search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.
    • போலீசார் பாம்பை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பாம்பை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாய் மறைந்தது. இதையடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் அந்த பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர்.

    பின்னர் அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பாம்பை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர். முன்னதாக கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்து வியந்துபோன போலீசார் அதை புகைப்படம் எடுத்து 'பேஸ்புக்'கில் பதிவிட்டனர். அந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

    • அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
    • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.

    இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கலபுரகி மாவட்டம் மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா.
    • இவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா. இவர் அப்பகுதியில் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் வேலை செய்த களைப்பில் விவசாய நிலம் அருகே உள்ள மரத்தின் கீழ் கட்டிலில் படுத்து இருந்தார்.

    அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரின் காது அருகே 'புஷ், புஷ்' என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகம்மா, சில நிமிடங்கள் அசைவில்லாமல் அப்படியே படுத்துக் கொண்டார்.

    அதையடுத்து அந்த பாம்பு அவர் மேல் இருந்து இறங்கி புதருக்குள் சென்றுவிட்டது. இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • பூங்குணம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
    • குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம்ஊராட்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு20-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கே நேற்றுதிடீரென்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட குழந்தைகள் அலறிஅடித்து ஓடினர். குழந்தைகளின்புத்தகபை மீது பாம்பு புகுந்து ஓடியது. அங்கு இருந்தஅங்கன்வாடி மைய பொறுப்பாளர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அைழத்து சென்றார். குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அங்கன்வாடி மையத்தைஒட்டியுள்ளகுடியிருப்பில் மண்டி கிடக்கும் புதர்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    • பாம்புகளுடன் நடனம் ஆடியவர் கைது செய்யப்பட்டார்.
    • நடன நிகழ்ச்சி உரிமையாளர் கொடுமுடி பாபு என்பவர் தப்பி ஓடி விட்டார்.

    மதுரை

    மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் ஆடி 18-ம் நாள் திருவிழாவில் நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பாம்புகளை வைத்து துன்புறுத்தி நடனம் ஆடிய அப்துல்லா (47) என்பவரை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நடன நிகழ்ச்சி உரிமையாளர் கொடுமுடி பாபு என்பவர் தப்பி ஓடி விட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து நடனமாடும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று மதுரை மாவட்ட வன அலுவலர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    • ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பாம்பை தேடினர்.
    • பாம்பு இன்னொரு ஓட்டைக்குள் புகுந்து மாயமாகி விட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டது.

    ரெயிலின் எஸ் 5 தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் உள்ள பயணிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்த பின்பு தூங்குவதற்கு தயாரானார்கள்.

    அப்போது பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகே ஒரு ஓட்டை இருப்பதை கண்டார். அந்த ஓட்டைக்குள் இருந்து லேசான சத்தம் கேட்டது. உடனே அவர் ஒரு குச்சியை எடுத்து அந்த ஓட்டைக்குள் நுழைத்தார். அப்போது ஓட்டையில் இருந்து ஒரு பாம்பு சீறியபடி வெளியே வந்தது.

    அதிர்ச்சி அடைந்த பயணி, அருகில் இருந்த சக பயணிகளிடம் இதனை கூறினார். அதற்குள் அந்த பாம்பு ஓட்டையில் இருந்து வெளியே வந்தது.

    பின்னர் பயணிகள் அமரும் இருக்கையில் சுருண்டு கிடந்தது. இதை கண்டு பயணிகள், பெண்கள் அலறினர். அவர்கள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு வந்து பாம்பை தேடினர். அதற்குள் அந்த பாம்பு இன்னொரு ஓட்டைக்குள் புகுந்து மாயமாகி விட்டது.

    பல மணி நேரம் தேடியும் பாம்பை காணவில்லை. இதையடுத்து அந்த பாம்பு ஓட்டை வழியாக கீழே விழுந்திருக்கலாம் என பாதுகாப்பு படை வீரர்கள் கூறினர். ஆனாலும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் தூங்காமல் இருந்தனர்.

    இதற்கிடையே ரெயில் பெட்டிக்குள் பாம்பு இருப்பதை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் இதுபற்றி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா்.
    • பள்ளி மேற்கூரையில் மறைந்திருந்த பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினா் உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பெஞ்சுக்கு அடியில் பாம்பு இருப்பதை பாா்த்த மாணவா்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினா்.

    தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பள்ளியின் மேற்கூரையில் மறைந்திருந்த 6 அடி நீள நாக பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கட்டடத்தில் சுமாா் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்திருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக அங்கன்வாடி கட்டடத்தில் பாம்பு புகுந்த தகவலை அறிந்த பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனா்.

    • புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
    • தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (52). கொத்தனார். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்தபடி வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

    அப்போது பாம்பு வீட்டின் ஒரு மூலையில் பாத்திரத்திற்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. அதை லாவமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.

    • நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பால்பண்ணைசேரி தெத்தி ரோட்டில் வீட்டின் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருவர் ரேவதி வழக்கம் போல் இன்றும் கடையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தலைக்கு மேல் பாம்பு சீரும் சத்தம் வரவே அச்சமடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்

    இதனை அடுத்து சத்தம் வந்த திசையில் பார்த்தபோது அங்கு நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு துறையினர் வரும் வரை பாம்பை கண்காணித்தபடி இருந்து பாம்பும் இருக்கும் இடத்தை காண்பித்தனர். இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் வலையோடு சேர்த்து நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாதுகாப்பாக சாக்கினில் அடைத்து வனப்பகுதியில் விட்டனர்.

    நாகை நாகூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறமும், மேற்கு புறமும் மூங்கில் காடுகள் உள்ளதாலும் அருகில் உள்ள கருவை காடுகளிலும் அதிகமாக பாம்பு புற்றுகள் உள்ளது.

    இங்கு அடைந்து இருக்கும் பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது. இப்பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து சென்றுள்ளனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாழ தனியார் தோட்டத்தில் உள்ள மூங்கில் காடுகளையும் அருகாமையில் உள்ள கருவை காடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டிற்குள் சென்ற பாம்பை தடுக்க முயன்ற நாய் பலியானது.
    • நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சரவணன். இவர் செவலை நாய் உள்பட 4 நாய்களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

    அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து பாம்பை விரட்ட முயன்றுள்ளது. ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்தது. இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிடவே பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செய்தனர்.அப்போது நாய் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.

    வீட்டில்புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

    • பாபு அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்.

    அரவேணு:

    கோத்தகிரி கூக்கல்தொரையை சேர்ந்தவர் பாபு. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார். பாம்பு நேராக கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது.

    இதுபற்றி அறிந்ததும் வாலிபர்கள் சிலர் கடைக்கு வந்து பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து பாம்பை வாங்கி சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    • 2010ல் ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலானது. அது உண்மையான பாம்புதான் என்ற வகையில் கருத்து பகிரப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதேசமயம், இது உண்மையாக இருக்காது, ஏமாற்று வேலை என்றும் பலர் கமென்டில் பதிவிட்டனர்.

    இதையடுத்து இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடியபோது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார். எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. பழைய படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக்கி வருவதும் தெரியவந்தது.

    மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×