search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
    • வாலிபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், கார்த்திக் மற்றும் போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கவிராஜ்(24), அஜித் குமார் (25) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.
    • சந்தேகத்திற்கிடமான வாலிபரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீ சாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஆரோ வில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் குயிலாப் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கிடமான வகை யில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதனை அவர் விற்பனைக் காக வைத்திருந்ததும் போலீ சாருக்கு தெரியவந்தது.

    மேலும், இவர் வானூரை அடுத்த காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்லக் குட்டி (வயது 20) என்பதும் போலீசாரின் விசாரணை யில் தெரிந்தது. இதையடுத்து கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், செல்லக் குட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஒரு சிலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சமத்துவபுரம் பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் தப்பியோடினர். தொ டர்ந்து, அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தி தப்பிசென்ற தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவைச்சேர்ந்த ரவிராஜ்(வயது19), வில்பர்ராஜ்(23), ரஞ்சித்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஏராகம்பட்டி சோதனை சாவடியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் கோவர்த்த னாம்பிகை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ து சந்தேகப்ப டும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில, வாழப்பாடி, முத்துப்பட்டி அடுத்த சிஎஸ்ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (25) ஆந்திரா மாநிலத்தில் இருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ,மதுரை ஆகிய பகுதிகளுக்கு கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து கார், 45 கிலோ கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தமிழ்ச் செல்வனை செய்து விசா ரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தமிழ்ச்செல்வனின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினரை, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பாராட்டினார். 

    • சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது,   கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

    • மோகன்ராஜ் (வயது 31). இவர் திருக்கோவிலூர் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ் (வயது 31).

    இவர் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் செங்கனான்கொள்ளை கிராம பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஜி .அரியூர்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் எதிரே மெயின் ரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சூர்யாவை( வயது 23 )போலீசார் கைது செய்து சோதனை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் மீது திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    • .சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பிரபல ரவுடி சிவா என்ற சிவராஜிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் எம்.எம் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவா என்கிற சிவராஜ் (வயது 26) என்பதும், அவரிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை சிதம்பரம் நகர போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    • அவினாசி போலீசார் சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.
    • 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி :

    அவினாசிஅருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியைஅடுத்து பழங்கறை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சை குமார் (வயது 24) மற்றும் பவன்குமார்(28) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்தததும் தெரியவந்தது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பிரபாகரன் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, வடபாகம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (29) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா சிக்கியது.
    • 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மாட்டுத்தாவணி போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தனர்.அவர்களிடம் 8 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் தெற்குவாசல் பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சையது இப்ராஹிம் (வயது23), சோலை அழகுபுரம் குருசாமி மகன் சசிகுமார்(18), ஒத்தப்பட்டி காட்டு நாயக்கர் தெரு தினகரன் மகன் சுந்தரபாண்டி(19) என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய எண்ணூர் வள்ளுவர் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். ரைபிள் கிளப் அருகே 7 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையே ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது 830 கிலோ குட்கா, 7 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    6 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரித்தனர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் காசிராமன்(28), தர்மபுரி மாவட்டம், நாகமரத்துபள்ளம் விக்ரம் ( 35), தர்மபுரி சித்தநல்லி தயாநிதி (32), சிங்கம்புணரி சுந்தரம் நகர், கதிரவன் (42), சிவகங்கை மாவட்டம், மணப்பட்டி வெள்ளைச்சாமி ( 42), திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு சக்திவேல் மகன் ஹரிஷ்பாபு (20) என்பது தெரியவந்தது.

    6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் வினைத் (வயது 24) என்பதும், இவரது மொபட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    • 3 மாதங்களில் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல்; 494 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில், 761 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

    இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள னர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் 31, விருது நகர்-26, திண்டுக்கல்-30, தேனி-41, ராமநாதபுரம்-23, சிவகங்கை-10, நெல்லை-24, தென்காசி-20, தூத்துக் குடி-25, கன்னியாகுமரி-24, நெல்லை மாநகர் -11 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தொடர்பு உடைய 494 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தென்மண்டலத்தில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருட் களுக்கு எதிராக விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கஞ்சாவிற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை கள் தொடரும் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்து உள்ளார். 

    ×