search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 72). இவர் கடந்த மாதம் 24-ந்தேதி பெரம்பலூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் அவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த வேலாயுதத்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை பின்புறம் உள்ள ஓட்டர் தெருவில் வசித்து வந்தவர் குமார் மகன் நீலகண்டன் (வயது 26). இவர் மீது கொலை உள்ளிட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இவர் பெயர் உள்ளது.

    இந்நிலையில் நீலகண்டன் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் - துறையூர் சாலையில் அம்மாபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அபபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபதத்து நேரிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து நீலகண்டன் உயிரிழந்தார்.

    தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

    • ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

    கரூர்

    குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் (வயது 54). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரமேஷ்ராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தனது தம்பி வெங்கடேஷ்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ்ராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ஆசிட்டை குடித்து விட்டாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேஷ்ராஜ் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் 1-வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் மணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் என்ஜினீயரிங் ஓர்க்ஸ் கடையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா(வயது 19) என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் முடிந்தது. தற்போது சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணியளவில் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வயிற்றில் இருந்த ஆண்குழந்தையும் இறந்து விட்டது.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கீதாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • விஷ வண்டுகள் கடித்து பசுமாடு உயிரிழந்தது
    • மாடுகள் இரண்டும் மேய்ந்து கொண்டிருந்தன.

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்ன வளையம் தெற்கு தெருவில் அடிக்கடி கால்நடைகள் மற்றும் பொதுமக்களை துரத்தி விஷ வண்டுகள் கடித்து விடுகின்றன.

    அரியலூர் மாவட்டம் சின்ன வளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் செல்வராஜ். இவருடைய மாடுகள் இரண்டும் அவரது வீட்டு தோட்டத்திற்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் மாடுகளை கடித்தன. இதில் மாடுகள் அரண்டு ஓடுவதைக் கண்ட பொதுமக்களும் வண்டுகள் துரத்துவதை கண்டு ஓடினர். வண்டுகள் கடித்து ஒரு மாடு இறந்தது மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் 20 அடி உயரத்தில் பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    • நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.என்.பாளையம் 

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் லட்சுமிபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் சகிலாமணி (56), இவரது கணவர் அழகிரிசாமி, இவர்களுக்கு திருமணமாகி கோவிந்தராஜ் (33) என்ற மகன் உள்ளார்.

    சகிலாமணியின் கணவர் கடந்த 6- வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார், இந்நிலையில் நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்க்கையில் பாம்பு கடித்து விட்டதாக அறிந்து கொண்டு, பாம்பை அடித்து கொன்ற உறவினர்கள், சகிலாமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்திருந்த சகிலாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
    • மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தாராபுரத்தனூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வீட்டின் அருகே மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.
    • பணியில் இருந்த போது ஏற்பட்ட சோகம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்கலம் வரை செல்லக்கூடிய அரசு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தைச் சார்ந்த கனகசபை மகன் புருஷோத்தமன் (வயது 58) என்பவர் இயக்கியுள்ளார்.

    பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அப்பொழுது ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர் நகர் பேருந்தும் நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை இயக்க முற்பட்ட பொழுது திடீரென்று ஓட்டுநர் புருஷோத்தமனுக்கு நெஞ்சு வலி ஏற்படவே அதே இடத்தில் துடி துடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதனை பார்த்த நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    உடனடியாக இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் இருக்கும் போது மாரடைப்பு வந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

    • திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
    • அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55).

    துணை ராணுவபடையில் போலீசாக வேலைபார்த்து ஓய்பெற்றவர்.

    இவர் வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலையில் சென்றபோது காரைநகர் பகுதியில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.

    இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயரிழந்தார்.

    இது குறித்து கீழையூர் போல் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தார்
    • பரோலில் வெளியே வந்தவர்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பெரியார்நகர் ராசு மகன் சரவணன்(வயது 40). இரட்டை ஆயுள் தண்டனை கைதியான இவர், பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு வயிற்றுவலி ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பரோலில் வந்த கைதி உயிரிழந்த விவகாரம் பொன்னமராவதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

    • தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி, 

    கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.

    அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

    • சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு.
    • 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

    வேளச்சேரி:

    செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கங்கையம்மாள் (வயது 85). இவர் அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென கங்கையம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கங்கையம்மாள் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டு ரோட்டில் வாலிபர்கள் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியானவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×