என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209230"
- கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர்
- நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பார்வதி புரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பார்சல் வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பலியா னவர் கருங்கல் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. பலியான பிரதீஸ் கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து விட்டு வீட்டிற்கு திருப்பும் போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
பலியான பிரதீஸ் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப் பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
- இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்ததாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
- தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய் மகளை கொலை செய்து 60 தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். பேரன் மூவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஐ.ஜி. துரை சம்பவம் நடந்த நாளிலிருந்து தேவகோட்டை பகுதிகளில் முகாமிட்டு அவரது மேற்பார்வையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து சட்ட ஒழுங்கு குழு தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ், காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனி படை பிரிவினர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்து. தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
- யார் அவர்? என்று போலீசார் விசாரணை
- பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் கிடந்தார்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் பார் முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக கிடந்த முதியவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவரது பெயர் என்ன? எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
- இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
சேலம்:
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் வெள்ளை, காபி கலரில் கோடு ேபாட்ட ரெடிமேட அரைகை சட்டை, பச்சை, கருப்பு நிற பாக்கெட் வைத்த டிரவுசர் அணிந்திருந்தார். இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து மோகனூர் ரெயில் நிலையத்தின் அதிகாரி சேலம் ரெயில்வே போலீ சாருக்கு த கவல் தெரிவி த்தார். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் உடல் ஆஸ்பத்திரி பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி ஏேதனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி ரெயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் தீவிரம்
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை
நாகர்கோவில்:
நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகள் போன்றவற்றில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் வீட்டின் மீது நேற்று அதிகாலை 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜனதா பிரமுகர் வீடு என நினைத்து தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வருவதும், அதில் ஒருவன் இறங்கி பெட்ரோல் குண்டு வீசுவதும் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
தனிப்படையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் குற்றவாளிகள் பற்றிய அடையாளம் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வைத்து குற்ற வாளிகளை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர். எனவே அவர்களை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளதாக தெரிகிறது.
- கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கடந்த 20-ந்தேதி இதை பார்த்த பொதுமக்கள், சேலம் இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலி பர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
அவர் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் போலீசாருக்கு மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வாலிபர் புளூ நிற பேண்ட், புளூ, ரோஸ்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
- ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).
சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்