search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • ஏழை மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
    • தீபாவளி பொருட்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பாலாஜி பிளாஸ்டிக் டிரேடர்ஸ் சார்பில் 5-வது ஆண்டு தீபாவளி பரிசு வழங்கும் விழா தெரழிலதிபர் சரவணன், இளம் தொழிலதிபர்கள் பாலாஜி, விஷ்வா ஆகியோர் தலைமையில் நடந்தது.

    தில்லை ரஹ்மான் முன்னிலை வகித்தார். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் கபீர், ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளிவாசல் நிர்வாக தலைவர் சையது சபிக், தொழிலதிபர் சேதுராஜா, கீழக்கரை இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழைகள் 500 பேருக்கு வேட்டி, சேலை, தீபாவளி பொருட்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    • எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றனர்.
    • தங்க பதக்கமும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பையினை அளித்து பாராட்டி கவுரவபடுத்தினர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்று சாதனை புரிந்துள்ளார்.

    பேட்மிண்டன் அசோஷியயேசன் ஆஃப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் பங்கு கொள்ளும் யோன்க்ஸ்ஆல் இந்திய போட்டி ஹைதராபாத் ஜவாலா குட்டா அகாடமியில் நடைபெற்றது.

    இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பேட்மிண்டன் வீரர்கள் கலந்து கொண்டணர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 12 சுற்றுகளாக போட்டி நடைபெற்றன.

    அக்டோபர் 11 முதல் - அக்டோபர் 18ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவன் ஸ்வஸ்திக் கலப்பு இரட்டையர் பிரிவில் திருநெல்வேலி சேர்ந்த ரேஷிகா ஆகிய இருவரும் இணைந்து இறுதி போட்டியில் 17-21,23-21,21-12என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் பரிசினை பெற்று சாதனை புரிந்தனர்.

    பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் இந்திய விராங்கனை ஜூவாலா குட்டா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் விரர்களை பாராட்டி அவர்களுக்கு தங்க பதக்கமும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பையினை அளித்து பாராட்டி கவுரவபடுத்தினர்.

    மத்திய மாநில விளையாட்டு துறை நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    எஸ்.இ.டி பள்ளி நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜ், தாளாளர் சித்ரா கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் மாணவன் ஸ்வஸ்திக்கை மேலும் உலக அளவில் நடைபெறக் கூடிய போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்காக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வாழ்த்தினர்.

    இதற்கு பக்கபலமாக இருந்த ராக்ஸ் அகடாமியின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா கிருஷ்ணமுர்த்தி மற்றும் இந்திய பேட்மிண்டன் பயிற்ச்சியாளர் மகேந்திரன் அவர்களையும் எஸ்.இ.டி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • 26 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
    • நெடுவாக்கோட்டை பள்ளி மாணவிகள் வசீகா, ரித்திகா ஸ்ரீ, நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் துளிர் வினாடி வினா போட்டி மன்னார்குடி ஒன்றிய அளவில் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர்.எஸ்.அன்பரசு தலைமை வகித்தார்.

    அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவரும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆர்.கே. சரவண ராஜன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியை மா.தேவி வாழ்த்துரை வழங்கினார். மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் வினாடி- வினா போட்டிகளில் பங்கேற்றனர். 6, 7, 8 இளநிலை பிரிவுகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுவாக்கோட்டை மாணவிகள் தே.வசீகா, மா. ரித்திகா ஸ்ரீ, அ.நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசையும், புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ச.சிவஸ்ரீ.ரா ஹர்ஷினி, க.ஹனிஸ்காஸ்ரீ ஆகியோர் இரண்டாம் பரிசையும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ. ஹரிஷ் குமார், கா.இனியன் பிரசாத், கு.தி யுகேஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும், 9, 10 ம் வகுப்பு உயர்நிலைப் பிரிவில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கு.சுபஸ்ரீ, பா. வைத்தீஸ்வரன், ஆர். ஹரிஹரன் ஆகியோர் முதல் பரிசினையும்.

    தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.ஆர். ஹர்ஷிதா, கு. சிவகனேஷ்வர், மு. மாதேஷ் ஆகியோர் இரண்டாம் பரிசினையும், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. தேச தேவன், டி. கிஷோர் ஆகியோர் மூன்றாம் பிரச்சினையும் பெற்றனர். 11,12ஆம் வகுப்பு மேல்நிலை பிரிவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரசன்ன வெங்கடேஷ், ஆர்.வி. ஸ்ரீராம், ஜி. மோகேஷ் ஆகியோர் முதல் பரிசையும், பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. பிரவீன், ஆர்.சூரிய பிரகாஷ், எம் சரவணா ஆகியோர் இரண்டாம் பரிசினையும் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் 29ம் தேதி திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிக்கு பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னார்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி. தனபால் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிறைவாக அறிவியல் இயக்க செயலாளர் டி.இமானுவேல் நன்றி கூறினார்.

    • போட்டியில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான இளையோர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நேருயுவ கேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமிர்த திருநாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இத்திருவிழாவில் இளையோர் கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, மொபைல் போட்டோ போட்டி, பேச்சுப்போட்டி, 2047-ல் இந்தியா எனது கனவு கருத்தரங்கம், கிராமிய குழு நடனப்போட்டி ஆகியவை நடைபெற்றது.

    இதனை அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ரெவரன்ட் பாதர் முனைவர் செபாஸ்டியன் பெரியண்ணன், தமிழ ர்களின் கலை, கலாச்சார பெருமைகளை எடுத்துக் கூறி தொடக்கி வைத்தார்.

    இப்போட்டிகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளையோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். இப்போட்டிகளின் நடுவர்க ளாகவும், நிகழ்ச்சிகளின் கருத்தாளர்களாகவும் கலலூரி பேராசிரியர்களும், நாட்டுப்புற கலைஞர் கவிஞர் வீர.சங்கர் ஆகியோர் பணியாற்றினர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் பிலோமிநாதன், தலைமையில் நடைபெற்றது.

    டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, நேருயுவ கேந்திராவின் மாவட்ட ஆலொசனைக் குழு உறுப்பினர் ராமலிங்கம், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கௌரவப் பொருளாளர் முத்துக்குமார், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    முன்னதாக, நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், வரவேற்றார். நேருயுவ கேந்திராவின் கணக்காளர் பவுன்ராஜ் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்களும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ ஆலோசனை மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

     பட்டுக்கோட்டை:

    உலக வீடற்றோர் தினத்தினை முன்னிட்டு, பட்டுக்கோட்டை நகராட்சி மூலம் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் வீடற்றோர் இல்லத்தில் உலக வீடற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா, நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் 10 முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், நகர்நல மருத்துவமனை மருத்துவர் பானுப்பிரியா மற்றும் பணியாளர்களால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு உடன் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.பின்னர் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில், திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் எடுத்துக் கூறினார். மேலும் கவுன்சிலர் சதாசிவக்குமார் சிறப்புரையாற்றினார்.

    முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது.

    இசை நாற்காலி விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற முதல் இரண்டு நபர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பத்துணர்ச்சி ஆலோசனையும் வழங்கப்பட்டது.

    விழாவில் கவுன்சிலர்கள் ராயல்குமார், நாடிமுத்து, சதாசிவகுமார், காமராஜ், குமணன், ஜெயராமன், சரேஷ், முத்துசாமி, கலையரசி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், அழகேசன், சமூக ஆர்வலர்கள் மணிமுத்து, நகராட்சி உதவிப்பொறியாளர் தியாகராஜன், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்பரவு ஆய்வாளர்.

    ஆரோக்கியசாமி, துப்புர வுபணி மேற்பார்வையாளர் செல்வகுமார், சமுதாய அமை ப்பாளர் பிரவீணா, பரப்புரை பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • தொல்காப்பியப் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    திருவையாறு:

    திருவையாறு அரசர்க் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமமும், திருவையாறு அரசர் கல்லூரியும் இணைந்து நடத்திய தொல்காப்பிய விழாவில் தொல்காப்பியப்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமம் நிர்வாகி மல்லிகா மகாலிங்கம் மற்றும் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மன்பேட்டை குப்பு. வீரமணி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

    முன்னாள் அரசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் திருஞானசம்மந்தம் வாழ்த்துரை நல்கினார்.

    விழா நிறைவில் திருவையாறு அரசர்க்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரஜினி தேவி நன்றி தெரிவித்தார்.

    • அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • சிறப்பாக பணியாற்றிதற்காக வழங்கப்பட்டது

    கரூர்:

    அரவக்குறிச்சி உட்கோட்ட அஞ்சலகங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சவுந்திராபு ரத்தில் நடந்தது. விழாவுக்கு ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் அஞ்சலக கோட்ட கண் காணிப்பாளர் சிவகுமார் பங்கேற்றார். இதில் பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை, ஈசநத்தம், மூலப்பட்டி உள்ளிட்ட தபால் நிலையங்களில், 2021-22ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்குகள், தபால் பட்டுவாடா, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராமிய அஞ்சல் காப்பீடு போன்ற திட்டங்களில் அதிக கணகக்குகளை துவங்கிய துணை அஞ்சல் அலுவலர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வெரிச்சினம்பட்டி கிளை அஞ்சலக அலுவலர் சக்திவேல், பள்ளப்பட்டி அஞ்சலக துணை அலுவலர் மனோ உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.
    • இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ் மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர். முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார்.

    தொழிற்சங்க தலை வர்கள் மகாலிங்கம் (எச்.எம்.எஸ்),ரமேஷ் (ஏ.ஜ.டி.யு.சி),சுரேஷ் (ஐ.என்.டி.யு.சி) ஆகியோர் பேசினர். நிர்வாக இயக்குனர்கள் பேசுகையில், ராமராஜூ சர்ஜிகல் காட்டன்மில்ஸ் குழுமத்தில் தொழிலாளர்கள் முழுமை யான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிவதால் ஒரு முதிர்ந்த அறிவு திறனும், இளமையான உத்வேகமும் கலந்த நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது என்றனர்.

    கடந்த 2 மாதங்களாக நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப் பட்டது. கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழிலாளர்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் தொழிலாளர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரியும் தொழிலாளர்கள், வருடத்தில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 963 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களை மேனேஜிங்டை ரக்டர்கள் ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, டைரக்டர் கஜபதி என்ற என்.ஆர்.கே. ஸ்ரீகண்டன் ராஜா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ராம்கோ குரூப் பிரசிடெண்ட் என். மோகனரங்கன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஹேமந்த்குமார், பொது மேலாளர் சுந்தரராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை துணைப் பொது மேலாளர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து சிறப்பு பரிசுத்தொகை தலா ரூ.2000, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    • போட்டிகளுக்கான தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது;-

    மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பள்ளி , கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 , பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்க ட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவுசெய்து அனுப்ப வேண்டும்.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப்போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர்எனத் தெரிவுசெய்து மாணவர்களை அனுப்பிவைத்தல் வேண்டும்.

    போட்டி களுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

    போட்டிகள் மயிலாடு துறை தருமபுரம் ஞானா ம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 12.10.2022 அன்று நடைபெற உள்ளன.

    பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் காலை 10 மணிக்கும் வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்ட த்திலுள்ள மாணவ, மாணவி கள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • போட்டி 6 சுற்றுலாக நடைபெற்று மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
    • அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    நன்னிலம்:

    நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நன்னிலம் வட்ட சதுரங்க கழகம், நன்னிலம் ரோட்டரி சங்கம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து சோழ மண்டல அளவிலான பள்ளி மாணவ -மாணவிகளுக்கான செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு நன்னிலம் ரோட்டரி சங்க தலைவர் பாரி தலைமை தாங்கினார். சாசன தலைவர் சுப்ரமணியம், முன்னாள் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி ஆளுநர் ஜானி சாம்சன் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டி 6 சுற்றுலாக நடைபெற்றது.

    இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாலையில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

    தமிழ்ச்செல்வி, சிவசுப்பிர மணியம், தினேஷ், சுரேஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முன்னாள் தலைவர் உத்தமன் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு சதுரங்க கழகம் இணை செயலாளர் பாலகுணசேகரன் தலைமை யிலான 10 நடுவர்கள் போட்டியை நடத்தினர்.

    முடிவில் பொருளாளர் அப்துல் கரீம் நன்றி கூறினார்.

    • கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    • மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.

    பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×