search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களை குவித்தார்.
    • இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

    அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

     

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களையும், தௌஹித் ரிடோய் 54 ரன்களையும் நசும் அகமது 44 ரன்களையும் குவித்தனர்.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இவர்தவிர முகமது ஷமி இரண்டு விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

    இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 334 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் சதமடித்தனர்.

    லாகூர்:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • வங்காளதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார்.
    • இலங்கை அணியில் சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார்.

    ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

     

    அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.

    இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20  கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர்.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
    • இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.

    மிர்பூர்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

    இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

    • முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • வங்காளதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சாலை, ரயில் என நான்கு வழி போக்குவரத்து வசதியுடன் கூடிய இந்த பாலத்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைக்கிறார்.

    வங்காளதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது.இதனால் அந்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.

    வெளிநாட்டு நிதி உதவி இன்றி முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலப்பணிகள் வெற்றிகரமாக முடிந்து திறக்கப்படுவதற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் நிறைவடைந்திருப்பது பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு பார்வை மற்றும் துணிச்சலான முடிவைக் காட்டுகிறது என்று டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது.
    • சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம்(வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வங்காளதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என பங்குகளுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. #Bangladesh
    டாக்கா:

    வங்காளதேசத்தில் சமீபத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி, தலைநகர் டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    இதன் ஒரு பகுதியாக, தலையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பைக்கில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். பைக்கில் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவருகிறார் என பேஸ்புக்கில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டிய கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார். #SabbirRahman
    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் அணி வீரரான ஷபீர் ரஹ்மான், அதிரடி பேட்டிங்குக்கு மட்டுமில்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2016-ம் ஆண்டு பெண் விருந்தினரை அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தது முதல் , சிறுவனை தாக்கியது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கி அபராதங்களும், தடைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டி முதல் ஷபீர் ரஹ்மான் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகரின் நண்பர் ஷபீருக்கு அதனை பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதல் விடுப்பதாக மிரட்டியுள்ளார்.  

    இந்த விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
    வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பள்ளி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    டாக்கா :

    வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோகோரியா நகரில் ஒரே பள்ளியை சேர்ந்த 22 மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து கால்பந்து விளையாடினர். போட்டி முடிந்த பிறகு அவர்களில் 6 பேர் அருகே உள்ள மதமுகுரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

    அதில், 5 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி தலைமை போலீஸ் அதிகாரி பக்ருதின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்த 5 மாணவர்களின் இறுதிசடங்கில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்பவர்களை நெகிழ்சிக்குள்ளாகியது.
    ×