என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீல்"
- மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- 18-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் உப்பிலிபாளையத்தில் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும், குளுக்கோஸ் போடுவதாகவும், காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்–கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மெடிக்–கல்ஸ் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நாளை 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
- உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு கலெக்டர் சீல் வைத்தார்.
- கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செங்குன்றாபுரம் பகுதியில் ஆய்வுக்காக சென்றார். அவர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குவாரிக்கான உரிமம் 2022-ம் ஆண்டே முடிந்து விட்டதும், உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரிக்கு உடனடியாக சீல் வைக்கவும், அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்தும் ஜப்தி செய்தும் வருகின்றனர். மேலும்கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்.நகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர் என்னை கைது செய்தால் மட்டுமே கடைக்கு சீல் வைக்க முடியும் என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.
இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.
நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச் ரோடு அருகே சரலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 17 கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை சரிவர கட்டாமல் இருந்தனர். ரூ. 8 லட்சத்து 47 ஆயிரத்து 86 வாடகை பாக்கி இருந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் உத்தரவிட்டார்.
நிர்வாக அதிகாரி ராமமோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா, ஆல்ரின், சேகர், இளநிலை உதவியாளர் சாகுல் உள்பட அதிகாரிகள் இன்று காலை சரலூர் மீன் சந்தைக்கு சென்றனர். அப்போது வாடகை பாக்கி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி கட்டாத கடைகள் சீல் வைக்கப்பட்டது. 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடைகள் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் சிலர் வாடகை பாக்கியை கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற னர். வாடகைப் பாக்கி கட்டியதற்கான நகல் வாங்கியதும் சீல்கள் அகற்றப்பட்டு வியாபாரிகளிடம் மீண்டும் கடை திறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை.
- திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது
- முறைகேடு புகாரை தொடர்ந்து
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரபு என்பவர் நடத்தி வரும் தனியார் இ பொது சேவை மையத்தில், பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உட்பட பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்க செலுத்தும் பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா ஆய்வு மேற்கொண்டார். இதில், முறைகேடு நடைபெறுவது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
- 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.
அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.
அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .
எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .
அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.
டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
- காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கயம் :
வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- காரைக்காலில் நேரு மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது.
புதுச்சேரி:
காரைக்காலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நேரு மார்க்கெட், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால், வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அதே இடத்தில், பழமை மாறாமல், புதிய நேரு மார்க்கெட் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நேரு மார்க்கெட் திறப்பு விழா கண்டும், சுமார் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது. வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த மாதம் புதிய நேரு மார்க்கெட் திறக்கப்பட்டு, 117 கடைகளில் 78 கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்படாத கடைகள் சிலவற்றை அக்கடைகளின் அருகில் உள்ள வியாபாரிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக, நகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று நேரு மார்கெட்டுக்கு சென்று, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
- கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
- குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடையை எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி 'சீல்' வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்