேரில் கண்டு ரசித்தனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் கோடைக்கால விடுமுறை முடிந்து வருகிற 7-வது தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. எனவே தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்து ஊட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு, அங்கு நடத்தப்படும் கோடைவிழா மற்றும் இயற்கை காட்சிகளை மெய்மறந்து கண்டுகளித்து ரசித்து வருகின்றனர்.

    ×