என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அணை"
- திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.விடுபட்ட பகுதிகளில் காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி மற்றும் பருவ மழைகள் ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்களினால் நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் 4ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று நீர் வழங்க அதிகாரிகள், திட்ட குழு ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் 44.82 அடியாகவும், மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில் 1,322.93 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
அதிகாரிகள் கூறுகையில், நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதி, நீர்மட்டம் 54 அடி வரை உயர வாய்ப்புள்ளது. ஒரு சுற்றுக்கு, 1,900 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும். பருவ மழை, அணைகள் நீர் இருப்பை பொருத்து கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.
- பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
- அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,512 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாயில் நடைபெற்ற புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அணையில் இருந்து அனேகமாக வருகிற 15-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொ டர்ந்து குறைந்து வந்தது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 77.27 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடி 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅ டியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.05 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்து காணப்பட்டது
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.36 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொ ள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீல கிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறை ந்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 77.57 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 387 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்கால் பாசன த்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாச னத்திற்கு 400 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.19 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.36 கனஅடியாக உள்ளது.
- பவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்து காணப்பட்டது
- பவானி சாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் இரண்டு நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வந்தது.
ஆனால் மழை பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 78.29 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 207 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.47 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.42 கனஅடியாக உள்ளது.
- அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.
இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. அடையாமடை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் மழை பெய்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சற்று வெப்பம் தணிந்து காணப்ப டுகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 656 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் ணஇருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.20 அடியாக உள்ளது. அணைக்கு 547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 4, நாகர்கோ வில் 2.4, புத்தன்அணை 4.8, சுருளோடு 5.2, சிற்றார் 2- 2, தக்கலை 4.4, குளச்சல் 4, இரணியல் 10.2, பாலமோர் 17.4, மாம்பழத்துறையாறு 7.6, திற்பரப்பு 5.3, கோழிப்போர்விளை 13.5, அடையாமடை 19.1, முக்கடல் 4.2.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர் செய்யப்பட்டுள்ள கன்னிபூ கடைமடை பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள நிலையில் மழை பெய்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் நெற்பயிரகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவரகள் கவலை அடைந்துள்ளனர்.
- கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.
- பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனாறு, கூட்டாறு , சின்னாற்றில் கிடைக்கும் தண்ணீர் தூவானம் அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 88.19 அடிக்கு நீர்மட்டம் இருந்தது .தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. 700 கன அடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
தற்போது அணையில் 55.88 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் தற்போது 55 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் இருந்தாலும் இது போதுமானதாக இல்லை . இந்த மாதத்தில் அணை நிரம்பி வழிந்து இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இனி பெய்யுமா என தெரியவில்லை. பெய்தாலும் அணை நிரம்புவது கடினம்தான். இன்னும் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்க வேண்டும். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றும் போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். கோடைகாலத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அமராவதி அணையை நம்பி உள்ள நெல், கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே சாகுபடி குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
அமராவதி அணைப்பகுதியில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டு ஒரே நாள் மட்டும் 7.75 மி.மீ., மழை பெய்தது. அதே போல் மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை பொழிவு 156.04 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 266.19 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆனால் நடப்பாண்டு ஜூன் 14.73 மி.மீ., ஜூலை 12.76 மி.மீ., ஆகஸ்டு 6.24 மி.மீ., என இதுவரை 33.76 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் வேளாண் பயிர் சாகுபடி துவக்குவதிலும், நிலைப்பயிர்களை காப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 399.48 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இதனை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில், குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், குந்தா நீர் மின்திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர், மின்சார உற்பத்திக்கு பின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்க பாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனால், குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளன.
இந்நிலையில், குந்தா, கெத்தை அணைகளை தூர் வராததால் சேறு மற்றும் சகதிகள் நிறைந்துள்ளது.மேலும் மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் கலக்கிறது. இதனால், மேற்படி அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது.
இதனால், குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும், சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது
- கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ய வில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம், பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஏற்கனவே கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது.
தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. அணை தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையும் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இதனால் அணை குளம் போல் காட்சிய ளிக்கிறது.
அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். குடிநீர் பஞ்சமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலை விரித்து ஆடுகிறது. குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை 332 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 103.9 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. வழக்கத்தை விட 69 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையை தண்ணீரை நம்பி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 6000 ஹெக்டேரில் சாகுபடி பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
பறக்கை, சுசீந்திரம் பகுதிகளில் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் இன்னும் நெற்பயிர் கள் தண்ணீர் இன்றிவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடைமடை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 236 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 706 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் புத்தனார் சானல் மற்றும் பாசன சானல்களில் ஷிப்டுமுறை யில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.90 அடியாக உள்ளது. அணைக்கு 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.70 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.60 அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. மாம்பழத்துறையாறு அணை குறைந்த அளவு தண்ணீருடன் வறண்டு காணப்படுகிறது.
- ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெளியிடபட்டுள்ளது
- வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடி ப்பு பகுதியில் மழைப்பொ ழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வரு கிறது. இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 674 கன அடியாக குறைந்து ள்ளது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி யும் என மொத்தம் அணை யில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகி றது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.11 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 18.53 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.
- பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1014 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்