search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் (பொ) விமலா முன்னிலை வகித்தார்.

    உழவாரப்பணிக் குழு செயலாளர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

    நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    உழவாரப்பணி குழு அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்துரை ராயப்பன், பத்திரிக்கையாளர் முனைவர் ரவிச்சந்திரன்சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்புரையுயாற்றினர்.

    யோகா ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி கற்றுக் கொடுத்தார்.

    உதவி திட்ட அலுவலர் ஆசிரியை பிரியங்கா, பட்டதாரிஆசிரியர் கழக மாநில பொருளாளர் துரைராஜ், வட்ட தலைவர் சிங்காரவேலு, பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துகுமரன் மற்றும் ஆசிரியர்கள் ஆனந்தி ரூபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு கோயிலில் கற்கள், புற்கள் அகற்றினர். திட்ட அலுவலர் ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெறும்
    • தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    பெரம்பலூர்:

    தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்"; பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறு குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 20 ம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


    • ஜெமீன் மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த ஜெமீன் மேலூர் கிராமத்தில், மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணரவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் வைரம் அறிவழகன் தொடக்கி வைத்து கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஹமீது அலி, உதவி இயக்குநர்கள் சொக்கலிங்கம், ரிச்சர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வம், செந்தில் வீர இந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செல்வராஜ், மேகநாதன், ஆனந்தநாயகி ஆகியோர் கொண்ட குழுவினர், கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.


    • உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நத்தப்பள்ளம் ஊராட்சியில் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் நாகப்பட்டினம் கோட்டம் உதவி இயக்குனர் அசன் இப்ராஹீம் வழிகாட்டுதல் படி நடைபெ ற்ற முகமாமிற்கு தலைஞாயிறுஒன்றிய குழு தலைவர் தமிழரசிதலைமையில் வதித்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன் முன்னிலையில் வகித்தார் ஊராட்சி செயலாளர் வீரையன் வரவேற்றார்.

    வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    மேலும் நீர்முளை புனித சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் 150 மாணவர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீதர் பாபு, சண்முகநாதன், திவாகர் கால்நடை ஆய்வாளர் கருணாநிதி உதவியாளர் நல்ல தம்பி,மாலா ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி மற்றும் கிராமக்கள் கலந்து கொண்டனர்.

    • கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வேளாங்குளம் கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டன. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊராட்சி தலைவர் காளிமுத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் ராமநாதபுரம் கால்நடை கால்நடை உதவி மருத்துவர் நிஜாமுதீன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் திருவாசகம் ஆகியோர் கொண்ட குழுவினர் 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • அரியலூர் கல்லங்குறிச்சி கிராமத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை சார்பில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் மற்றும் பேரணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் வெறி நோய் பரவலை தடுக்க முடியும். வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறிய செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார். இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • புதுநடுவலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புதுநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளனூரில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் குணசேகரன் மற்றும் டாக்டர்கள் ஷர்மிளா, மூக்கன், சுப்பிரமணியன், கலியபெருமாள், முத்துசெல்வன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் ஊராட்சி தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மூன்று சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊக்க பரிசும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் விவசாயிகள் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினர்.மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை பைகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடைகள், கோழிகள் மற்றும் செல்லப்பிராணிகளை பரிசோதனை செய்து தடுப்பூசிபோடுதல், குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. மேலும் மாடு மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.

    • இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முக்குளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி டி.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர், ஆனையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக் கண்ணன் (கி.ஊ), ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், வக்கீல் சங்க செயலாளர் சிவராமகிருஷ்ணன், வக்கீல் சந்திரேசேகர், கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி, ஊராட்சி செயலர் பொன்மணி உள்பட வெங்கலகுறிச்சி, தொட்டி வலசை, கருங்கலக்குறிச்சி, திருவாக்கி, கிருஷ்ணாபுரம், கீழப்பனையடியேற்தல் ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் நீதிபதி டி.ராஜ்குமார் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க இலவச சட்ட உதவி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

    • காலை முதல் மாலை வரை நடைபெற்றன
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவுபடுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று சிறப்பு முகாம்கள் காலை முதல் மாலை வரை நடைபெற்றன.முகாமில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து 6-பி படிவத்தை பெற்று தங்களது ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொண்டனர். 

    • மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ - 4 ஆகியவற்றுடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 10-ந்தேதி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 12-ந்தேதி கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 20-ந்தேதி அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 24-ந்தேதி கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 27-ந்தேதி குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-ந்தேதி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அடுத்த மாதம் 3-ந்தேதி க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் , 7-ந்தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது

    . மாற்றுத் திறனாளி குழந்தைகள் வட்டார அளவில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெறுதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல், ஆதார் அட்டை எடுத்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல் மற்றும் பிற உதவிகள் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ - 4 ஆகியவற்றுடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.


    • பெரம்பலூரில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி முகாம் நடைபெற்றது
    • பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்

    பெரம்பலூர்:

    இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பங்கேற்றவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். இதனை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் அரசுத்துறை அலுவலர்கள் கருத்துரைகளை வழங்கினர். முகாமில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை இளையோர் மன்றத்திற்கும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நேரு யுவ கேந்திரா அலுவலகத்துடன் இணைத்துகொண்டு செயல்படுகின்ற மன்ற பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்ட இளையோர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். முன்னதாக அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். முடிவில் நேரு யுவ கேந்திராவின் கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.


    • முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது
    • இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    முசிறி:

    முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரியின் நாட்டு நலப்படுத்திட்ட துவக்கம் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எம்ஐடி வேளாண் கல்லூரி துணை தலைவர் பிரவீன் குமார் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்படுத்திட்ட துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா பொறைக்கழான் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு)துணை முதல்வர்கள் தேவி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மங்கள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொறைக்கழான் ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு நல பணி திட்டத்தின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்ப டுத்திட்ட அலுவலர்கள் சுதாகர், ஆனந்த், ஷோபனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி மோனிஷா அனைவருக்கும் நன்றி கூறினார்.


    ×