என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 211384"
- குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். தற்போது சீசன் காலம் முடிந்து விட்டது. சாரல் மழை பெய்யவில்லை.
ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் இன்று அருவிகளில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
- ஹில்டன் பள்ளி செயலாள் கிரேஸ் கஸ்தூரி பெல் தொடக்க உரையாற்றினார்.
- பள்ளி முதல்வர் ராபர்ட்பென் ஆண்டறிக்கை வாசித்தார்.
தென்காசி:
பழைய குற்றலாம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33- வது பெற்றோர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹில்டன் பள்ளி செயலாள் கிரேஸ் கஸ்தூரி பெல் தொடக்க உரையாற்றினார். பள்ளி மாணவ தலைவி ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரையை பள்ளியின் இயக்குநர் டாக்டர் பிராம்டன் ரெத்தின பெல் வழங்கியதை தொடர்ந்து பள்ளி முதல்வர் ராபர்ட்பென் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல், நன்றி கூறினார்.
- குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது.
- ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அணை பகுதியில் லேசான மழை பெய்கிறது. நெல்லையில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டுவிட்டு லேசான சாரல் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று காலை சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் காலை வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையிலும் 2 அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குளிக்க முடியாமல் அவர்கள் அருவிக்கரைகளில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
அதே நேரத்தில் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலையில் இருந்தே அருவி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.
ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் தென்காசியில் 19 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 12 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.
அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினார் தனது முழு கொள்ளளவான 132 அடியை எட்டி நிற்கிறது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. ராமநதியில் 79 அடியும், கடனா அணையில் 77 அடியும் நீர் இருப்பு உள்ளது.
- குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.
தென்காசி:
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.
கடந்த 3-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்த நிலையில் இன்று 104.60 அடியை எட்டி உள்ளது. இதேபோல் 3-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் இன்று அதில் 121.95 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைகளுக்கு வினாடிக்கு 2730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை கருப்பாநதி பகுதியில் 27 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல் கடனாவில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது.
கடனா, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பாதுகாப்பு கருதி 2 அடி குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியாகவும், கருப்பாநதி அணையில் 64.96 அடியும் நீர் இருப்பு உள்ளது.
குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அந்த அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. அருவியின் மேல் பகுதியில் கனமழையால் மரத்தடிகள், கட்டைகள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடித்து வரப்படுகின்றன. அவற்றை அருவிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
- விழாவில் தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார்.
- எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
தென்காசி:
குற்றாலத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) நெல்லை 4வது கோட்ட மாநாடு நடந்தது.
தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார். மாநாடுவரவேற்பு குழு மாரியப்பன் வரவேற்றார். சங்கரன்கோவில் கிளை செயலாளர் கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். லிகாய் மாநில தலைவர் பூவலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். எல்.ஐ.சி.முதுநிலை கோட்ட மேலாளர் குமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலைக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், லிகாய் கோட்ட தலைவர் நடராஜன் லிகாய் மாநில செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் தாமோதரன், முன்னாள் கோட்ட தலைவர் அல்அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நெல்லை கோட்ட பொதுசெயலாளர் குழந்தைவேலு வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். நெல்லை கோட்ட பொருளாளர் கென்னடி வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுசெயலாளர் கலாம் நிறைவுரை ஆற்றினார். லிகாய் தென்காசி செயலாளர் கனகராஜ் நன்றிகூறினார்.
கூட்டத்தில் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்களுக்கான குழு காப்பீடு வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும். கேரளா போல் எல்.ஐ.சி. முகவர்களுக்க நலவாரியம் அமைத்திட வேண்டும். எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.
- முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 5-ந் தேதி முதல் சாரல் திருவிழா தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
சாரல் திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று உணவு கலை நிபுணர் பழனி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.
இப்போட்டியில் சுமார் 14 குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களது வீட்டிலேயே பாரம்பரிய உணவுகளான வேர்க்கடலை லட்டு, பொரி அரிசி குழம்பு, வெந்தயக் கலி, ஆடி கும்மாயம், நெல் சோறு, தினை சாக்கோ பால்ஸ், பலாப்பழ மைசூர்பாக், கருப்பு கவுனி சாம்பார் சாதம், குறித்த பல்வேறு பாரம்பரிய உணவுகளை சமைத்தனர்.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டல் ட்ரிசில் சார்பாக முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 குடும்ப தாய்மார்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.500 க்கான கூப்பனையும் வழங்கினார்கள். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, பழனி முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனையடுத்து பளுதூக்கு தல் போட்டி, ஆணழகன் போட்டி மற்றும் யோகா போட்டி மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டது.
அதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
வலு தூக்குதல் போட்டியில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு என்று 9 பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்பு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் பார்வை யாளர்கள் நிறைந்து காணப்பட்டனர்.
- தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளுக்கும், அருவிகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகளவு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளது. இன்று காலை வரை அதிகபட்சமாக கடனாநதி பகுதியில் 12 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவானது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட அணையின் நீர்மட்டம் 91.60 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 95.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2803.94 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1004.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 127.56 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு நீர்மட்டம் 74.10 அடியாகவும் உள்ளது.
அதேபோல் தென்காசி மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அடவிநயினார் அணைநீர்மட்டம் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 116.75 அடியாக உள்ளது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாகவும், 84 அடி உள்ளது.
அணைகள் நிரம்ப இன்னும் 2 அடியே தேவை என்பதால் பாதுகாப்பு கருதி கடனா மற்றும் ராமநதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி சின்னவீர தேவர் தெருவை சேர்ந்தவர் வீரவேல். இவர் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு வழிபடுவதற்காக இன்று வந்தார்.
முன்னதாக அவர்கள் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட அவரது மகன் கோட்டைசாமி (வயது 17) என்பவர் தண்ணீரில் மூழ்கினார்.
உடனடியாக தகவல் அறிந்து அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் மழை குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய 4 அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
சீசன் காரணமாக தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் கடந்த 5 நாட்களாக குளிக்க அனுமதி இல்லாத நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று ஏராளமானோர் அருவிகளில் திரண்டனர்.
மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பாளை, அம்பை, சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அணைகளில் இருந்து ஏற்கனவே நீர் திறக்கப்பட்டு உள்ளதால் கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கார் பருவ நெற்பயிர் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 66.85 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 78.80 அடியும், மணிமுத்தாறு அணையில் 78.20 அடியும் நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 544 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட கும்பாவுருட்டி அருவியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையொட்டி நேற்று மாலை முதல் இன்று காலை வரை குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இன்று குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.
மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆய்குடி, கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் சாரல்மழை விட்டு விட்டு பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. கருப்பாநதியில் 4 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
- குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது.
- அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
கடந்த 27-ந்தேதி மாலை திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் மறுநாள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று மழை ஓய்ந்து அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அருவிக்கரையில் அபாய ஒலி எழுப்பும் வகையில் அலாரம் கருவி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படாமல் உள்ளது. செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகுதான் மெயின் அருவிக்கு அந்த தண்ணீர் வருகிறது.
எனவே அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து அதனை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாமா? என ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.அதன்படி செண்பகாதேவி அருவிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து முறைப்படி கண்காணித்து வந்தால் இது போன்ற அசம்பாவிதங்களை நிச்சயமாக தடுக்க முடியும்.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாளை, களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழை நீர் தேங்கியது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக தென்காசியில் 37 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்வதால் மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நேற்று முன்தினம் மெயின் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதன் காரணமாக நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மெயினருவியில் நுழைவு வாயில் முன்பு பேரிகார்டுகள் வைத்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயினருவியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் மெயினருவி, ஐந்தருவியில் சற்று தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க போலீசார் அனுமதி வழங்கினர். பழைய குற்றாலம் அருவியில் இன்று 3-வது நாளாக தடை நீடித்தது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
- திடீரென அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியதால், 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சீசன் களை கட்டியுள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்றாலம் மெயில் அருவியில் இன்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியதால், குளித்துக்கொண்டிருந்தவர்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவரை மீட்கும் பணி நடைபெறுகிறது.
- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நினைவு விருது வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி அருணாச்சலம் ஹாலில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சென்ட்ரல் சார்பில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி ஸ்ரீ செல்வநாயகம் பாப்பாத்தியம்மாள் நினைவு விருது மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கப்பரிசினை சுழற்கழகம் சார்பில் கர்னல் செல்வநாயகம் சம்சு வழங்கினார்.
சாதனை விருது பெற்ற மாணவி மரியத்தை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர். குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரியின் தலைவர் ராஜகுலசேகர பாண்டியன், செயலாளர் பாபுராஜ், யூத் சர்வீஸ் தலைவர் பெல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்