search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • 259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
    • 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    சென்னை:

    சென்னை 1,2 மற்றும் 3 -ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தின விடுமுறை நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை) சட்டம் 1958-ன் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 257 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    இதையடுத்து மொத்தம் 465 நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் கூறுகையில், தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டு தலின்படியும் விருதுநகர், ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான

    15-ந்தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, சுதந்திர தினம் அன்று (ஆக.15) அன்று கடைகள், நிறுவ னங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

    இந்த தினத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழி லாளர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று விடுமுறை தினத் திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை முரணாகவும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவகங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 84 நிறுவனங்களில் கூட்டாய் வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுதந்திர தினத் தன்று பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில் :

    ெதாழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் மதுரை தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் அறிவுரையின்படி நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி வழிகாட்டுதலின்படி விடுமுறை தினமான ஆகஸ்டு 15-ந்தேதி அன்று அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன்பெருமாள், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

    இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.விலும், உணவு நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் ஐ.பி.இ.இ.யிலும் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று நகலை நிறுவனத்தின் அறிவப்பு பலகைகளிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்ப வேண்டும்.

    இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறிய 20 கடைகள், 12 உணவு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணிகண்டபிரபு தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி.திருமண மண்டபத்தில் 98-வது பொருட்காட்சி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை தினமாக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாளை (15-ந்தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையானதால் 15 மற்றும் 16-ந்தேதி 2 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த விடுமுறை நாட்களில் வாவுபலி பொரு ட்காட்சி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் கேரளா பகுதியில் உள்ள மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த பொருட்காட்சியில் குழந்தை களை குதூகலப்படுத்தும் மிகப்பெரிய ராட்டினங்கள், பெரியவர்களை குதூகலப்ப டுத்தும் மரணக்கிணறு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகள், கண்காட்சி பொருட்கள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏராள மானவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளது. மேலும் ஏராளமான கைவினை பொருட்களும் பொருட்காட்சியில் பார்வை க்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் உற்சாகமாக வந்து வாவுபலி பொருட்காட்சியை கண்டு களித்து செல்கின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்கள் புதிய ரக செடிகளை வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் விடுமுறை நாளான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந்தேதி சுதந்திர தினத்தை யொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகிறது.

    இதேபோல், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி. ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப வசதியாக வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் ஊருக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த பஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரானில் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியுள்ளது.
    • நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், "புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது" என்றார்.

    அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.
    • தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சுற்று வட்டார பொதுமக்கள் மாலை வேளையில் குளச்சல் கடற்கரை வந்து பொழுதை கழித்து செல்வர். மாலை வேளையில் மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து மாலை நேர கடற்கரை காற்று வாங்கி செல்வது வழக்கம்.

    நேற்று மாலை குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொது மக்கள் குளச்சல் கடற்கரை யில் குவிந்தனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள், சிறு வர்கள், பெரியவர்களின் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிந்தது. அவர்கள் நண்பர்கள், குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.

    சிறுவர்கள் மணற்பரப் பில் விளையாடி மகிழ்ந்த னர். அருகில் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் குளச்சல் கடற்கரை மிகுந்த களைக்கட்டி காணப்பட்டது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.விடுமுறை நாளில் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    • 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
    • உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது.

    தருமபுரி, 

    ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.

    இந்த உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உள்ளூர் விமுறை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
    • பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது .

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது . மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
    • சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி

    சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை முடிந்ததாலும், பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் ஞாயிற்று க்கி ழமை விடுமுறை யை யொட்டிஇன்று கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலாபயணிகள் படகுத்து றையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில், கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரியில் உள்ள கோவில்கள்,தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    • சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • வருகிற 8-ந் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோவிலில், ஜூலை 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதனால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி ஒருாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 8-ம் தேதி சனிக்கி ழமை அன்று பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×