search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மீனவ பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மீனவ பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:-

    மீன்பிடி தடை காலத்தில் ரோந்து படகுகளை தீவிரப்படுத்த வேண்டும். விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு முழுமையான மானிய விலை மண்எண்ணெய் வழங்க வேண்டும். பள்ளம்துறை கீழ கிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் மக்களின் நலன் கருதி நடை பாலம் அமைக்க வேண்டும். மிடாலம் பகுதியில் திடக்கழிவு மையத்தை அகற்ற வேண்டும். குறும்பனையில் உள்ள 3 பஞ்சாயத்தை ஒரே பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். தேங்காப்பட்டினத்தில் தனியார் துறைமுகம் அமைக்க கூடாது.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர சாலைகளை ஒரே சாலையாக அமைக்க வேண்டும். ஹெலன்நகர் சாலையை சீரமைக்க வேண்டும். கடலோர கிராம பகுதிகளில் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலோர கிராம பகுதிகளில் போதைப்பொருள் விற்ப னையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீன்பிடி தடை காலத்தில் கடலோர பகுதிகளில் ரோந்து படகுகள் ஏற்கனவே அதிகப்படுத்தப்பட்டுள்ளன. படகுகளுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்கப்பட்டு வருகிறது.

    கிளை வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர கிராமப் பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டு நடத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கடலோரக் கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.


    • தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
    • சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் நகரசபை அந்தஸ்த்தில் உள்ள ஒரே பேரூராட்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும்.

    இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் அமைந்து உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கன்னியா குமரி ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதனால் நாள்ஒன்றுக்கு சராசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள்இங்கு வந்து செல்கிறார்கள். சீசன் காலங்களில் நாள்ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி நகரப்பகுதி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த சுற்று வட்டார பகுதிகளின் தலைநகரம் போலவும் கன்னியாகுமரி விளங்கிவருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியாக கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் அமைந்து உள்ளது.

    ஆனால் பெருகிவரும் மக்கள்தொகை வாகன பெருக்கம் மற்றும் வளர்ச்சி க்கு ஏற்ப கன்னியாகுமரி பகுதி ரோடுகள் விரிவா க்கப்படவில்லை. கன்னியா குமரி யில்உள்ள சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதிகள் கடற்கரை சாலை போன்ற பகுதிகள் நெருக்கடி நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகிறது.

    இந்த பகுதிகளில் தான் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப்பகுதி, சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்கக்கூடிய பகுதி, பொழுது போக்கு பூங்காக் கள் போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்து உள்ளன.

    அதுமட்டுமின்றி சன்னதிதெரு, ரதவீதிகள் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் ஓட்டல்கள், மற்றும் கடைகள் அமைந்துஉள்ளன. இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா வரும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் கன்னியாகுமரி சன்னதி தெருமற்றும் ரதவீதி பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்து விடுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குறுகலான சன்னதி தெரு பகுதி யில் சுற்றுலா வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படு கின்றன. மேலும் நெருக்கடி மிகுந்த சன்னதி தெரு பகுதியில் "டூ-வீலர்"களை வரிசையாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதற்கிடையில் கன்னியா குமரி சன்னதிதெருவில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை லாட்ஜ்கள் முன்பே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடி யாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி சன்னதி தெருவில் நோ பார்க்கிங் உள்ள இடங்களில் சுற்றுலா வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள் ளது.

    இவ்வாறு சன்னதி தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்போது போலீசார் வந்து வாகனங்களை அகற்றி போக்குவரத்து நெருக்கடியை சமாளித்து வருகின்றனர்.

    எனவே கன்னியாகுமரி சன்னதி தெருவில் சுற்றுலாவாகனங்கள் நுழையபோலீசாரும் கன்னியகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வா கமும்தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கன்னியாகுமரி சன்னதி தெருவில்வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தபடு வதை அவ்வப் போது போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் நிறுத்த மாற்று இடங்களில் தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இட நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை
    • தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிக ளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தப் படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த படகுகளை நிறுத்துவதற்காக கன்னியாகுமரி வாவதுறை கடற்கரை பகுதியில் படகுத்துறை அமைந்துஉள்ளது.

    இந்த படகு துறையில் ஏற்கனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வரும் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளும் விவேகானந்த கேந்திர பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வ தற்காக பயன்படுத்தப்பட்டு வரும் "ஏக்நாத்"என்றபடகும் இந்த படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.

    இதற்கிடையில் சுற்றுலா த்துறை மூலம்ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்ட தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதியஅதிநவீன சொகுசு படகுகளும் தற்போது இந்த படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த 2புதிய அதிநவீன சொகுசு படகுகள் வடிவமைப்பில் பெரியதாக உள்ளதால் விவேகானந்தர் நினைவுமண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு ஏதுவானதாக இல்லை.

    இந்த2 புதிய அதிநவீன சொகுசு படகுகளை விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள படகு தளத்தில் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் இந்த 2 புதிய படகுகளும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் படகுத்து றையில்உ ள்ள படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது. மேலும் இந்த 2புதிய படகுகளும் தற்போது கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகிக் கொண்டிருக்கிறது.

    அதுமட்டுமின்றி படகுத்து றையில் இந்த2புதிய படகுகளும்நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் மற்ற 3 படகுகளும் இந்த படகுத்துறைக்குள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் சில சமங்களில் விபத்துக்கள் நேரிட வாய்ப்புகள் உள்ளது.

    இந்த படகுத் துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்கடி காரணமாக சில சமயங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தினால் இந்தப் படகுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சேதம் அடைந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து இந்த படகு துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்கடியை சமாளிக்க இந்த படகுத்துறையின்தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது.

    இந்த புதிய படகு தளம் ரூ.7 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரிக்கும் பணியில் மீன்வளத்துறை பொறியியல் பிரிவைச்சேர்ந்த பொறி யியல் வல்லுனர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆர்வம் காட்டினர்
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:


    விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


    குமரி மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு ரெயில்வே பிரச்சினைகள் குறித்து நேற்று விஜய்வசந்த் எம்.பி. சென்னையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன் மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகிேயாரை சந்தித்து மனு அளித்தார்.


    மனுவில் கன்னி யாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கன்னியாகுமரியிலிருந்து வேளாங் கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும், ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை விஜய்வசந்த் எம்.பி. முன் வைத்தார்.

    மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    • குமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில்:


    குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் இரண்டு அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.


    3-வது அலை தாக்கத்தி லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர்‌. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 19420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 79 ஆயிரத்து 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து உள்ளனர்.

    தற்போது 4-வது அலை பரவ தொடங்கியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை களை மேற்கொ ண்டு வருகிறார்கள்.


    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் 350-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் யாருக்கும்கொரோனா பாதிப்பு இல்லை.


    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் முன்சிறை ஒன்றியத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்க ப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதா ரத்துறை அதிகா ரிகள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த வர்களின் விவரங்களை சேகரித்து அவர்களையும் தனிமை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 47 வயது இளம்பெண் ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய உரையும் அதைத் தொடர்ந்து இரவு 7மணிக்கு பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.


    ஊர்வலத்துக்கு முன்னால் செண்டை மேளம், சிங்காரி மேளம், கேர ளதையம்ஆட்டம், பெண் களின் நாதஸ்வரகச்சேரி போன்றவை இடம் பெற்றி ருந்தன. கோவிலில்இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.


    வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். இந்த 7-ம்நாள் திருவிழா நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, 7-ம் திருவிழா மண்டகப்படி கட்டளை தாரர்கள் அய்யப்பன், சந்திரன், கண்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், உள்பட திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.


    8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணை, பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது அதன் பின்னர் 8-30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது.


    அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
    • இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:


    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாகபெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.


    இந்த திருவிழாவருகிற12-ந்தேதிவரை10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை6மணிக்கு சமய உரையும் இரவு7மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்புநிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலை வர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.


    தேர் நிலைக்கு நின்ற தும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சி தர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.


    10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்ட கப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை யும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.


    இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதே சமயம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.


    தினமும் காலை ௮ மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணிவரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகா னந்த கேந்திர தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுப்பதற்கு நாளைக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு பதிலாக 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

    • கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம்.
    • கடந்த சில மாதங்களாக இந்த பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த திருக்கோவில் திருநடை தினமும் 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு நடை சாத்தப்படும். அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு திருநடை திருகாப்பிடப்படும்.

    கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம். கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் இந்த மணியின் ஓசை கணீர் என ஒலிக்கும்.

    இந்த பெரியமணி ஓசை கேட்கும்போது சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கோவிலில் தீபாராதனை நடக்கிறது என்பதை அறிவார்கள். உடனே சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பக்தர்களும் கோவிலுக்கு சாமி கும்பிட விரைந்து செல்வார்கள்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கோவிலின் நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை. தற்போது வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்து வரும் வேளையிலும் இந்த நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி தீபாராதனை நேரங்களில் இதுவரை ஒலிக்கப்படவில்லை.

    இதனால் பக்தர்களும் பொதுமக்களும் மனவேதனை அடைந்து உள்ளனர். எனவே வைகாசி விசாகபெருந்திருவிழா முடிவதற்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்குப் பிரதான நுழைவாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி ஓசை தீபாராதனை நேரங்களில் ஒலிக்க செய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பா.ஜ.க. இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
    • கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர்அணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதற்கிடையில் தடையை மீறி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்வதற்காக பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்றதாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்த பெயிண்டர் விஷம் அருந்தி பரிதாபமாக இறந்தார்.
    • அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்தவர் ராபர்ட் சிம்சன் (வயது 60), பெயிண்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

    உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் சிம்சன் பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×