search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223314"

    • கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்( வயது 50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பி னும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.

    இது குறித்து சாமிநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்து அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எறிந்து நாசமாயின.

    • மரத்தின் சுற்றி குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
    • புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டின் கீழ்புறம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் தீ வேகமாக பரவி பழமை வாய்ந்த புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, ராஜேந்திரன், விவேகானந்தன் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    • கரூர் நெடுஞ்சாலை அருகே முட்புதரில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரரகள் தீயை அணைத்தனர்

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே தனியார் ஆட்டோ கேஸ் பங்க் பின்புறம் அமைந்துள்ள 1 ஏக்கர் அளவிலான முட்புதற்காட்டில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். தீ மளமளவென எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலை அருகே பல அடி தூரத்திற்கு வானம் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஆட்டோ கேஸ் பங்க், லாரி குடோன், ஜவுளி ஏற்றுமதி நிறுவன குடோன் ஆகியவை உள்ளது. இதனால் அபாயம் ஏற்படும் முன்பாக தடுத்து நிறுத்த வேண்டும் பொருட்டு, பொதுமக்கள் பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தீயில் ஷெட்டு எரிந்து நாசமானது
    • புகாரின் பேரில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    அரவக்குறிச்சி அருகே, வீட்டின் ஷெட்டுக்கு தீ வைத்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த, திருப்பதி என்பவரது மனைவி மகேஸ்வரி (வயது 27) இவர் கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், வீட்டுக்கு முன்னால் இருந்த ஷெட்டுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி விட்டனர். தீயில் ஷெட் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு, 7,000 ரூபாய். இதுகுறித்து, மகேஸ்வரி கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷெட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்

    பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    • தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்தனர்
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி பாரதியார் சாலையில் ஆர்.சி. பள்ளி அருகாமையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டாய் அமைக்கப்பட்டது. இந்த கீற்று கொட்டாயில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு நிலையில் அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த கடை பெரிய வணிகவளாகத்தில் அமைந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கீற்று கொட்டாய் தவிர வேறு எங்கும் தீ பரவவில்லை.விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. முதல் தளத்தில் நின்ற நபர்கள் யாரேனும் சிகரெட் குடித்துவிட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    புதுக்கோட்டை

    ஆவுடையார்கோவில் தாலுகா ஆலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது வீட்டில் உள்ள வைக்கோல் போரில் மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களில் தீபரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் ஏராளமான வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது.

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • திருமங்கலம் அருகே சாலையோர சருகுகளில் ஏற்பட்ட தீ குடியிருப்பு பகுதியில் பரவியது.
    • இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் - மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தரிசு நிலங்கள் உள்ளன.

    தரிசு நிலத்தில் கிடந்த காய்ந்த சருகுகளில் நேற்று இரவு திடீரென்று தீப் பிடித்தது. மளமளவென பரவிய தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதி வரை பரவியது. இதனால் பொது மக்கள் பீதியடைந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் ஆர்.ஐ. அருண், வடகரை வி.ஏ.ஓ.ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசே கரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பா ளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் பகுதி யில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்க ளுக்கு இந்த தீ வைப்பு சம்ப வத்தில் தொடர்பு இருக்க லாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறை களுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அல்லிமுத்து வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×