என் மலர்
நீங்கள் தேடியது "காதல் திருமணம்"
- திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
- இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்
இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் சினிமா பட பாணியை மிஞ்சும் அளவுக்கு இருந்ததால் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து பார்ப்போம்:-
பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி (21). பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா (19). இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, "எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்" என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர்.
இதையடுத்து, காதலியை அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன், பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக காதல் ஜோடி தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
- பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
- ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50). இவரது மனைவி கவிதா.
தம்பதியின் 17 வயதுடைய மகள் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சிறுமிக்கு வாலிபருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாலிபரின் பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குமார், கவிதா இருவரும் திருப்பத்தூருக்கு வந்தனர்.
மொளகாரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றனர். விரக்தி அடைந்த தம்பதியினர் ரெயில் தண்டவாளத்தில் நின்றனர். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் குமார், கவிதா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
- உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம்.
உத்தரப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 2வது கணவனை உதறிவிட்டு 12 ஆம் வகுப்பு படிக்கும் காதலனை மதம்மாறி மூன்றாவதாக திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த ஒரு கோவில் விழாவில், மூன்று குழந்தைகளைக் கொண்ட 30 வயது பெண் ஒருவர் இந்து மதத்திற்கு மாறி 12 ஆம் வகுப்பு மாணவனை மணந்தார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹசன்பூர் வட்ட அதிகாரி தீப் குமார் பந்த் கூறுகையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷப்னம். ஏற்கனவே இரண்டு முறை அவர் திருமணம் செய்து கொண்டார்.
ஷப்னம் முதலில் மீரட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் அவர் சைதன்வாலி கிராமத்தைச் சேர்ந்த தௌஃபிக்கை மணந்தார். தௌஃபிக் சில வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஊனமுற்றார்.
சமீபத்தில், 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயதுடைய பையனுடன் ஷப்னம்க்கு காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷப்னம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தௌஃபிக்கிடம் விவாகரத்து பெற்றார். பின்னர், ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு 18 வயது காதலனை இன்று மணந்து கொண்டார்.
உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம். வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அல்லது வேறு எந்த மோசடி வழிகளிலும் மத மாற்றத்தைத் தடை செய்கிறது. ஆனால் இந்த இவர்களின் விஷயத்தில் இதுவரை எந்த கட்டாயப்படுத்தலும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
- வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.
அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.
அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.
காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.
சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.
போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.
பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர்.
- இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்துள்ளார்.
இதனால் இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்ததால் முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 33), கொத்தனார்.
இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மகேஷ் குமார் -சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மகேஷ் குமார் மட்டும் இருந்தார். இன்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மகேஷ் குமாரை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை .இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்தபோது மகேஷ் குமார் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார் .இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- ராஜா, சர்மிளா இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
- தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ராஜாவின் தாய்க்கும் சர்மிளாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் சர்மிளா கோபித்துக் கொண்டு இந்திலியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வர தன் சொந்தக்காரர்கள் சித்ரா, பிரபு, அலமேலு, தெய்வமணி ஆகியோருடன் ராஜா சென்றனர். இதனால் சர்மிளாவின் தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது அவர்கள் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக சந்திரசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- போலீசார் இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
- இளம்பெண் பெற்றோர், மணமகன் வீட்டாரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சூலூர்:
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி திருமணம் நடத்துவது என இரு வீட்டு பெற்றோராலும் பேசி முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இருவீட்டாரும் திருமண பத்திரிகைகள் அடித்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் வாலிபர், தனது வருங்கால மனைவியுடன் மனம் விட்டு பேசுவதற்காக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே தான் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தனது காதலனை மறக்க முடியாத இளம்பெண், தனக்கு நிச்சயம் செய்த வாலிபர் வாங்கி கொடுத்த செல்போனில் தனது காதலனுடன் பேசி வந்ததும், காதலனை மறக்க முடியாததால் அவருடன் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். மேலும் இளம்பெண் பெற்றோர், மணமகன் வீட்டாரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகனின் பெற்றோர் நிச்சயம் செய்த போது அணிவித்த கம்மல், செல்போன் மற்றும் இதர செலவுகளை வழங்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அதன்படி செல்போன் மற்றும் செலவழித்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.
ஆனால் மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு அணிவித்த கம்மலை மட்டும் திருப்பித்தர இளம்பெண் வீட்டார் அவகாசம் கேட்டனர். எதற்கு என்று விசாரித்த போது, இளம்பெண் அந்த கம்மலை அடகு வைத்து தான் தனது காதலனை கரம்பிடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து சமாதானம் அடைந்த மணமகன் வீட்டார் கம்மலை தர அவகாசம் கொடுத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காதல் திருமணம் செய்த நிலையில் பரிதாபம்
- அதிகாரிகள் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை, புதூர் நாடு ஊராட்சி, பெரும்பள்ளி அடுத்த சின்னவட்டானூர் பகுதியை சேர்ந்த காளி என்பவரின் மகள் சுபாஷினி (வயது 20) என்பவரும் சுரேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
மேலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் சுபாஷினிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் அவதி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுபாஷினி மயங்கி விழுந்ததுள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுபாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சுபாஷினியின் தாயார் மாரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில் இதுகுறித்து திருப்பத்தூர் ஆர்டிஓ லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- காதல் திருமணம் செய்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன் (24). இவர் உறவினர்களின் எதிர்ப்பை மீறி வேறு இனத்தை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியுடன் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த உறவினர்கள் ஜெயபாலன், சுந்தரமகாலிங்கம், காளியப்பன், ஆனந்த், கணேசன் மற்றும் 9 பேர் மதனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
- மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன.
பிணமாக மீட்கப்பட்டவர்கள் காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது 50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.
மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.