search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு"

    • நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது.
    • சில்லடி கடற்கரையை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்க ப்பட்டுள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

    நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாகையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு, சில்லடி கற்கரையை மேம்படுத்துவது, தமிழ்நாடு ஹோட்டல் புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளநிலை பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் உள்ள 6 இளநிலை பட்டப் படிப்புகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 756 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 79 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில், 287 விளையாட்டு வீரர்கள், 77 மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப்பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஜூலை 1 -ந் தேதி வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவில் 70 விண்ணப்பதாரர்களும், மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 71 விண்ணப்பதாரர்களும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முறையே 6515 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்தது.

    இதன் தொடர்ச்சியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான 20 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் நிரம்பவில்லை.

    மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார். வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, மீன்வளப்பல்கலைக்கழக முதன்மையர் பாலசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.

    • கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
    • கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா முதலிடத்தை பிடித்தார். 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர்.

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் இன்று (ஜூலை 2-ந்தேதி) தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

    மருத்துவ கலந்தாய்வுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கவுன்சிலிங் இந்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பிறகே என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும். கவுன்சிலிங் 4 சுற்றுகளாக குறைந்தது 2 மாதங்கள் நடைபெறும்.

    ஆகஸ்ட் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கினால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்' என்றார்.

    • பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
    • கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.

    இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
    • கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது

    திருப்பூர் : 

    கோவை வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளில் 2,555 இடங்களும் 28 இணைப்பு கல்லூரிகளில் 2,806 இடங்கள் உட்பட மொத்தம் 5,361 இடங்கள் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கான சிறப்பு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம், விளையாட்டு பிரிவில் 20 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 403 பேர் இக்கலந்தாய்வு வாயிலாக சேர்க்கப்படுவார்கள்.

    இதுகுறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 19ந் தேதி முதல் நடந்து வருகிறது. பொது கலந்தாய்வு வரும் வாரம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் கலந்தாய்வு குறைந்த மாணவர்கள் என்பதால் ஆப்லைன் முறையில் நடத்தவுள்ளோம் என்றார்.

    • கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.
    • கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    சென்னை:

    என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கட்ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப் பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    கடந்த ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஆண்டை விட 20 ஆயிரம் பேர் வரை கூடுதலாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் தேர்வில் போட்டி அதிகரித்துள்ளது.

    மொத்தம் 195-ல் இருந்து 170-க்குள் கட்ஆப் மதிப் பெண்ணை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட குறைந்த பட்சம் 2 ஆயிரம் பேர் வரை இந்த ஆண்டு அதிகமாக கவுன்சிங்கில் பங்கேற்கின்றனர்.

    அதனால் 170-க்கு மேல் கட்ஆப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை போன்றே கல்லூரிகள், பாடப்பிரிவுகள் கிடைக்கும்.

    கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத் தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு கிடைத்தது போன்ற கல்லூரிகள், பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு கிடைக்கும். 150-ல் இருந்து 160 பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை விட கட்ஆப் அளவு சற்று அதிகரிக்கும்.

    ஆனால் 100-க்கு மேல் 30 ஆயிரம், 120-க்கும் மேல் 25 ஆயிரம், 140-க்கு மேல் 11 ஆயிரம் என கடந்த ஆண்டை விட அதிகம் பேர் உள்ளதால் இந்த கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    இதற்கு தமிழக என்ஜினீயரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 ஆண்டு கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரி விபரங்களை பார்த்து கொள்வதும் நல்லதாகும்.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் குறையவில்லை. எனவே கட்ஆப் அதிகரித்து என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் போட்டியும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
    • நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்ப ட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி களில் இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. காரைக்கால் மாவட் டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இள நிலை பட்ட படிப்புக ளான பி.ஏ,. பி.காம், பி.எஸ்.சி ஆகிய வகுப்புகளில் சேருவதற்கா ன முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி யது. இந்த கலந்தாய்வு, இம்மாதம் 27-ந் தேதி வரை, காரைக்கால் நேரு நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தேர்வுக் கூடத்தில் நடை பெறும் என்றும், நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான அனுமதி சான்றிதழை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது ஆசாத் ராசா மற்றும் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் மாணவ ர்களுக்கு வழங்கினார்கள்.

    • மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
    • இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) முதல் நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 3ம் கட்ட கலந்தாய்வு 19-ம்தேதி முதல் நடைபெறும்.
    • கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு 19ம்தேதி முதல் நடைபெறும். இதுகுறித்து தளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023-2024ம் கல்வியாண்டிற்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வருகிற 19-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள், கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இளநிலை பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளது.
    • விண்ணப்பித்த மாணவியர்களுக்கு வருகின்ற 19-ந் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ஆம் கல்வியாண்டின் இளநிலை பாடப்பிரிவுகளான பி.பி.ஏ பி.ஏ வரலாறு, பிஎஸ்சி (கணிதம், விஷுவல் கம்யூனிகேஷன், புள்ளியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளது.

    மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவியர்கள் கல்லூரியில் நேரடியாக இன்று 16.6.2023 மற்றும் 17.6.2023 ஆகிய நாட்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கு மாறும் மற்றும் பி.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு) பி.பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், விஷுவல் கம்யூனிகேஷன்) ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இணைய வழியில் விண்ணப்பித்த மாணவியர்கள் வருகின்ற 19.6.2023 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கீதா தெரிவித்துள்ளார்.

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×