search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • சுதந்திர தினத்தினை முன்னிட்டு கூகுளின் டூடுல் இன்று மாற்றி அமைத்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

    இந்நிலையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய உயரங்களைக் குறிக்கும் வகையில் வானத்தில் பறக்கும் பட்டங்களுடன் கூடிய டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரப்படுத்தி உள்ளது.

    • கூகுள் நிறுவனம் 2022 பிளாக்‌ஷிப் பிக்சல் போன் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு புது பிளாக்‌ஷிப் மாடல்கள் வெளியீடு வரும் மாதங்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவற்றில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O நிகழ்விலேயே கூகுள் நிறுவனம் இரு பிக்சல் ஸ்மார்ட்போன்களின் டீசரை வெளியிட்டு விட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதே நாளில் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    புதிய பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி விட்டது. மேலும் இவற்றில் அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தத்தில் முந்தைய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போன்களில் சற்றே மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இவை இன்னமும் கேமரா பார் கொண்டிருப்பதோடு, பிக்சல் 6 சீரிசை விட அளவில் சிறியதாக உள்ளன. பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம், மேட் பினிஷ், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது. பிக்சல் 7 சீரிஸ் டிஸ்ப்ளேக்கள் முந்தைய மாடல்களில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அதன்படி புதிய பிக்சல் 7 மாடலில் 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120x1440 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    • கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    விற்பனைக்கு வரும் முன் ரிவ்யூ செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


    பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனமும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் உள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.

    இணைய வசதியே இல்லாமல் இனி ஜிமெயில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும்., பதில் அனுப்பவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்த, முதலில் கூகுள் குரோம் பிரவுசரை டவுன்லோடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.


    முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸை ஓபன் பண்ண வேண்டும். அடுத்து அதில் உள்ள 'Enable offline mail' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன்பின்னர் எத்தனை நாட்களுக்கான ஜிமெயில் மெசேஜ்களை sync செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் 'Save changes' ஆப்ஷனை க்ளிக் செய்த பின் ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்தலாம்.

    • கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
    • கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

    நியூயார்க்:

    பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனம்  சுமார் ரூ.922 கோடி இழப்பீடு தர ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்கா கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்தில், பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அலுவகத்தில், அனுபவம் வாய்ந்த பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், ஊதியம் வழங்குவதிலும் வேறுபாடும் காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. மமான பதவிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியத்தையே கூகுள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுகுறித்து 2017ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 2013ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

    மேலும் அலுவலகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பாலியல் சமன்பாட்டுடன் இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

    இதேபோல கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    ஆண்ட்ராய்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி இண்டெர்நெட் பயன்பாட்டில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் முயற்சித்ததாக கூறி ஐரோப்பிய யூனியன் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #Google #EU
    பிரசெல்ஸ்:

    பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,  இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 4.3 பில்லியன் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 34 ஆயிரம் கோடி)  அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டி வரும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. 

    இந்த அபராத தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
    கதுவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்த விவரங்களை வெளியிட்ட கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #delhihighcourt #kathuacase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களிடம் டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது. ஆனால் கதுவா கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

    இதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், கூகுள் மற்றும் மற்ற சமூக ஊடகங்கள் இது போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டிற்கு கேடுவிளைவிக்கின்றனர். இந்தியாவிற்கு என்று தனிப்பெருமை உள்ளது.

    சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்டது அவள் குடும்பம் மற்றும் நாட்டிற்கு செய்யும் அநியாயமாகும். இதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

    இதற்குமுன் கதுவா சிறுமி குறித்து விவரங்களை வெளியிட்ட பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #delhihighcourt #kathuacase

    ×