என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223204"
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் நெற்குப்பை பேரூர் இளை ஞர் அணி சார்பாக திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் விரமதி மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, நெற்குப்பை நகரச் செயலாளர் கே.பி.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கவுன்சிலர் ஏ.டி.என்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர்.ராமசாமி, வாழ்த்துரை வழங்கினார்கள். தி.மு.க. அரசு புரிந்த பல்வேறு சாதனைகளை கழக பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, ஒன்றிய வழக்கறிஞர் அணி நாகூர் கனி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், மகி பாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கழக நிர்வாகிகளான கஸ்தூரி சின்னையா, மாரி யப்பன், ரஞ்சித், சோம சுந்தரம், திருநாவுக்கரசு, குமார், கருணாநிதி, விக்னேஸ்வரன், கணேசன், மணிக்குமார், முருகேசன், பாஸ்கர், ராமநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர், நகர கழக கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
நெற்குப்பை நகர இளைஞரணி அமைப் பாளர் பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனராஜ் தலைமை வகித்தார், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அர்ஜூன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் டாகட் பாப்புபெஞ்சமின்இளங்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்வது, வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமாக்க ஆக்க சபதம் ஏற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைதலைவர் தங்கவேல், நிர்வாகிகள் ராஜா, சின்ராஜ், தாமரைமணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
- ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நலச்சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பொருளாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜன், சாகுல் ஹமீது, முருகானந்தம், முகமது அலி ஜின்னா, முகமது மைதீன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தில்லைவி ளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், பகல் நேரத்தில் செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரசுக்கு காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை, தில்லைவி ளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக இருமுனைகளில் இணைப்பு ரெயில் விட வேண்டும்.
தில்லைவிளாகம் ரெயில் நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். சாலை வரை தார்சாலை வேலையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.
ரெயில் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.
- தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த முதல்வரை பாராட்டுவது நமது கடமை என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்
- கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த தீர்ப்புக்கான விழாவை புதுக்கோட்டையில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சம்மதம் அளித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் முதலமைச்சரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வாருங்கள். விழாவிற்கு வருபவர்கள் விழா முடியும் வரை அரங்கினுள் அமர்ந்து முதலமைச்சரை பாராட்டவேண்டும்.விழாவிற்கு வருகை தரும் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும். சட்ட போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உண்ணாமல் உறங்காமல் நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் . தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த அவரை பாராட்டுவது நமது கடமை.
கோட்டை விடுவது அ.தி.மு.க., மீட்டெடுப்பது திமுக. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் முடிவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, தி.மு.க. மாவட்ட துணைச செயலாளர் ஞான.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் அருவடிவேல், ரவி மாவட்ட கவுன்சிலர் உஷாசெல்வம், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் செங்கோல், சஷ்டி முருகன், சையது இப்ராஹிம், கிருஷ்ணமூர்த்தி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.
- புதுக்கோட்டையில் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்-ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்
- ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.
புதுக்கோட்டை,
ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் முறையான சட்ட வல்லுனர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பை பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வருகின்ற 5-ந்தேதி புதுக்கோட்டை அருகே திருச்சி தஞ்சை சாலையில் இடையபட்டி அருகே சிவப்பட்டியில் பிரம்மாண்டமான முறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்தப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் இதில் ஜல்லிக்கட்டு பேரவையினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு அருகே ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பான பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகரன், திருச்சி ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு மக்களின் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்துள்ள ஜல்லிக்கட்டை முறையான சட்ட போராட்டம் நடத்தி இனிமேல் தடை ஏதும் வாங்க முடியாத அளவிற்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக பாராட்டு விழா நடத்த வேண்டும் என பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ஜல்லிக்கட்டை மீட்டதாக யார், யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சரியான நேரத்தில் சரியான முறையில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பை பெற்று இனி ஜல்லிக்கட்டிற்கு எந்த ஒரு காலத்திலும் தடை வாங்க முடியாத அளவிற்கு வழிவகை செய்துள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
- ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி ராஜா வரவேற்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் நகர தலைவர் ராமர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர்கள் கோகுல், பாபு கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகரில் கஞ்சா பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் 9-வது வார்டில் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்,கொம்மேடு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலை திறக்க வேண்டும், பாப்பாகுளம் சாலை மிக மோசமாக உள்ளதாகவும் அதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் மதிநிறச்செல்வி மற்றும் ஏராளமான பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டணர். முடிவில் நகர துணை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.
- அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
அரியலூர்,
அரியலூரில் செந்துறை ரோடு புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் தொகுதி பொறுப்பாளர் சல்மா, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி,தலைமைசெயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்டதுணை செயலாளர் சந்திரசேகர், லதாபாலு, நகர செயலாளர் முருகேசன், கருணாநிதி, இளைஞரணி துணைஅமைப்பாளார் லூயிகதிரவன், வக்கீல் சசிகுமார், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அறிவழகன், செந்துறை செலர்வராஜ், எழில்மாறன், திருமானூர் கென்னடி, அசோகசக்கரவர்த்தி,
ஆண்டிமடம் கலியபெருமாள், முருகன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன் தா.பழுர் சௌந்தர்ராஜன், கண்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:-தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்கிய மாமனிதர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரும் குடும்ப விழாவாக கருதிட வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழாவைகொண்டாடுவது நமது அனைவரி ன் கடமையாகும்.மற்ற மாவட்டங்களைவிட அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கொடிக்கம்பங்கள் அமைத்து கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில், நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஆம்புலன்ஸ் நிர்
வாகம் உடனடியாக பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். தற்பொழுது வழங்கப்பட்ட பணி வரையறை அட்டவணைப்படி தொழிலாளர்களை அழைக்கழிக்காமல் நாளுக்கு ஒரு லொகேஷன் என்று மாறி மாறி பணி வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது கடைசி நேரத்தில் எந்த இடத்தில் பணி என்பதை கூறாமல், உரிய நேரத்தில் பணி மாவட்ட அதிகாரிகளால் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
- ஆலங்குடியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமசுப்புரம் தலைமை வகித்தார். நகர தலைவர் அரங்குளவன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் பேசுகையில்... ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகிய இருவரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றித் தரப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையை மேம்படுத்த தனது தொகுதி நிதியிலிருந்து 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் நன்றிதெரி வித்து தீர்மானம் நிறைவே ற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் வட்டார தலைவர் பன்னீர்செல்வம் முன்னாள் தலைவர் பாண்டியன் குமரேசன், சத்யராஜ், பூங்குன்றன், கீரமங்கலம் நகர தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
- கள்ளச்சாராயம், கஞ்சா, சிறார் கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அரசு கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்போது, கள்ளச்சாராயம், கஞ்சா, சிறார் கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர் கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அனைத்து மக்கள்நலப்பிரதிநிதிகளும் கண்டனஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.
- குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
- தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில் மயிலா டுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலாடியில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாயல்குடி
கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன் வரவேற்றார்.
துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, மேலாளர் பாலதண்டாயுதம், கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.
கடலாடி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் முறை யாக பராமரிக்கப் படாமல் உள்ளது. அதனை சரி செய்யவும், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராமலட்சுமி: பொதிக்குளம் ஊராட்சி அருணகிரி கொட்டகை, ஆப்பனூர் ஊராட்சி இளையனை கொட்டகையில் பழுதடைந்த சாலைகளுக்கு தார் சாலை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மடத்தாகுளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும். மாரியூர் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் தேவைக்காக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும். மாரியூர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
கீழமுந்தல் கிராமத்தில் மின்வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. மின் வாரியம் புதிய மின்கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் முருகலட்சுமி மலைராஜ்: 10-வது வார்டு முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் செய்யது ராவியா: மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, காமாட்சி புரம், பனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுக் கழிவ றை பராமரிக்கப்பட வில்லை. முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்