என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆந்திரா"
- குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை JCB-யில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், விஜயவாடாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
Vijayawada: విజయవాడలో వరద బాధితులకు డ్రోన్ ద్వారా ఆహార పంపిణీ#vijayawada #Drone #andhrapradeshnews #TeluguNews pic.twitter.com/OEAOUmDWQZ
— Eenadu (@eenadulivenews) September 2, 2024
- குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
- கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
இந்நிலையில், இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை ஜே.சி.பி. வாகனத்தில் சென்று ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.#ChandrababuNaidu | #VijayawadaFloods | #AndhraRains | #DailyThanthi pic.twitter.com/MACO535xj0
— DailyThanthi (@dinathanthi) September 2, 2024
- பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.
- சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை:
ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. சில ரெயில்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலானா ரெயில்கள் ஆந்திரா வழியாத்தான் கடந்து செல்ல வேண்டும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
தண்ட வாளத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஐதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ் பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா-பெங்களூரு சேஷாத்திரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப் பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.
முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்ட்ரல் நிலையத்தில் தங்கி உள்ளனர்.
பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல் நிலையத்தில் 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் தகவல் கிடைக்கும்.
இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஆந்திரா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்களை நிலையத்திற்குள் விடாமல் முன் பகுதியிலே ரெயில்வே ஊழியர்கள் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரெயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 'கியூ ஆர் கோடு' வசதியை சென்ட்ரல் நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்திருந்தனர்.
இதனை ஸ்கேன் செய்தால் ரெயில்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரெயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டால் நெரிசல் ஏற்படும் எனக் கருதி முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
- ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.
- அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு உள்ளது. பல கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய ஒரே வேண்டுகோள் அவசரமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
வைரஸ் காய்ச்சல் அபாயம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது எங்கள் ரசிகர்கள் எப்போதும் மக்கள் மற்றும் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் தற்போதும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
- கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
வீடு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மொட்டை மாடியில் அத்தியாவசிய பொருட்களை மாடியில் வைத்துவிட்டு, ஒருவர் நடந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
VIDEO | Houses in Telangana's Khammam district submerged under water following rainfall-induced floods in the region earlier today. (Source: Third Party) pic.twitter.com/zyz4ydQeOn
— Press Trust of India (@PTI_News) September 1, 2024
- ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
- ஐதராபாத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அமராவதி:
குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இவை உள்பட 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 294 கிராமங்களில் வசித்து வரும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.
அங்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 17 குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் 100 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
கனமழையால் 62,644 ஹெக்டேர் நெல்பயிர்கள், 7,218 ஹெக்டர் பழத்தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக மாநில உள்துறை மந்திரி வெங்கலப்புடி அனிதா தெரிவித்தார்.
ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் 99 ரெயில்களை ரத்து செய்தும், 4 ரெயில்களை பாதியளவு ரத்து செய்தும் தெற்கு மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. 54 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு உள்ளன.
மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டணம், அசாமில் இருந்து தலா 3 குழுவினர் ஐதராபாத் விரைந்தனர்.
இந்த மாவட்டத்தில் சுமார் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் மாயமாகினர்.
இதனால் ஐதராபாத் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் ஐதராபாத், கம்மம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பேச்சுவார்த்தையின்போது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
- ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
- 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது.
திருப்பதி:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு அருகில், விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடந்தது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது. ஆந்திராவில் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது.
பல மாவட்டங்களில் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதில் விஜயவாடா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் தேங்க வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் உட்பட ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழியாக பாயும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆறு குளங்கள் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் கயிறுகளை கட்டி மீட்டனர்.
விஜய வாடா, மொகல் ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரண மாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரை மட்டமாகியது.
இதில் வீட்டில் தூங்கிய வர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக்,சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார்.
பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார்.
ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ரெயில் தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் விஜயவாடா-காசிபேட்டை மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழை பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத் திலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஐதராபாத் உள்ளிட்ட நதரங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்க ளுக்கு இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இன்று தெலுங்கானாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.
- கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர்.
- எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் ராய் சோட்டி குவ்வள செருவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. லாரி மோதியதில் 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோல் லீக் ஆகியுள்ளது.
- தீ மளமளவென அருகில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வேகமாக பரவியது.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் பீடி பிடித்தவரின் அலட்சியத்தால் ஒரு சில நிமிடங்களில் ஆந்திராவில் கடை ஒன்று சாம்பலாகியுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நபர் ஒருவர் ஐந்து லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோல் லீக் ஆகியுள்ளது. இதனால், பெட்ரோல் பங்க் சாலையில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது.
அப்போது, சாலையின் கடையோரம் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பீடி பிடித்துள்ளார். அப்போது, தீ பீடியில் பற்ற வைத்து தீக்குச்சியை சாலையில் எறிந்த நொடி, தீ பற்றிக்கொண்டது.
இதனால், தீ மளமளவென அருகில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வேகமாக பரவியது. அதற்குள், கடையில் தீ பரவி பலத்த சேதமடைந்துள்ளது. அருகில் நின்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
- குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.
கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.
உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி.
- ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார்.
அதன்படி இன்று ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.
காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்