search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 30). இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பழனி திருநள்ளாறு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த பழனியின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் தலைமை யிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக் கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைபட்ட நிலையில் பழனி உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பழைய கல்குவாரி உள்ளது. இதில் உள்ள தண்ணீரை கல்குவாரி லாரிகள் மூலம் எடுத்துச் சென்று கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி செயல்படும் பகுதிகளில் உள்ள ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த ரோடுகளில் கல்குவாரி லாரிகள் செல்லும் போது மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சுக்கம்பாளையம் பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற 2 லாரிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெறு வதாகவும், இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு இங்குள்ள விவசாய கிணறுகள் வற்றி விடுவதாகவும், பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) பல்லடம் தாலுகா அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருமாநல்லூர் :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கியாஸ் சேமிப்பு கிடங்கில் கியாஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது டிரைவர் இருக்கையின் இடது புறம் திடீரென தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு படையினர் 2வாகனங்களில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டுவரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது.

    இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர். இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் லாரி ஓட்டுநர்கள் சென்று விடும் நிலையில் அப்பகுதி மக்களே மண்ணை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

    இதனால் நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண் சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் சிதறிய மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சீர்காழி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    பரமத்திவேலூர்:

    வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

    ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    • சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.
    • விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் 25க்கும் மேற்பட்டோரை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்து பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் வலது ஓரமாக திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.அதன் பின்னரும் நிற்காமல் அருகே உள்ள பெருமாள் கோவில் சுற்று சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜா என்பவரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல் பல்லடம் - தாராபுரம் சாலை பிரிவு அருகே தேனி மாவட்டம் குமுளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற சொகுசு காரின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது .இதில் சொகுசு கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பல்லடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி சாலையைவிட்டு பக்கவாட்டில் இறங்கி விபத்தானது.
    • விபத்தில் காயமடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைபாதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலையின் வழியாக சென்றால் கர்நாடகாவிறக்கு மிக குறைந்த தூரம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் சாலைகள் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இரவு திருச்செங்கோட்டிற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து பொருட்கள் ஏற்றி வருவதற்காக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    லாரியை திருச்செங்கோட்டை சேர்ந்த தமிழரசன் (48) என்பவர் ஓட்டி வந்தார். கிளினராக தனசேகர் என்பவர் இருந்தார்.

    அப்போது லாரி தட்டக்கரை பகுதி யில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையைவிட்டு பக்கவாட்டில் இறங்கி விபத்தானது.

    இதனையடுத்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விபத்தில் காயமடைந்த டிரைவர் தமிழரசன், கிளீனர் தனசேகர் ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் சாலை அகலமாக விரிவுபடுத்த ப்பட்டு இருப்பதாலும், வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வளை வுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படு த்துவதாக கூறப்படுகிறது.

    இந்த மாதத்தில் மட்டும் 3 முறை இதே வழிதடத்தில் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் உயிர்சேதம் எதுவும் நடைபெறவில்லை.

    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    ரெயில் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ஒன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றது.

    இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ரெட்டியார்பட்டி அருகே டி.வி.எஸ். நகர் 4 வழிச்சாலையில் சென்ற போது டீசல் இல்லாமல் திடீரென சாலையில் நின்றுவிட்டது.

    இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கல்லூரி பஸ்சில் சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினர். கல்லூரி பஸ்சை முனியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக வீரசெல்வம் என்பவர் இருந்தார்.

    கல்லூரி பஸ் இன்று அதிகாலை டி.வி.எஸ். நகர் பகுதிக்கு வந்தபோது ஏற்கனவே டீசல் இல்லாமல் நின்ற கனரக லாரியின் பின்னால் வேகமாக சென்று மோதியது.

    இதில் டிரைவர் முனியசாமி, கிளீனர் வீரசெல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உள்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறிதளவு காயம் அடைந்த 12 மாணவிகள் குணம் அடைந்து இன்று காலை ஊர் திரும்பினர். இதில் சுமித்ரா, முனியசாமி, வீரசெல்வம் ஆகிய 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
    • இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே மருவூர் கோணம் பகுதியைச் சேர்ந்த வர் அஜிஸ் (வயது 26), மினி பஸ் கண்டக்டர்.

    இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு இந்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.அஜிஸ் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டி லிருந்து புறப்பட்டார்.திக்கணங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மினி பஸ்சில் வேலைக்கு சென்றார்.நேற்று இரவு வேலை முடிந்து அஜிஸ்வீட்டிற்கு செல்ல தயாரானார். தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு முளகு மூடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி அஜிஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தூக்கி வீசப் பட்ட அஜிஸ் படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை சிகிச்சைக் காக தக்கலை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக அஜிஸ் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை அஜிஸ் பரிதாபமாக இறந் தார்.

    இது குறித்து அவரது மனைவி இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    லாரி டிரைவர் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான அஜிசின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • அலங்காநல்லூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது25), கட்டிட தொழிலாளி. இவர் இரு சக்கர வாகனத்தில் பாசிங்காபுரம் பகுதியில் இருந்து குமாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ரங்கராஜபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.
    • சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்துபுரத்திற்கு சிமென்ட் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது லாரியை அமரவிளை பகுதியை சேர்ந்த பெர்னார்டு ஜோசப் (வயது 60) ஓட்டினார்.

    இரவிபுதூர்கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது சாலையில் ஒருவர் குறுகே ஒடியுள்ளதாக தெரிகிறது. அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென திருப்பியுள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடைமீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாலையில் சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இந்த விபத்து குறித்து தக்கலை போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாகுளம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55) விவசாயி. நேற்று இவர் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள உறவினரை பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.ஸ்கூட்டர் பல்லடம்- மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவி தமாக இவர் மீது மோதியது.இதில், பலத்த காயமடை ந்தவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.

    ×