search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • பாலமேடு அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.
    • இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், திருமங்கலம் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலர் கிரிஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 180-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருந்து வழங்கினர்.

    சிறப்பாக கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்கள் 3 பேருக்கு சான்றிதழ், பரிசுகள் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 850 பணியாளா்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
    • மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவ மழை யையொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    வடகிழக்கு பருவ மழையை யொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 51 குழுக்களில் அந்தந்த மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் மாநகரா ட்சியின் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனா்.

    மேலும், பருவ மழையை எதிா்கொ ள்ளும் விதமாக மாநகராட்சியிலுள்ள 850 பணியாளா்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    கட்டுப்பாட்டு அறைக்கு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், மாநகராட்சியில் இக்குழுக்களுக்கு தகவல் அளித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 - 231021 என்கிற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மூவா் பணியில் இருப்பா்.

    தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் நூறு ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான கட்டட ங்களில் அதன் உரிமையா ளா்கள் பாதுகாப்பைக் கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். அதில் யாரும் குடியிருக்க வேண்டாம்.

    சுகாதாரத் துறையினா், மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    மழை அதிக அளவில் பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், அப்பகுதியைச் சோ்ந்த அனைவரையும் முகாமுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், உதவிச் செயற்பொறியாளா் ராஜசேகரன், உதவிப் பொறியாளா் சந்திரபோஸ், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

    • சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
    • பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார். இந்த முகாமில், பொது மருத்துவம், நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய், தோல், இருதயம், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர், ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், இசிஜி பரிசோதனை, சளி பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், உயர் சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரமேஷ்குமார், தொற்றாநோய் அலுவலர் டாக்டர்.திருலோகன், டாக்டர்கள் சுசித்ரா, செல்வி, விமல்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 9 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர். நேரு , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    வெள்ளகோவில்:

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவில், எல்.கே.சி.நகரில் நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி.ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர்.மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை வாழப்பாடி உதவி இயக்குநர் மருத்துவர் முருகன் வரவேற்றார்.

    துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மாரியம்மன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் செல்வராஜ், கோவிந்தன், கால்நடை பாராமரிப்பு உதவியாளர் மூர்த்தி, சுதாகர்

    ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாபு, சுரேஷ், செந்தில், முருகன், பார்த்திபன், தமிழ், பாஸ்கர், வசந்தா, ரஞ்சிதா, ராஜாத்தி, அருணா சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஹரிதா, வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திலிப்குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    திருச்சி :

    முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முசிறி கோட்ட உதவி இயக்குனர் சையது முஸ்தபா அனைவரையும் வரவேற்றார்.

    மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில் தீவன அபிவிருத்தி மற்றும் கால்நடை மேலாண்மை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.

    சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு மேலாண்மை விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலர் தீவன வைக்கோல் கட்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 550 கால்நடைகளுக்கு தடுப்பூசி , குடற்புழு நீக்கல் , செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சினை பரிசோதனை, மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கால்நடை உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் பாரிவேல், சுகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திக், குமரேசன், கோபி, முருகேசன், விவேகானந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து விவசாயி–களுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள், மானிய விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் சுள்ளிபாளையம் கிராம உழவர் ஆர்வலர் குழுக்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
    • மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உ ள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்ற சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத் தில் நடைபெற்றது.ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மாணவர்கள் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு முகாமை மாவட்ட தொடர்பு அலுவலர் எம். சீனிவாசன் ஆய்வு செயது பேசினார்.

    • பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்கு கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ, பட்டப்படிப்பு, டி.பார்ம், லைபரியன் முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 356 பசுக்கள், 800 ஆடுகளுக்கு சிகிச்சை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பூண்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை ஊராட்சி தலைவர் சுந்தராம்பாள் சாம்பசிவம் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் அரியலூர் சொக்கலிங்கம் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜா, கார்த்திகேயன் , கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, இளங்கோவன் , செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 356 பசுக்கள், 620 வெள்ளாடுகள், 180 செம்மறியாடுகள், 250 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 13 மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×