search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • வங்கியின் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா்சம்மேளன துணைத் தலைவா்கோவிந்தன் தலைமை வகித்தாா்.

    போரா ட்டத்தைத் தொடங்கி வைத்து ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.

    இதில், நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வுதியம் வழங்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின்படி கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    அனைத்துத் தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தாமதமின்றி நடத்த வேண்டும்.

    வங்கி வாடிக்கையாளா்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

    நிறுத்திவைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில் அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    பணியாற்றும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாநிலச் செயலா் அன்பழகன் நிறைவுரையாற்றினாா்.

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைச்சாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஊதியமின்றி அல்லல் படும் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மற்ற சங்கங்களோடு இணைத்து ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பொதுப்பணி மாறுதல் திட்டத்தினை வகைபடுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும்.
    • முடிவில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்ட புள்ளியியல் துறையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்ட பணியா ளர்களில் சிலருக்கு மட்டும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டத்தின் சார்பில் தஞ்சை புள்ளிஇயல் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை தெற்கு வட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் . தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன், தொடக்க உரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்ட செயலாளர் அஜெய்ராஜ் , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் , தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர்அந்துவன்சேரல், உள்ளாட்சி தணிக்கை துறை மன்றம்அம்பேத்கர், நில அளவை அமைச்சு பணியாளர் சங்கம் முருகன், மாநில துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க அமைப்புசெயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்பு உரையாற்றினார் . அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்ரெங்கசாமி நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சௌரிராஜன் நன்றி கூறினார்.

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி. சங்கத்தின் பொருளாளர் தங்கையா தலைமை தாங்கினார்.

    எல்.பி.எப். சங்கம் இளங்கோ ,பி.எம்.எஸ். சங்கம் விஜயகுமார், சி.ஐ.டி.யு. துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். சங்க பீமராஜ், டி.யூ.சி.சி. சங்கம் வேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஜான், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மணிசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கனகசுந்தர், துணை பொதுச்செய லாளர் டி.கே. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து புறநகர் கிளையில் ஏற்க னவே கொடுத்து கொண்டு இருந்த பணி நேரத்தை குறைக்கக்கூடாது. அனைத்து பணி நேரங்க ளையும் பணி நேரமாக வழங்க வேண்டும். பணி குறைப்புக்கு வவுச்சராக வழங்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு ஊழியர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு னர்கள், எம். ஆர் .பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், ரவிச்சந்திரன், முருகன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பம் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்த லைவர் ரவிச்சந்திரன் பேரணியை தொடக்கி வைத்தார்.

    மாவட்டச் செயலாளர் ரங்கசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.

    இந்த பேரணியானது பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.

    இதில் மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரை ஆற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு
    • பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மண லிக்கரை இலங்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் நாயர் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலையில் ரத்த வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசேதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உடலை உறவினர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முன்னாள் ராணுவ வீரர் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என டாக்டரிடம் கூறியுள்ளனர்.

    அதற்கு டாக்டர் போலீஸ் வந்தால் தான் எங்களால் உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப முடியும் என கூறினார். இதனால் உறவினர்கள் கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் வராததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது எங்கள் பகுதியில் நடக்காததால் நாங்கள் வரமுடியாது என குலசேகரம் போலீசார் தெரிவித்தனர். இப்படியாக இறந்த ராணுவ வீரர் உடல் புறநோயாளிகள் பகுதியில் திறந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தது.

    இதை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொற்றிகோடு போலீசார் வந்து உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் இவரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரு ஊழியர் 2, 3 மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. 5 ஆண்டு பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 3 ஊழியர்கள் மீது போலீசில் புகார்
    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறார்.

    இங்கு மேஜையில் வைத்திருந்த ரூ. 94 ஆயிரத்து 406 திடீரென மாயமானது. இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுபானக்கூடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை எடுப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர்களிடம் நயினார் குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப தருவதாக கூறினார்களாம். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து நயினார் குமார், பணம் திருட்டு தொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மதுபான கூடத்தில் வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து (45), களக்காடு சந்திரன் (44), ராமநாதபுரம் மாவட்டம் வேப்பன்குளம் நம்புவேல் (40) ஆகிய 3 பேர் பணத்தை திருடியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேவகோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் புகார் கொடுக்க அச்சம் அடைந்துள்ளனர்.
    • பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர்.

    தேவகோட்டை

    விருதுநகரை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 3 இயக்குநர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனை வரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்க ளது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

    மேலும் இவர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்து உள்ள தாகவும், இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதுவரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் முகவர்களை கொண்டு பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் பெரும்பா லும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் உள்ள முகவர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்று பணமாக பதுக்கி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் இது சம்பந்தமாக யாரும் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டி வருவதாக நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர். முகவர்களை காவலில் எடுத்து விசாரித்து யார் யார் பெயரில் சொத்துக்கள் உள்ளது எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது. பினாமிகள் உறவுக்கா ரர்கள் யார் என்பதை கண்டறிந்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற னர்.

    தேவகோட்டை பகுதி களில் பல நிதி நிறுவ னங்கள் இது போன்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி அதிக வட்டி தருவதாக செயல் பட்டு வருகிறது. அவர்க ளையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை காப்பாற்ற முடியும்.

    • ரெயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் கோட்ட துணைத்தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் சங்கமான தக்சின் ரெயில்வே ஊழியர்கள் யூனியன் சார்பில் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கி னார்.

    கோட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், கோட்ட உதவி தலைவர் ஜெயராஜசேகர், கோட்ட இணை செயலாளர்ஆர்.சங்கரநாராயணன், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. கோட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    100 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ராயபுரம் ரெயில்வே அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். காலி பணி யிடங்கள் போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த கேட் கீப்பர்களாக நியமிக்கக் கூடாது. தொழிலாளர்க ளுக்கு அலவன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முடிவில் கோட்ட துணை தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.

    ×