search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 181438"

    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி அந்த ஆட்டோ, வேனை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிகளை மீறுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    காந்தி சிலை, ரெயில்வே பீடர் சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், பள்ளி கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் சோதனை நடைபெற்றது.

    50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற சோதனையில், தகுதி சான்று இல்லாமல் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ மற்றும் தனியார் சுற்றுலா வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் மற்றும் புகை சான்று, முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் விதிகளை மீறி இயக்கிய 7 சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். #AlcoholSmuggling
    நாகூர்:

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு தங்கராசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 சுற்றுலா வேன்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 3 வேன்களிலும் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பெரியார் காலனி பிச்சைகனி மகன் சுபேர்சேட் (வயது31), திருப்பூர் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் இமானுவேல் (38), திருப்பூர் கூணம்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெயசீலன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் சுபேர்சேட், இமானுவேல், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 3 வேன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கும்மிடிப்பூண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் லைலா லட்சுமி (வயது 53). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி லைலா லட்சுமி, தனது தம்பி சிவாவுடன்(39) மோட்டார் சைக்கிளில் சோழவரத்தில் இருந்து எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    புதுவாயல் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, அதே திசையில் வந்த வேன் ஒன்று மேற்கண்ட மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லைலா லட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 
    குமாரபாளையம் அருகே மினிலாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்டோர் நேற்று வேனில் குமாரபாளையத்தில் இருந்து புறப்பட்டனர்.

    அந்த வேன் காவடியான்காடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த மினிலாரி மீது மோதி கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் மினிலாரியின் முன்பாகம் நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அய்யம்மாள் (வயது 60), சந்திரம்மாள் (63), கற்பகம் (52), மாரியம்மாள் (40), பெருமாயி (55), வள்ளியம்மாள் (52) ஆகியோர் பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×