search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • பெரம்பலுார் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐ சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எந்த செயலிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சில தவறான பழக்க வழக்கங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

    மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் அம்மாணவர்களுக்குமே இழப்பு ஏற்படுகிறது. ஒருசில மாணவர்கள் விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் விளையாட செல்லும் போது ஏரி, குளங்கள், கிணறு போன்றவற்றில் இறங்கி விளையாட்டுதனமாக தங்கள் உயிரை இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருசில மாணவர்கள் அதிகபடியான நேரங்களை செல்போனிலேயே செலவழித்து தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாமல் தங்களை ஈடுபடுத்தி ஆபத்தை தேடிக் கொள்கின்றனர்.

    ஒருசில மாணவ, மாணவிகளுக்கு சில நபர்களால்பாலியல் வன்முறை நடைபெறுகிறது அதனை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி இறந்து போகின்றனர். இதை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் மாணவர்களால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியா மல் தங்கள் எதிர் கால த்தை வீணடித்துக் கொள்கி ன்றனர். எனவே, இந்த பழக்கங்கள் யாரிடமும் காணப்பட்டால் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உணர்ந்து உங்களுக்காக உள்ள சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு வாசகங்களையும் அறிவுரைகளையும் பதாகைகளையும்வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாண வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் திவ்யராஜ் நன்றி கூறினார்.


    • பெரம்பலுாரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • தமிழகத்தில் கொத்தடிமை இல்லாத நிலை உருவாகிட அனைவரும் செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் வலியுறுத்தல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிக்குழுமம், இந்தோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாமை நடத்தியது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலை வரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்து பேசுகை யில், மக்களாகிய நாம் வேலை செய்யும்போது, அதற்கான சரியான ஊதியத்தை பெறுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி உரிமை யாக்கப்பட்டுள்ளது.

    கட்டாயப்படுத்தியோ, முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, குறைந்த ஊதியம் வழங்கியோ, அதிக நேரம் வேலை வாங்குவது போன்ற செயல்கள் கொத்தடிமை முறையாவதால், இது போன்ற செயல்கள் சட்டத்தின் படி தண்டனை க்குரிய குற்றமாகும். இந்திய அரசியல் சட்டமானது பல்வேறு பிரிவுகளில் தொழி லாளர்களுக்கான பாதுகாப்பினை உறுதி படுத்தி உள்ளது. கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வுகளை மேற்கொண்டு பெரம்ப லூர் மாவட்டத்தில்மட்டு மல்லாமல் தமிழ்நாட்டி லேயே முற்றிலும் கொத்தடி மை தொழிலாளர் முறை இல்லா நிலையினை உருவா க்கிட நாம் அனைவரும் உறுதி மொழியை ஏற்று செயல்பட வேண்டும்.

    அதற்கான முயற்சியாகத்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கொத்தடிமை முறை இருந்தால் பொதுமக்கள் உடனடியாக உதவி எண்ணான 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என பேசினார். முகாமில் கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் நீதிபதி வழங்கினார். தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்திடும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.முகாமில் தொழிலாளர் நலத்துறையில் அடையாள அட்டை வழங்குவதற்காக தொழிலாளர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், சர்வதேச நீதிக்குழுமத்தின் வக்கீல் பிரபு, கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான (பொ) அண்ணாமலை வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
    • இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் போக்குவரத்து காவல் நிலையை ஆய்வாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனத்தை இயக்க கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது என தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். தலைமை காவலர் சந்திரமோகன், காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் 12ம் தேதி நடைபெற உள்ளது
    • இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் காகித ஆலையைச சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை. வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நயுகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளடங்கிய பகுதிகளில் வருகிற 12 -ந் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.மேலும், இம்முகாமில் கண் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு கண் கண்ணாடிகள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. கண்புரை உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம், இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர ஆலை நிர்வாகம் புன்னம்சத்திரம். தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று காகித ஆலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலங்குடி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • இந்த முகாமில் 200க்கும் அதிகமான கால்நடைகளுக்கு கோமாரி நோய், அம்மை நோய் சினை ஊசிகள் போடப்பட்டது

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு வடவாளம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் சிறுமலர் ஞானபிரகாசம் தலைமை வகித்தார். வடவாளம் கால்நடை மருத்துவ அலுவலர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 200க்கும் அதிகமான கால்நடைகளுக்கு கோமாரி நோய், அம்மை நோய் சினை ஊசிகள் போடப்பட்டது. தொடர்ந்து சிறந்த மாடு வளர்ப்போருக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கால்நடைகள் கலந்து கொண்டன.

    • முசிறியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழைக்காலங்களில் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினார்

    முசிறி:

    முசிறியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எம்.ஐ.டி. வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வேளாண்மை உதவி இயக்குநர் நளினி மற்றும் வேளாண்மை அலுவலர் பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் ராஜசேகர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தார். இதேபோல் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழைக்காலங்களில் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினார். இதில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் அபிநயா, அபிதாஸ்ரீ, ஆசியா, ஆர்த்தி அழகேஸ்வரி, அபிநயா, அனிஷா கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந் தேதி, பாவை என்ஜினீயரிங் கல்லூரியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது.
    • இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந் தேதி, பாவை என்ஜினீயரிங் கல்லூரியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது.

    முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும், கம்ப்யூட்டர் பயிற்சி, தையற்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும், வேலை தேடுபவர்களும் முகாம் தொடர்பான விவ–ரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், பெரு மாக்கநல்லூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர்

    கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமாக்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இரா.கண்ணன் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினர்.

    இதில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். முகாமில் கால்நடை மருந்தகம், துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்

    எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர்.

    முகாமில் பெருமாக்க நல்லூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளை முகாமில் கொண்டு வந்து சினை ஊசி, சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், ரமேஷ், கணேசன், ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, மற்றும் ஊராட்சிமன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத் நன்றி கூறினார். முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • மாற்று திறன் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது
    • நாளை மறுதினம் நடைபெறுகிறது

    அரியலூர்,

    திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளில் பார்வை குறைவுடையோர், செவித்திறன் குறைவுடையோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் உடல் இயக்க குறைபாடு உள்ளோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவ குழுவினர் மூலம் குறைகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவ தேசிய அடையாள அட்டை, இலவச ெரயில் மற்றும் பஸ் சலுகை, உதவி உபகரணங்கள், மனநலம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அறுவை சிகிச்சை பதிவு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
    • 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் பெரம்பலூர் வட்டார வருவாய் துறையினருடன் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமினை நேற்று நடத்தினா். இதில் பெரம்பலூர் வருவாய் தாசில்தார் சுகுணா, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், குணாவதி ராமர், ஏட்டு ரவிசாந்தகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பான 8 கோரிக்கை மனுக்களை பெற்று, அதில் 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர்."

    • காரையூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
    • இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு பரிசோதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை, காரையூர் ஊராட்சி சமுதாய கூடத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பால் மற்றும் துணைத்தலைவர் அடைக்கன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்காலக் கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளி விடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார்.டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டையில் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் 48 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. முகாமில் புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தல் படி நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சசிவர்மன் தலைமையிலான குழுவினர் கிராம பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் 48 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடுகள் தோறும் புகை மருந்து அடிக்கப்பட்டு, கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தும், வீடு தோறும் களப்பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    ×