search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    • தாய்க்கு உதவி செய்ய சென்ற மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ஒரு பெண், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில், ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக காரைக்குடி, பள்ளத்தூரில் உள்ள உறவினர் ராஜபாண்டி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது என்னை பராமரிப்பதற்காக 14 வயது மகள் வந்திருந்தார்.

    இந்த நிலையில் ராஜபாண்டி (வயது 40). இவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக என் மகள் இப்போது கர்ப்பமாக உள்ளார். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் நடந்தது, காரைக்குடி பகுதி என்பதால் இந்த வழக்கை காரைக்குடிக்கு மாற்றுவது என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை போலீசார் எச்சரித்தனர்.
    • இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75) .இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது 2 பவுன் நகை மற்றும் தனது கணவரது சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கிக்கொண்டு தன்னை கவனித்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் புகார்தாரரின் மகன் அன்புவேல் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய 2 பவுன் நகை , 1 லட்சம் பணம் மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

    • 3 தினங்களுக்கு முன்பு காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், காந்திமதியின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 43). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் காந்திமதி (வயது 21) . இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜூலை 6ந்தேதி காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காந்திமதி தனது தாய் ஈஸ்வரியிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்,காந்திமதியின் தாய் ஈஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

    • பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.

    இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தாய்-மகள் திடீர் மாயமானார்கள்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்ல ங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர்களது மகள் நந்தினி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாய்-மகள் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாரிமுத்து சேத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    • விபத்தில் தாய் மகள் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இன்று பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த செல்லம்பகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(34). இவர் மொடக்குறிச்சி பூந்துறை ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு 4 வயதில் சுகுதி என்ற மகள் உள்ளார். நேற்று கோமதி தனது மகளுடன் நரிகாட்டுவலசு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் இரவு தாய் வீட்டில் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வேலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் கருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்திச் செல்வதற்காக கோமதி முயன்றார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் ஏறி அவர்கள் 2 பேரு ம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து மொட க்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோமதி, சுகுதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    3 மாத கர்பிணியாக இருந்த போது கீழே விழுந்ததில் கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த பெண் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்த அனூப் என்பவரின் மனைவி பெத்தனா. மூன்று மாத கர்பிணியாக இருந்த பெத்தனா கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், கோமா நிலைக்கு சென்றார். 

    இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் பேச்சு, இயக்கம் இன்றி படுத்த படுக்கையாகிவிட்ட அவரை, அனூப் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். நிறைமாத கர்பிணி கோமா நிலையில் இருப்பது அவரது குடும்பத்தை துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டே இருந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த 14-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெத்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு எல்வின் என பெயரிட்ட அனூப், தாயிடம் பாலூட்டுவதற்காக குழந்தையை கொடுத்துள்ளார். குழந்தை பால் குடிக்கும் போது, பெத்தனாவின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அனூப் சென்றுள்ளார்.

    “குழந்தை அழும் போதும், பால் குடிக்கும் போதும் பெத்தனாவின் முகத்தில் உணர்ச்சிகள் மாறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையை பார்த்து அவள் சிரிக்கிறாள். விரைவில் எனது மனைவி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என அனூப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
    ×