search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • கூலி தொழிலாளி குடிக்க பணம் இல்லாத மனவேதனையில் விஷம் குடித்தார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தாழக்குடி விளங்காட்டு காலணியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 60) கூலி தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவி சரஸ்வதியிடம் பணம் கேட்டு தகறாறு செய்வது உண்டு. சரியாக வேலைகளுக்கு செல்வது கிடையது.

    சம்பவத்தன்று இசக்கியப்பன் மனைவி சரஸ் வதியிடம் குடிக்க பணம் கேட்டு தகறாறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர் விஷம் குடித்தார்.

    இதனால் வாந்தி எடுத்த நிலையில் இருந்த இசக்கியப்பனை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இசக்கியப்பனின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் பாலியானார்.
    • பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.‌

    இந்த நிலையில் ஜோதி விளையாட்டாக கடந்த 15-ம் தேதி விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

    விளையாட்டாக விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீரணம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த குடிநீரில் விஷம் கலந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
    • விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாடையுடன் தண்ணீர் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி–யடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிமார் கோவில் பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

    இந்த தொட்டியில் இருந்து 4 பகுதிகளாகப் பிரித்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்ட போது ஒரு சில வீடுகளில் மட்டும் விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாடையுடன் தண்ணீர் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர் உடனடியாக வீடுகளுக்கு கொடுத்த தண்ணீர் பைப்பை முழுமையாக அடைத்தார்.

    இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணையில் நடத்தினர். மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மருந்து கலக்காத நிலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

    திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் மேல்நிலை தொட்டியில் இருந்த தண்ணீரை முழுமையாக அகற்றியதுடன் தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்களை முழுமையாகச் சுத்தம் செய்து பின்னர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரசகுளம், மேலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் நேசையன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று நேசையனுக்கும் மனைவி மேரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீட்டின் அருகில் உள்ள வாழை தோப்பில் விஷ மருந்து தின்று ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நேசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நேசையன் மகன் ஜெகன் (33) அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் கரையான்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது பெரியம்மா வள்ளியம்மாள் (வயது 76). இவர் செல்வனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வள்ளியம்மாள் நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி அருகே அனந்த பத்மநாப புரம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் முருகவேல் (வயசு 45) இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது முருகவேல் மயங்கி கிடக்க உடனடியாக இவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

    இங்கு சிகிச்சை பலனில்லாமல் முருகவேல் பரிதாபமாக இறந்தார் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அருப்புக்கோட்டையில் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் நகராட்சி ஊழியர் தூக்கில் தொங்கினார்.

    விருதுநகர்

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது47). இவருக்கும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த இந்திரா தேவி (45) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு குழந்தை இல்லை.

    இதனால் மனவே தனையில் இருந்த இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக மன மாற்றத்திற்காக அருப்புக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்திராதேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டி பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 26). இவர் தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட லட்சுமி அம்மாள் சம்பவத்தன்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் இன்னாசி முத்து (55). இவர் விருதுநகர் நகராட்சியில் குடிநீர் வினியோக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு இருதய வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இன்னாசிமுத்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்த பெயிண்டர் விஷம் அருந்தி பரிதாபமாக இறந்தார்.
    • அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்தவர் ராபர்ட் சிம்சன் (வயது 60), பெயிண்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

    உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் சிம்சன் பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த விவசாயி விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கி இறந்தார்.
    • உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌
    • அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் குடும்பத்தை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்

    நெல்லை:

    பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் கடந்த 1-ம் தேதி சமாதானபுரம் பஸ் நிறுத்தத்தில் விஷம் குடித்தார்.

    தொடர்ந்து அவர் தனது மகனுக்கு போன் செய்து விஷமருந்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    உடனே அங்கு வந்த அவரது மகன், கண்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.
    • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

    இதேபோல் கொல்லம் மாவட்டம் கொட்டாக்கரா என்ற இடத்தில் உள்ள அங்கன்வாடியில் 8 மாணவிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் உணவில் விஷத்தன்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

    ×