search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனுதவி"

    • சிவகாசியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளா நடக்கிறது.
    • இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2வது தளத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (17-ந் தேதி) முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய- மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 லட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
    • இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி வரவேற்றார். இதில் ஊமச்சிகுளம் இந்தியன் வங்கி கிளை மேலாளர், பொதும்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 62 குழுக்களுக்கு ரூ.3.46 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. 23 குழுக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தர மதிப்பீடு செய்யப்பட்டது. முடிவில் உதவி திட்ட அலுவலர் மரியா மகதேவ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கருப்பூரில் 40 பெண் தொழில் முனைவோருக்கான 10 நாள் உணவு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியாளர்கள் பயிற்சியை நிறைவு செய்து வங்கி கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மற்றும் கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய 40 பெண் தொழில் முனைவோருக்கான 10 நாள் உணவு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இப்பயிற்சி முகமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கல்யாணபுரம் கிளை முதன்மை மேலாளர் சக்கரவர்த்தி குத்துவிளக்கு ஏற்றிதொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் பேசுகையில் பயிற்சி நிறைவுக்கு பின் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழில் தொடங்குவதற்கான வங்கி கடனுதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், பயிற்சியாளர்கள் பயிற்சியை நிறைவு செய்து வங்கி கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கவ்டெசி தொண்டு நிறுவனமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையமும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

    விழாவில் பயிற்சியின் செயல்பாடுகள் குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் உதவி இயக்குனர் லெட்சுமி பேசினார். கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார். கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கருணாமூர்த்தி, கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை காசாளர் ஆரோக்கியதாஸ், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கணேஷ்வரி, ஆர்த்தி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
    • தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.

    முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.

    தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சுயதொழில் தொடங்க 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் சுய தொழில் தொடங்கும் விதமாக கடன் உதவி வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

    81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன் மற்றும் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆலிஸ்வாஸ், மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×