search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
    • வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20).

    பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார்.

    மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றார்.

    வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
    • தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த நபர், அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாலியா தாலுகாவின் சம்பூர்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் ராம்சந்திரா என்பவரின் மகன் ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    டப்பாவில் பாம்பை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் கூட பயந்து போனார்கள். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார்.

    அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்னும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்.

    தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு பாம்பு வந்துள்ளது
    • குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்த்துள்ளார்

    பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.

    குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.

    • வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு சுற்றி கொண்டிருந்ததை கண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர்.
    • தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள குட்டைக்குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் மாலையில் வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றி கொண்டிருந்ததை சில மாணவர்கள் கண்டு கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவியர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் பகுதியை விட்டு கதகதப்பான இடத்தை நோக்கி பாம்பு தஞ்சமடைந்துள்ளது.

    எனவே நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைக்குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.

    இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.

    ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    • கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
    • பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர்.
    • பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது.

    கர்நாடகாவின் அகும்பே பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரமாண்ட ராஜநாகம் ஒன்று புகுந்ததை மக்கள் கண்டனர். அது ஒரு வீட்டை ஒட்டிய புதரில் புகுந்து மரத்தின் மீது ஏறிவிட்டது. மரத்தில் நின்ற பாம்பை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. அதற்குள்ளாக தகவல் அறிந்து மழைக்காடு ஆராய்ச்சி நிலைய பாம்பு பிடி வீரர்கள் களத்திற்கு வந்தனர்.

    அவர்கள் மரத்தில் நின்ற பாம்பை கீழே இறக்க சற்று சிரமப்பட்டனர். நீளமான அந்தப் பாம்பு பயங்கரமாக சீறிக் கொண்டே இருக்கிறது.

    இறுதியில் அந்த பாம்பை வாலைப் பிடித்து மரத்தில் இருந்து கீழே இறங்கினார் ஒரு பாம்பு பிடி வீரர். மற்றொரு பெண் வன அதிகாரி, சுவரை ஒட்டி பாம்பு பிடிக்கும் பையை வைத்து அதன் வாய்ப்பகுதியில் ஒரு குழாயை கட்டி, பொந்து போல ஏற்பாடு செய்கிறார். கீழே இறக்கப்பட்ட பாம்பு எந்தப்பக்கம் செல்வது என்று பரபரப்பாக ஓடும்போது, பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது. அதை மூட்டை கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டு பாதுகாப்பாக விடுவித்தனர்.

    மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர். இதுபற்றிய வீடியோவை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். ஐ.எப்.எஸ். அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அவை இரண்டும் லட்சக்கணக்கானவர்களின் பார்வையை ஈர்த்தது.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.
    • 9 வது முறை பாம்பு தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டும் 7 முறை தன்னை விஷப்பாம்புகள் கடித்துள்ளதாக அவர் தெரிவித்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.

    இதன்பிறகு ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் அவர் தெரிவித்தார்.

    சனி ஞாயிற்றில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று இந்த விவாகரத்தில் மருத்துவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து விகாஸின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதல்முறை பாம்பு கடித்ததில் பயம் ஏற்பட்டு (Snake Phobia) தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி விகாஸ் தூபே அச்சப்பட்டுள்ளார்.  ஆகவே அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது.
    • சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானில் ஷூவுக்குள் பதுங்கிய பாம்பு ஒன்று படமெடுத்து சீறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு மனிதனின் குடியிருப்புகள்கூட சேதம் அடைந்துள்ளன.

    இதுபோன்ற காலங்களில், நிலத்தில் சந்துபொந்து, இண்டு இடுக்குகளில் வாழும் உயிரினங்களின் வாழ்விடங்கள் அதிக அளவில் சேதம் அடைந்து அவை வீதிக்கு வருகின்றன. குறிப்பாக பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான, மேடான வாழ்விடங்களைத் தேடி மனிதனின் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வாடிக்கை. புதர் மண்டிய பகுதிகள், ஒதுக்குப்புறமான வீடுகளில் பாம்புகள் புக அதிக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர், நீரஜ் பிரஜாபத், ஒரு வீட்டில் சிறுவர்களின் ஷூவில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அதுபற்றிய வீடியோக்கள்தான் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது மேலோட்டமாக பார்த்தபோதே தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர், பாம்புபிடிவீரரை அழைத்துள்ளார். அவர் வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது.

    நீரஜ், அந்த பாம்பை லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பொத்தானை அழுத்தி உள்ளனர்.

    • கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
    • 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை மீண்டும் இன்று [ஜூலை 13] சனிக்கிழமை வந்து பாம்பு கண்டித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராமத்தின் அருகில் உள்ள ஒரே மருத்துவமனையில் அவர் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது நிலைமை மோசமாகியுள்ளது. சனி ஞாயிறில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

    • கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது.
    • அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 35 நாட்களில் மட்டுமே  இவர் 6 முறை  விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

     

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    • மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.
    • வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, தூக்கி எறியப்பட்ட இருமல் மருந்து பாட்டிலை விழுங்கி உள்ளது. அந்த பாட்டில் பாம்பின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தன்னார்வலர்கள் கொக்கி முனையால் நாகப்பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து அந்த பாட்டிலை எடுத்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    ×