search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • பரமத்திவேலூர் தாலுகாகபிலர்மலை ஒன்றியம், கொந்தளம் ஊராட்சி நெட்டையாம் பாளை யத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாகபிலர்மலை ஒன்றியம், கொந்தளம் ஊராட்சி நெட்டையாம் பாளை யத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில், கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டனர்.

    மேலும் கால்நடை விவசா யிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி, நோய் பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து எடுத்து கூறினர்.

    இதில், 650-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர். முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலை வர் மணிமேகலை பாலு சாமி மற்றும் வார்டு உறுப்பி

    னர்கள் மேகலா மற்றும் முருகேசன் உள்ளிட்ட கிரா மத்தினர் செய்திருந்தனர்.

    • நமணசமுத்திரத்தில் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் மழைக்கால மருத்துவ முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஹெச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் தற்போதைய காலக்கட்டத்தில் நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அனுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிரகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, உடல் வெப்ப அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான தொகுப்பு கருத்தாய்வு பயிற்சி முகாம்.
    • பண பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் விளக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான தொகுப்பு கருத்தாய்வு பயிற்சி முகாம் நடை பெற்றது. பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.

    பேராவூரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    பயிற்சியில் பின்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவி.தாமரைச்செல்வன் உள்ளிட்ட 8 குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் 297 பேர் கலந்து கொண்டனர்.

    கனரா வங்கியில் ஒற்றை சாளர முறையில் பண பரிவர்த்தனை செய்வது குறித்து வட்டார கணக்காளர்கள் செல்வக்குமார் மற்றும் முரளி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    மேலும் பண பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் விளக்கம் அளித்தனர்.

    • முகாமில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வலிமையான பூத் என்ற நிகழ்ச்சிக்கு உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மாவட்ட தலைவர் சித்ராங்தன் ஆலோசனைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 60 பூத் கமிட்டிகளிலும் கிளை தலைவர்கள் மூலம் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு பூத்திருக்கும் 5 பேர் நியமனம் செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தெற்கு மண்டலத்தில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, கே.டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி, தங்கமாள்புரம் மேல்நிலைப்பள்ளி, புதிய துறைமுகம் மேல்நிலைப்பள்ளி,தெர்மல் நகர் காமராஜர் பள்ளி, குழந்தை இயேசு துவக்க பள்ளி உட்பட 17 வாக்குசாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,முகாமில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    வலிமையான பூத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில்,தெற்கு மண்டல தலைவர் மாதவன்,மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கிருஷ்ணன், ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டனர்.

    இதில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி,துணை தலைவி சிலம்பொலி,அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தெற்கு மண்டல தலைவி சுமித்ரா, பொதுச் செயலாளர் பிரபு, துணைத்தலைவர் பொய்சொல்லலான், வர்த்தகப் பிரிவு தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாரிராஜ்,செல்லப்பன் சக்திகேந்திர, பொறுப்பாளர்கள் துர்க்கையப்பன் ,முத்துகிருஷ்ணன், பாலகுமார், முனியசாமி, செல்வம் , பலவேசம், முகேஷ் குலசை ரமேஷ், அருண்பாபு, ராஜ்குமார், விக்னேஷ், தீபன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
    • திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டைஒன்றியம், திருபுவனம் ஊராட்சியில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, வசந்தம் லயன்ஸ் சங்கம் மற்றும் திருபுவனம் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.

    அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    ஒன்றிய கவுன்சிலர் வெங்கட், சமூக ஆர்வலர், வில்லியம் ஸ்டீபன்சன், குந்தவை நாச்சியார் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசு ப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.

    முகாமில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, மருத்துவ குழுவினர் சர்க்கரைநோய், ரத்த கொதிப்பு, தைராய்டு, வயிறு சம்மந்தமான பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, மார்பக நோய் பிரச்சனை, உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜய லெட்சுமி,கோகிலம், கிருஷ்ணமூர்த்தி, ஜோதியம்மாள் கலைச்செல்வன் மற்றும் வசந்தம் லயன்சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருபுவனம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மற்றும் வசந்தம் லயன்ஸ் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • ரத்த தான முகாம் நடந்தது
    • அஸ்வின்ஸ் குழுமம் சார்பில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரி மற்றும் ரெஸ்டாரெண்ட்ஸ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ரத்ததான முகாம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 10 வது ஆண்டாக ரத்ததான முகாம் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நடந்தது.

    அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் அஸ்வின் முன்னிலை வகித்தார். முத்து ரத்த வங்கி நிர்வாகி வீரமுத்து, டாக்டர்கள் வெங்கட்ரமணண், பிரகாஷ்ஆகியோர் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் செவிலியர் குழுவினர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் அஸ்வின்ஸ் குழுமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் வழங்கிய வர்ளுக்கு ஊட்டச்சத்து பொருட்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் குழும மேலாளர்கள் சூரி வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் பகுதியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் பகுதியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

    கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், தனவேல், மணிவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , தடுப்பூசி பணியாளர்கள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார், உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினரால், முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது.

    கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்து அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள், 61 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

    மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் விவசாயிகளுக்கு, சிறப்பு மேலாண்மை விருதுகளை கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் வழங்கினார். முகாமில் 600-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.
    • 30 மனுக்கள் பெறப்பட்டன

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ஆர்.டி.ஓ. வழங்கினார்.

    • பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த நிலையில், இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. இதில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சதிரன், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கி தர வேண்டும் என்பது முதல் - அமைச்சரின் எண்ணம். தமிழகம் முழுவ தும் முகாம் நடத்தி 1½ ஆண்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையே இருக்க கூடாது என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். அதனை செயல்படுத்திட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கிராமங்கள் தோறும் எடுத்து செல்ல வேண்டும். இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு படிப்பு

    படித்தவர்கள் வரை கலந்து கொண்டு விலை வாய்ப்பை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் அனைத்து பகு தியை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் இல வச பேருந்து வசதி களும், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
    • வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது. இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.

    இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்மற்றும் 31.12.2005 அன்றோஅல்லதுஅதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சியும், சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவர்கள் தமிழரசு, கமலி ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு கிட்டபார்வை, தூரப்பர்வை, கண்ணில் நீர்வடிதல், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் விழி பரிசோதனை செய்தனர்.

    கண் சம்பந்தமான பிரச்சனை உள்ள நோயாளிகளை தேர்வு செய்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி, இலவச உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் ஆகியவை வழங்கி மீண்டும் அரசு செலவில் வீட்டிற்கு அழைத்து வருதல் உள்ளிட்ட ஆலோசனை நோயாளிகளுக்கு வழங்கினர்.

    முகாமில் ஊராட்சி மன்றத்துணை தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சரவணன் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.

    • தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ளது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2, 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 முதல் 35 வயது வரையிலான ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04329–228641 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×