search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • வேன் கவிழ்ந்து விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
    • சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    சிவகங்கை

    புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது36). மினிவேன் டிரைவரான இவர் சம்பவத் தன்று சிவகங்கைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். சிவகங்கை அருகே கீழக்கவனவயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வேன் சாலையோ ரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சுப்பிரமணி, ஜெயக்குமார், சோணமுத்து, சொர்ணராஜ், முத்துக்குமார், சுந்தர் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இளையான்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(35). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆடு குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த டேவிட் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை குட்டித் திண்ணி இந்திரா நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வாணியங்குடிக்கு சென்ற னர். அப்போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாய மடைந்தனர். சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • பலத்த காயமடைந்த விஜய நிர்மலாவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
    • போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கூடலூர் அருகே குந்தலாடி பகுதியை சேர்ந்தவர் விஜய நிர்மலா (வயது 51). இந்நிலையில் அவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் கூடலூர்-குந்தலாடி வழியாக அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    சிறிது தூரம் சென்ற நிலையில், அப்பகுதிக்கு திடீரென காட்டு யானை ஒன்று வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த காட்டுயானை அவரை திடீரென தாக்கியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
    • படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் தமிழ்வளவன் (வயது 28).

    இவர் வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார்.

    இந்நிலையில் வில்லிய வரம்பலில் நேற்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சுவாமி புறப்பாடு நடந்தது.

    இதனை தமிழ்வளவன் கோவில் சுவர் மீது ஏறி வேடிக்கை பார்ப்பதற்காக மண்டபத்தில் இருந்த பொம்மையை பிடித்துக் கொண்டு ஏறி உள்ளார்.

    இதில் பொம்மை உடைந்து எதிர்பாராத விதமாக வளவன் தவறி விழுந்தார்.

    தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியில் தமிழ்வளவன் இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் நிதி நிறுவனத்தில் அருண்குமார் ஊழியராக உள்ளார்.
    • அருண்குமார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    களக்காடு:

    கல்லிடைகுறிச்சி குமாரகோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். நேற்று இவரும், அதே ஊரை சேர்ந்த சக்திவேலும் (23) மோட்டார் சைக்கிளில் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பத்மநேரி அருகே உள்ள பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருண்குமாரும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அருண்குமார் நெல்லை அரசு மருத்துவமனையிலும், சக்திவேல் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்ட னர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த கார் பஸ் மீது மோதியது.
    • இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

     செஞ்சியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் கடலாடி குளம் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே திருவண்ணா மலை யில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மகன் கல்விக்கரசன் (வயது 26) சிவபெருமான் மனைவி ஆதிலட்சுமி வயது( 50), அன்பரசன் மகன் தனிய ரசன் (வயது 30)மண்ணாங் கட்டி மகன் செல்வகுமார் (வயது 43) செல்வகுமார் மனைவி கவுசல்யா (வயது 35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்தவர்கள் திருவண்ணா மலையில் கிரிவலம் முடித்துக் கொண்டு மீண்டும் புதுவைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகி றார்கள்.

    • இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, பைபாஸ் ரோடு சந்திப்பில் வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, அதி வேகமாக வந்த கார் மோதியது.
    • இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை வரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.   இந்நிலையில், இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை - புல்லூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, புதிய பைபாஸ் சாலையில் அதி வேகமாக வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் உள்பட மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், விபத்தில் இறந்த முதியவர் யார்?, படுகாயமடைந்தவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • எர்ணாகுளத்தில் இருந்து நேற்று ஒரு மினி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மன்னார்குடி:

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததுமு விக்கிர பாண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விக்கிர பாண்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
    • விபத்தில் மோட் டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    கன்னியாகுமரி :

    ஈத்தாமொழி அருகே உள்ள தெற்கு வள்ளியா விளை பகுதியைச் சேர்ந்த வர் நவீன் (வயது 23). இவர் நாகர்கோவில் அருகே தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரு கிறார்.

    சம்பவத்தன்று நவீன், தனது உறவினர் ரமேஷிற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில், ரமேஷின் மனைவி அஜிதா(37), அவரது மகள் ரஸ்தியா (6), மகன் நவனேஷ் (7) ஆகியோருடன் குளச்சல் பள்ளி முக்கில் இருக்கும் பூங்காவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    குளச்சல் அருகே வெட்டுமடை பகுதியில் சென்றபோது பின்னால் ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்தக் கார் எதிர்பாராதவிதமாக நவீன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட் டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப் பட்ட பிறகு குழந்தை ரஸ்தியா, அஜிதா இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் கொண்டு செல்லப்பட்டனர். நவீன் மற்றும் நவனேஷ் நாகர்கோ வில் தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை நடத்தி பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சகாயராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள னர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.
    • விபத்தில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கருமர மேஸ்திரி தெருவை சார்ந்த ரகீம் பேக் மகன் பாரூக் 27, தி.மு.க 8-வது வார்டு பிரதிநிதி அன்சாரி மகன் முகமது ரியாஸ் (19) பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் முகமது ரியாசை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு நேற்று சேலத்தில் இருந்து விழுப்புரம் வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.

    அரசூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் தனியார் பங்க் அருகே செல்லும் பொழுது அரசூர் இந்திரா நகரை சார்ந்த புனிதவதி (40) சாலையை கடக்க முயன்ற போது பாரூக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புனிதவதி மீது மோதி கீழே விழுந்தது. இதில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காய மடைந்த பாரூக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர். அங்கு வரும் வழியிலேயே பாரூக் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த முகமது ரியாஸ், புனிதவதி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • மணி தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.
    • பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையி லிருந்து மோட்டார் சைக்கி ளை பெட்ரோல் போடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் எதிரே திரும்பிய போது அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .

    இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (49) மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி அய்யப்பனை தாக்கியது.
    • அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

     வால்பாறை,

    வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருபவர் அய்யப்பன் (57). இவர் நேற்று இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிசனில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி இவரை தாக்கியது. படுகாயம் அடைந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

    • டிரைவர் மீது போலீசார் வழக்கு
    • பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ்நகர் இந்திரா காலனியை சேர்ந்த வர் டேவிட். இவரது மகன் லிஜோ டேவிட் (வயது 23).

    பட்டதாரியான இவர் திங்கள்நகரில் ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கடைக்கு திரும்பி வந்து கொண்டு இருநதார்.

    மடவிளாகம் இறக்கம் பெட்ரோல் பங்க் அருகில் வரும் போது பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்து காயமடைந்த லிஜோ டேவிட்டை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தாயார் லிசி டேனிபாய், இரணியல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவரான கிள்ளியூர் அஜிகுமார் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ×