search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக  உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

    போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். 

    • போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

    டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

    தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
    • மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

    வங்காளதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தஸ்கின் அகமது விளையாடவில்லை.
    • பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லாததால் போட்டியில் விளையாடவில்லை.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால் அவர் போட்டியில் விளையாடவில்லை.

    இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஸ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

    அறையில் படுத்து தூங்கிய அவர், போட்டிக்காக விளையாட எழுந்து வரவில்லை. இதனால் அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சிலும் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தஸ்கின். ஆனாலும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்கவேண்டாம் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் தூக்கம் காரணமாக ஓட்டல் அறையில் மூத்த வீரர் ஒருவர் படுத்துக்கொண்டு, விளையாடாமல் போனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும்.
    • நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.

    பெங்காலி நடிகை சுதிபா சாட்டர்ஜி, வங்காளதேச சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    அந்நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த பங்கேற்பாளருடன் சுதீபா உரையாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் சுதிபா சாட்டர்ஜிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

    மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வங்காள அமைச்சர் பாபுல் சுப்ரியோவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த சுதிபா சாட்டர்ஜி, "என்னை ட்ரோல் செய்யும் பெரும்பாலானோர் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று நான் நம்புகிறேன். நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. மாட்டிறைச்சியை நான் தொட்டது கூட இல்லை.

    கரீம் ஜஹான் (நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) சமையல் செய்த வீடியோக்கள் இன்னும் எடிட் செய்யப்படவில்லை. மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும். அதனால், நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.

    இந்த வீடியோக்களை வைத்து மம்தா பானர்ஜி மற்றும் பாபுல் சுப்ரியோவை பலர் விமர்சித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமில்ல எந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை

    பாஜகவின் பெயரிலும் பல மிரட்டல் செய்திகள் வருகின்றன. என்னை உயிருடன் எரித்துவிடுவோம் அல்லது என் மகனைக் கடத்துவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

    • வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் குல்பாடின் நைப் காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார்.
    • இதனை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

    கிங்ஸ்டவுன்:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    அதனை தொடர்ந்து அடுத்த ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் களத்திற்கு வந்து 2 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். மேலும் வெற்றியை கொண்டாட குல்பாடின் நைப் முதல் ஆளாக ஓடி வந்தார்.

    குல்பாடின் நைபின் இந்த செயலை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அந்த அணியின் வீரரான நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் கிண்டாலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    அதில் மன்னிக்கவும் நைப், ஆனால் இதை பதிவிட வேண்டியிருந்தது. அந்த வீடியோவில் போட்டியின் போது நைப் காயத்துடன் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் போது சிரித்தபடி வேகமாக ஓடியதும் இதனை ஐசிசி பின் தொடர்ந்து வருவது போலவும் இருந்தது. இந்த வீடியோ பதிவுக்கு அந்த அணியின் வீரர்கள் பலர் சிரித்தபடி கமெண்ட் செய்துள்ளனர்.

    முக்கியமாக நைப், நண்பரே எனக்கு உடம்பு சரியில்லை. தசைப்பிடிப்பு என அந்த பதிவுக்கு ரிப்ளை கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

    இந்த நிலையில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அரையிறுதி ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.

    • வங்காளதேசம் அணியால் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆனால் கைவசம் வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுகள் உள்ளது.

    இந்த மழை காரணமாக அடிக்கடி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விளையாடி வருகிறது. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அடுத்த அணி எது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது என்ற முடிவு தெரிந்துவிடும். எனினும், இந்த போட்டியின் முடிவில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

    ஆப்கானிஸ்தான் வெற்றியால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதோடு, ஆஸ்திரேலியா அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். இதேபோன்று வங்காளதேசம் அணி 13 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை துரத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஒருவேளை வங்காளதேசம் அணி 13 ஓவர்களை கடந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

    • மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    செயின்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் சத்ரான்- குர்பாஸ் களமிறங்கினர். இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பவர் பிளேயில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரி அடிக்க முயற்சிக்கவில்லை.

    டெஸ்ட் போட்டி விளையாடி இப்ராஹிம் சத்ரான் 29 பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 12 பந்தில் 10 ரன்களுடன் வெளியேறினார். தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 16 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 88 ரன்களே மட்டுமே எடுத்தது. இதற்கு குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதனால் அடுத்து வரும் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட கூடிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே வந்த வேகத்தில் அனைவரும் பெவிலியன் திரும்பினர். கடைசியில் ரஷித்கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டதால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார்.

    டி20 உலகக்கோப்பையில் 40 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19.50 பவுலிங் சராசரியுடனும் 6.89 எக்கனாமியுடன் சிறப்பாக பந்துவீசி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ்.
    • டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    அப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    அப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதன்மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்

    ஆப்கானிஸ்தான் அணி வீரர் நங்கெயாலியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறிவிட்டார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை நூலிழையில் பேட் கம்மின்ஸ் இழந்தார்.

    டி20 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

    1. லசித் மலிங்கா (SL)

    2. டிம் சவுதி (NZ)

    3. மார்க் பாவ்லோவிக் (SER)

    4. வசீம் அப்பாஸ் (MALTA)

    5. பேட் கம்மின்ஸ் (AUS)

    ஆண்கள் T20 உலகக் கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

    1. பிரட் லீ (AUS) vs BAN, கேப் டவுன், 2007

    2. கர்டிஸ் கேம்பர் (IRE) vs NED, அபுதாபி, 2021

    3. வனிந்து ஹசரங்கா (SL) vs SA, ஷார்ஜா, 2021

    4. காகிசோ ரபாடா (SA) எதிராக ENG, ஷார்ஜா, 2021

    5. கார்த்திக் மெய்யப்பன் (UAE) vs SL, கீலோங், 2022

    6. ஜோசுவா லிட்டில் (IRE) vs NZ, அடிலெய்டு, 2022

    7. பேட் கம்மின்ஸ் (AUS) vs BAN, ஆன்டிகுவா, 2024

    8. பேட் கம்மின்ஸ் (AUS) vs AFG, கிங்ஸ்டவுன், 2024

    ×