search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
    • சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடைபெற்றது.

    தற்போது கோவை எஸ்.என்ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 19 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

    மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளியுடனும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே 3 முதல் 6-வது இடங்களில் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளி பெற்றுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்- அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை கிங்ஸ் திருச்சியை 52 விக்கெட்டிலும், சேலத்தை 8 விக்கெட்டிலும் வென்றது.

    திண்டுக்கல் (5 விக்கெட்), மதுரை (39 ரன்), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (5 விக்கெட்) அணிகளிடம் தோற்று இருந்தது.

    திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் திண்டுக்கல்லிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    3-வது ஆட்டத்தில் நெல்லையிடம் 6 விக்கெட்டில் தோற்றது. 4-வது போட்டியில் சேலம் அணியை 32 ரன்னில் வென்றது. இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் நெல்லையிடம் சூப்பர் ஓவரிலும், 2-வது போட்டியில் மதுரையிடம் 4 விக்கெட்டிலும் தோற்றது.

    அதைதொடர்ந்து திருச்சி வாரியர்சை 44 ரன்னிலும், கோவை கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ராதாகிருஷ்ணன், ஹரீஷ்குமார், சாய்கிஷோர், அலெக்சாண்டர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    திண்டுக்கல் அணி கோவை (5 விக்கெட்), திருப்பூர் (9 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. திருச்சி (8 விக்கெட்),நெல்லை (8 விக்கெட்), மதுரை (7 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்.

    எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆதித்ய கணேஷ் 13 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.  

    • முதலில் விளையாடிய நெல்லை அணியில் பாபா அபராஜித் 92 அடித்தார்.
    • திருச்சி அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது நெல்லை.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

    நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது. இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்குகிறது.

    • நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது.
    • திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை உறுதி செய்ய நெல்லை அணி தீவிரம் காட்டும்.

    ரஹில் ஷா தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    • பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார்.
    • நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை என தோல்வி குறித்து சேலம் அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.

    கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேலம் அணிக்கு 136 ரன் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது.

    கேப்டன் அணிருதா 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாப்னா 29 ரன்னும், அரவிந்த் 25 ரன்னும் எடுத்தனர். டாரியல் பெராரியோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    ரவி கார்த்திகேயன் அதிகபட்சமாக 25 பந்தில் 36 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மோகன் பிரசாத் 3 விக்கெட்டும் எம்.முகமது, அரவிந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    திருப்பூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றிக்காக பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் மழையால் பிட்சின் தன்மை சற்று மாறியதால் 135 ரன்களே எடுக்க முடிந்தது. இது நல்ல ஸ்கோர் என்று கருதினோம். அதற்கு ஏற்ற வகையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் ஸ்பார்டன்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறும்போது நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • சேலம் அணி 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
    • திருப்பூர் வீரர் மோகன் பிரசாத் 3 விக்கெட்கள் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். அத்துடன் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர்.

    சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

    அந்த அணியின் தொடக்க வீரர் கோபிநாத் 5 ரன்னுடன் வெளியேறினார். கவின் 14 ரன்னும்,கணேஷ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ரவி கார்த்திகேயன் 36 ரன்கள் அடித்தார். சேலம் அணி 19.2 ஓவர் முடிவில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதனையடுத்து திருப்பூர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.திருப்பூர் அணி சார்பில் அதிபட்சமாக மோகன் பிரசாத் 3 விக்கெட்களும், முகமது அரவிந்த் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். 

    • திருப்பூர் அணி 6.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். அத்துடன் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

    • இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன.
    • திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது. சேலம் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துள்ளது.

    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
    • எங்களின் பல வெற்றிக்கு ஜெகதீசனின் பங்களிப்பு இருந்துள்ளது.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது வெற்றியை பெற்றது.

    கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் தன்வர் 12 பந்தில் 28 ரன்னும் (2பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சாய் கிஷோர் 2 விக்கெட்டும் , சித்தார்த், அலெக்சாண்டர், ஹரீஷ் குமார், சோனு யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    என். ஜெகதீசன் 51 பந்தில் 75 ரன்னும் ( 6 பவுண்டரி, 3 சிக்சர்) , சாய் கிஷோர் 33 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டும், அஜித்ராம், பாலு சூர்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    சிறப்பான பேட்டிங் மூலம் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் பல துறைகளில் இன்னும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது. ஜெகதீசன் எங்கள் அணியின் தூணாக செயல்படுகிறார். எங்களின் பல வெற்றிக்கு அவரது பங்களிப்பு இருந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சாய்கிஷோர் கூறும்போது, 'இந்த வெற்றியை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சீசனில் எனது பேட்டிங் மேம்பட்டு இருக்கிறது. எனது பயிற்சியாளர் பிரசன்னாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    கோவை கிங்ஸ் 3-வது தோல்வியை தழுவியது. இந்த அணி கேப்டன் ஷாருக்கான் கூறும்போது, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்து வீச்சில் போதுமான திறனை வெளிப்படுத்த தவறிவிட்டோம்.

    இந்த ஆடுகளத்தில் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களம் இறக்கி இருந்தால் நிலமை மாறி இருக்கலாம் என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது போட்டியிடும் திண்டுக்கல் டிராகன்சை 16-ந் தேதி எதிர்கொள்கிறது. கோவை அணி திருப்பூர் தமிழன்சை அதே தினத்தில் சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி 2-வது வெற்றிக்காகவும், சேலம் அணி முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    • கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
    • ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து வருகிறது.

    இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை அணியிடம் சூப்பர் ஓவரிலும், 2-வது ஆட்டத்தில் மதுரையிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

    திருச்சிக்கு எதிரான 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாய் கிஷோர், ஹரீஷ்குமார், சித்தார்த், சந்தீவ் வாரியர், அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 203 ரன் குவித்தது. இதனால் அந்த உத்வேகத்துடன் இன்று களம் இறங்கும் அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    முதல் 2 ஆட்டத்தில் (திண்டுக்கல், மதுரைக்கு எதிராக) கோவை அணி தோற்றது. கடந்த இரண்டு லீக் ஆட்டத்தில் (சேலம், திருச்சி) வெற்றி பெற்றது.

    அந்த அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சாய் சுதர்சன், சுரேஷ்குமார், அபிஷேக் தன்வார், விக்னேஷ், பாலு சூர்யா, அஜித் ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    கோவை அணி 3-வது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    • நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை.
    • 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடைபெற்றது.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 10-ந் தேதி தொடங்குகிறது. கோவையில் முதல் முறையாக டி. என்.பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை. தான் மோதிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் , 8 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சையும், 26 ரன்னில் மதுரை பாந்தர்சையும் தோற்கடித்தது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் திண்டுக்கல்லிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. 2-வது வெற்றியை பெறப்போவது திருச்சியா ? கோவையா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
    • அருண் கார்த்திக்-பால்சந்தர் அனிருத் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது. அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் விக்னேஷ் அய்யர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், அருண் கார்த்திக்-பால்சந்தர் அனிருத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

    அருண் கார்த்திக் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பால்சந்தர் அனிருத் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்க்க, மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. 

    ×