search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211942"

    • கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று (16-ந்தேதி) மாலை 6:15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்னை நோக்கிச்சென்றது.

    இந்த ரெயில் திருமங்கலம்-மதுரை இடையே மறவன்குளத்தை கடந்து வந்தபோது இரவு.9.20 மணியளவில் முன்பதிவு இல்லாத பெட்டிமீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த கலா (28) என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 14-ந்தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுள்ளார். அப்போது தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண்ணும் அவரது அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

    இந்தநிலையில் மர்ம நபர்கள் வீசிய கற்கள் 2 பேர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் காயமடைந்தனர். இதில் கலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கல்வீச்சில் பெண்கள் காயமடைந்ததை கண்ட பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆறுமுக பாண்டியன், தீபா ஆகியோர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கோச்சில் விசாரணை நடத்தினர்.

    பின்னர் கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காயமடைந்த 2 பெண்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கப்பலூர் டோல்கேட், மறவன்குளம் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அந்த பகுதியில் யாரும் சிக்காத நிலையில் தொடர்ந்து கலாவின் சகோதரி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருணோதயம், செல்லப்பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.

    பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
    • மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர்.

    சேலம்:

    கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டி ருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ரெயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.

    அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மந பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கல்வீச்சு நடந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
    • அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்

    . விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.   அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் மீது இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார்.
    • பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 53). இவர் மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார். இது தொடர்பாக வேலாயுதம், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மேச்சேரி பாரப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 27) என்பவர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
    • தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.

    இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.

    இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    • ராஜின் என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.
    • அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே தேங்காய்பட்டணம் - மார்த்தாண்டம் சாலையில் அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதச்சிக் கோட்டை சந்திப்பு பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு, பஸ் திரும்பும் போது, அதே பகுதி அப்பட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்த ராஜு மகன் ராஜின் (வயது 25) என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.

    மேலும் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது தொடர்பாக பஸ் டிரைவர் நிக்சன் (49) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

    புதுக்கடை போலீசார் விசாரித்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மிர் உள்ளரங்கு மைதானத்தில் சுமார் 6 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு. அதனால், தவறாக வழிநடத்தப்பட்டு கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.” என கூறினார்.

    காஷ்மீர் இளைஞர்கள் எதிர்காலத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். தனது இந்த பயணத்தில் காஷ்மீர் கவர்னர், முதல்வர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோரிடையும் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். வர உள்ள அமர்நாத் புனித யாத்திரைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
    ×