search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தென்காசி அடுத்த வாசுதேவநல்லூைர சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் வெள்ளவேடு அடுத்த கொத்தியம்பாக்கம் அருகே உள்ள கம்மவார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் தங்கி கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இத்தனை வயது ஆனாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார்.
    • உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகலாந்து:

    இன்றளவில் 90 வயதை தாண்டினாலே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணம் அடைந்தார். இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார். கண்கள் நன்றாக தெரிந்தது. காதுகளும் நன்றாக கேட்டது. இது வரை இவர் ஆஸ்பத்திரி பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    புபிரே புகா மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது35). இவர் தனது வாயலில் உள்ள மல்லிகை பூச்செடிக்கு நேற்று முன்தினம் காலை பில்லு மருந்து அடித்தார்.இதனால் திடீரென மயங்கி விழுந்தார்.

    எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி பரிதாபமாக பலியானார்.

    இந்த சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • போட்டியின் போது மைதானத்தில் முஸ்தபா சைல்லா திடீரென கீழே விழுந்தார்.
    • மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

    கோஸ்ட்:

    ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார்.

    இந்நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கீழே சரிந்து விழுந்தார்.

    உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த வீரருக்கு வயது 21 ஆகும். கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து கால்பந்து வீரர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார்.
    • 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்கா மாவட்டம், சிலக் கலூரி பேட்டை, பசுமலை சேர்ந்தவர் பஷீர் பாஷா. இவரது மகன் பிரோஜா கான் (வயது 17).

    இவர் சிலக்கலூரி பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரோஜா கான் உள்ளிட்ட குடும்பத்தினர் உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் அவரது அறைக்குச் சென்று மகனை எழுப்ப முயன்றனர்.

    ஆனால் அவரது உடல் அசைவின்றி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரது வாயில் தண்ணீர் ஊற்றி பார்த்தனர்.

    தண்ணீர் உள்ளே இறங்காததால் சந்தேகம் அடைந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நன்றாக படித்து வந்த தனது மகன் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்தார். ஆனால் திடீரென மாரடைப்பால் இறந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதேபோல் ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், அச்சம் பள்ளி தாண்டா பகுதியை சேர்ந்தவர் தனுஜ் நாயக் (வயது 19). இவரது குடும்பத்தினர் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

    தனுஷ் நாயக் அனந்தபூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்மசி படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனுஜ் நாயக் கபடி விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    தனுஷ் நாயக்கை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் நேற்று இரவு அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் நாயக் பரிதாபமாக இறந்தார்.

    கபடி விளையாடிய போது தனுஜ் நாயக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் கூறினார்.

    40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வந்த நிலையில், ஆந்திராவில் 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களது மகள் மாரியம்மாள்.

    மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தன் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது மாரியம்மாள் வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரை காணவில்லை. இதனால் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாரியம்மாள் என்பது உறுதியானது. மேலும் அவரது உடல் அருகே அவரது மொபட்டும் நின்றது. இதையடுத்து மாரியம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் தச்ச கோடு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது40). இவர் அழகிய மண்டபம் பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் முளகுமூடு பேரூர் சுற்று சூழல் பாசறை செயலா ளராகவும் அருள்தாஸ் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அடிமை மறுவாழ்வு மையத்தில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார். உடனே அவரை அழகிய மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது சம்மந்தமாக அவரது மனைவி ஆலீஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருள்தாஸ், காதல் திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஜோசப் பிராங்கோ, ஜோசப் காஸ்ரே என்ற 2 மகன்கள் உள்ளனர். 

    • மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்து விட்டு சாலையோரம் உடலை வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
    • கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போரூர்:

    வானகரம், பைபாஸ் சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் தனியார் கல்லூரி வளாகம் அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார் ? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்து விட்டு சாலையோரம் உடலை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக வானகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.
    • பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் சோமனூா் அருகே செந்தில் நகரை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 78). இவா் திருப்பூா், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா் சங்கத் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாா். இவா் தலைமையில் பல்வேறு போராட்டங்களை விசைத்தறியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

    பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாா். இந்த தகவல் அவரது மனைவி கருப்பாத்தாளிடம் (72) உறவினா்கள் மூலம் நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

    செய்தியை கேட்டதும் கருப்பாத்தாள் அதிா்ச்சியில் மயக்கம் அடைந்தாா். தொடா்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    இதையடுத்து தம்பதி உடல்கள் திருப்பூா் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன. கணவன், மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்ததால் விசைத்தறியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ஏராளமானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா். இவா்களது மறைவுக்கு ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    பழனிசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சாமளாபுரம் பேரூராட்சி, இச்சிப்பட்டி, பூமலூர் ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை விசைத்தறிகளை நிறுத்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வி.அய்யம்பாளையம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டனர்
    • சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி பகுதியில், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ராணுவ பாதுகாப்புடன் மூலப்பொருட்களை கொண்டு செல்லும் முக்கிய பாதுகாப்பு நுழைவு வாயிலில் உள்ளது. இதன் அருகே 110-வோல்டேஜ் கொண்ட உயர் மின் வழித்தடம் உள்ளது. அதன் மின் கம்பத்தில் 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மின் கம்பத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவ மணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? தற்கொலை செய்தாரா? என்ன காரணம்? என மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
    • உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் நேற்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா (வயது 83) உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உபயதுல்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலமாக சென்று அஞ்சலி

    முன்னதாக தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் இன்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ , தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகர பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், அருளானந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பின்னர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    டி.ஆர்.பாலு எம்.பி

    இதேபோல் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எஸ்.எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உபயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

    இரங்கல் பேரணி

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் உபயதுல்லா மறைவையொட்டி தஞ்சையில் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில் இரங்கல் பேரணி இன்று நடைபெற்றது.

    இதில் வெற்றி தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் செழியன், மாவட்ட பொறுப்பாளர் ஆசிப் அலி, முனைவர் இளமுருகு, வெற்றி தமிழர் பேரவையின் நிர்வாகிகள் கவிஞர் இனியன், புலவர் சிவனேசன், ராகவ மகேஷ், மணிபாலா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது50). கல்பாக்கம் நகரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பத்தை மர்மநபர்கள் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×