search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கோட்டூரை சேர்ந்தவர் சதுரகிரி (வயது70). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் சென்று சதுரகிரி மாத்திரைகளை வாங்கி வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உற வினர்கள் அவரை தேடி ப்பார்த்தனர். அப்போது விருதுநகர் பழைய ரெயில்வே காலனி பிளாட்பாரத்தில் சதுரகிரி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • செடிகளை தீ வைத்து எரித்தபோது மளமளவென எரிந்த தீக்குள் எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் சிக்கி உடல் கருகி பலியானார்
    • போலீசார் ஆறுமுகக்கண் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகக்கண் (வயது 75), கூலி தொழிலாளி. நேற்று மதியம் இவர் வீட்டு தோட்டத்தில் காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்தபோது மளமளவென எரிந்த தீக்குள் எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் சிக்கி உடல் கருகி பலியானார்.

    இது குறித்து அவரது மகன் சுப்பிரமணியன் (41) இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகக்கண் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் தனேஷ்குமார்(வயது28). கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவர் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவரால் சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் விரக்தியில் இருந்த தினேஷ்குமார் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மேட்டமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் குணசேகரன் (23). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த குணசேகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் உள்தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்(66). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயது முதியவர், தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
    • மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று முதியவர் கூறியுள்ளார்.

    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் நாத் சிங் (85). இவருக்கு மனைவி, ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். நாத் சிங் மனைவி இறந்ததை அடுத்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நாத் சிங் முதியோர் இல்லத்திற்கு சென்றார்.

    நாத் சிங்குக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு மற்றும் நிலம் உள்ளது. நாத் சிங்கின் மகன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில், தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்த நாத் சிங், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அவர் இறந்த பிறகு அங்கு ஒரு மருத்துவமனை அல்லது பள்ளியைக் கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். நாத் சிங் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். மேலும் மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

    • தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

    ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.

    அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.

    உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • அரசு பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த முதியவர் இறந்தார்.
    • விபத்து குறித்து பெருங்குடி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண் ராஜா (43). இவர் சம்பவத்தன்று மனைவி பவித்ரா, மாமனார் சுரேந்திரநாத், மாமியார் சுகுணா தேவி மற்றும் பவித்ரா, தங்கை சுகன்யா ஆகியோருடன் காரில் மதுரைக்கு வந்தார். அப்போது அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில், வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எனவே அருண் ராஜா உடனடியாக பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சுரேந்திரநாத், பவித்ரா, சுகுணா தேவி, சுகன்யா படுகாயம் அடைந்தனர். அவர்களை வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேந்திரநாத் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருங்குடி போலீசார் சுரேந்திரநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்தவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஊஞ்சபாளையம் அருகே பொன்னேரிப்பட்டி பகுதி சேர்ந்தவர் சின்னப்பகவுண்டர் (வயது 80). விவசாயி. இவர் மாடு வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்னப்பகவுண்டர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில், சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்த தினகரன் (45) என்பவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் இடையே பனந்தோப்பு பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பலன் அளிக்கவில்லை
    • உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் டாஸ் மாக் கடை முன்பு கடந்த மாதம் 31-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை யில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற கோணங்க ளில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன முதிய வரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவை சேர்ந்தவர் பனி பிச்சை (வயது 65). இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் பனி பிச்சை சோகத்தில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பனி பிச்சை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பனி பிச்சை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனி பிச்சையின் மகள் டெல்பின் சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

    பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொடரும் மர்மச் சாவுகளால் பரபரப்பு
    • பல கோணங்களில் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் இன்று காலை பொது மக்கள் சாலையில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர்.

    இதுகுறித்து அவர்கள் களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் கிடந்த முதியவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

    அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அந்த முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? அல்லது வேறு காரணங்களால் அவர் இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டிரைவர் மணிகண்டன் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று முதியவர் பிணமாக கிடந்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×