search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது.
    • மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.

    தென்காசி:

    மதுரை சகோதயா ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வருகிறது. அதன்படி யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவி கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தென்காசி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் முகமது இலியாஸ் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்று சாதனை படை த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். மண்டல அளவில் முதலி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்கள் 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கைதட்டி சாதனை படைத்துள்ளனர்.
    • வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் துபாய் தனியார் நிறுவனம் மற்றும் எஸ்.பி.கே. கல்விக் குழுமங்கள் இணைந்து சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் படிக்கும் 5 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்த னர்.

    இந்த நிகழ்ச்சி துபாய் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீ கரிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் செல்லத் தாய் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தாசில்தார் அறிவழகன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோபியா பாய் கலந்து கொண்டனர்.

    மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் காசி கோபிநாத், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன் இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் முத்து தினகரன், எஸ்.பி.கே. தியாகராஜன் மெமோரியல் மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பென்னாகரத்தில் படங்களில் உள்ள பெயரை கூறி பதக்கம், சான்றிதழ் பெற்று 2 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவன் தன்னுடைய 1½ வயதில் இருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்கள், பதக்கங்கள் வாங்கி குவிந்துள்ளான்.

    தொப்பூர்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியில் அசோக்குமார் மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது 2 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளான். பிரணவ் தனது 1½ வயதிலிருந்தே தன் அதீத திறமைகளை வெளிகாட்ட தொடங்கினான்.

    இதில் தற்போது வரை அவன் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடைய தாய் சொல்லிக் கொடுப்பதை அப்படியே முழுமையாக கற்றுக்கொண்டு எந்த நேரத்திலும் நாட்டின் தலைநகரம், பழங்கள், காய்கறிகளின் பெயர்களை தெரிவித்து வருகின்றான்.

    தன்னுடைய 1½ வயதிலேயே போட்டிகளில் பங்கெடுக்க தொடங்கியுள்ளான். வனவிலங்குகள், காய்கறிகள், பழங்கள், மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள், அரசியல் தலைவர்கள் பெயர்களையும் படத்தைக் காட்டினாலே ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணமாக கூறிகிறான். இதேபோல் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை சரளமாக தெரிவித்து வருகின்றான். இதற்காக பிரணவ் தனது 1½ வயதிலேயே அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆப் தி ரெக்கார்ட் உள்ளிட்டவற்றில் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். தற்போது அடுத்த கட்டமாக அறம் விருதுகளுக்கும் பிரணவ் தேர்வாகியுள்ளார். இதனால் அவருடைய தாய் தந்தையர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கோலூன்றி தாண்டுதல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற சாதனை

    நொய்யல்,

    கரூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட

    கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் விளையாடினார்கள்.இதில் 8 ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி இறகுபந்து போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அரங்கில் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் ஜமீலாத் ஜெஸ்லா மற்றும் 19 வயது இரட்டையர் பிரிவில் மரியம் ரிஸ்னா, ராஜதனலட்சுமி ஆகியோரும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவி யரை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ரா ஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    • நவீன்குமார் வெள்ளி பதக்கமும், முகேஷ்குமார் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
    • பள்ளி மாணவர்கள் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    திருவாரூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் தென்னாசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 4 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    12 வயதுக்குட்பட்ட கட்டா மற்றும் குமுத்தே போட்டியில் மாணவன் கயவலன், 10 வயதுக்குட்பட்ட போட்டியில் மாணவன் தமிழியன் ஆகியோர் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற

    சர்வதேச வில்வித்தை போட்டியில் 14 வயதுக்குட்பட்ட இந்தியன் வில் பிரிவில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் ஹர்திக்ராமன் முதலிடம் பெற்று கோப்பை யினை கைப்பற்றினார்.

    மதுரையில் மதுரா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மாணவன் கயலவன் வெண்க லப் பதக்கம், அபிஷேக் தங்கப்பதக்கமும், ஹர்திக்ரா மன் தங்கப்பதக்கம், நவீன்கு மார் வெள்ளி பதக்கமும், முகேஷ்குமார் வென்கலப் பதக்கமும் பெற்றனர்.

    தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தமது வாழ்த்து க்க ளையும், பாராட்டு களையும் தெரிவித்தார்.

    வில்வித்தை, கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் குணசேகரன், திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தலைவர் தாளாளர் டாக்டர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ். இ. பள்ளியின் தாளாளர் விஜயசுந்தரம், பள்ளியின் முதல்வர் ரமாபிரபா, ஆசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள், பெற்றோர்கள் என அனை வரும் சாதனை மாணவர்களை பாராட்டினர்.

    • இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர்.
    • வாலிபால் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கம் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியினை சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், மதுரை சகோதயா அமைப்பும் இணைந்து நடத்தியது.

    இதில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் கால்பந்து, வாலிபால், இறகுபந்து, செஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கபதக்கம், வெள்ளிபதக்கம் பெற்றனர்.12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வெள்ளிபதக்கமும் பெற்றனர்.

    இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் இசக்கி சுப்பையா, மேலாளர் இசக்கித்துரை, பள்ளி முதல்வர் மோனிகா டீசோசா, துணைமுதல்வர் ஜெயாக்கியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், சோபியா, சேவியர், பரலோகராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
    • இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தஷிதா மற்றும் தயனிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி தஷிதா 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தயனிதா நீளம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த மாணவிகள் மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களை பாரத் கல்வி குழு மங்களின் நிறுவனர் மணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.

    அவர் பேசும் போது மாணவ, மாணவிகள் எதிர் வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அள விலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார். மேலும் சாதனை படைத்த மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் தமீசை பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி னார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜய குமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
    • சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அருள் முருகன் 2-ம் இடமும் , நிஷ்வன் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மேலும் முதல் இடம் பெற்றுள்ள புகழூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுவும் கடந்த ஆண்டு புஞ்சை தோட்டக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு முடித்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

    • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
    • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

    இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

    • பெண்கள் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம்.
    • மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பாக பெண்களை வளப்படுத்த தேசத்தை மேம்படுத்துங்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் வரவேற்றார்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் த.விஜயசுந்தரம் பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    அப்பொழுது அவர் பேசுகையில் பெண்களின் வளம் தேசத்தை மேம்படுத்த செய்யும் என்றும், ஆணுக்கு இணையாக பெண்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார்.

    விழாவில் இன்னர்வீல் சங்கம் அதிகாரி மாலதி செல்வம் தலைமை வகித்தார்.

    நேதாஜி கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கட்ராஜலு, சுந்தர்ராஜ் செயலர், நிர்மலா ஆனந்த் செயல் அதிகாரி வாழ்த்துக்களை கூறினர்.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முனைவர் சுதா பொருளாதாரத் துறை பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பல துறையில் வளர்ந்து வருகிறார்கள்.

    இன்னும் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

    பாலின பாகுபாடு இன்றி பெண்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும் சமூகத்திலும் சிறந்து விளங்க மற்றும் வீரம் நிறைந்த பல சாதனை மிகுந்த பெண்களின் பெயர்களை எடுத்துக்காட்டாக கொண்டு பேசினார்.

    மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கப்பட்டது.

    முடிவில் பவானி பாண்டியன் நன்றி கூறினார்.

    சங்க உறுப்பினர்கள் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×