search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார்"

    • மது அருந்திய நிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் வலியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 61), தொழிலாளி.

    இவர், தினமும் மது அருந்தி விட்டு உப்புக்குளம் பகுதியில் உள்ள கிணற்று அருகே அமர்ந்திருப்பது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக இவர் திடீரென மாயமானார். உறவினர்கள் தேடியபோது கிணற்றுக்குள் ஜாண்சன் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.

    அவர், மது அருந்தியநிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்கலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
    • நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே திருவரம்பு சாத்திர விளை பகுதியில் இருந்து கொக்கோட்டு மூலை பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது.

    இந்த சாலையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது திருவரம்பு- கொக்கோட்டு மூலை இணைப்பு சாலையாக உள்ளது இந்த சாலை அருகே சாத்திரவிளை பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் நிலத்தை விலைக்கு வாங்கினார். வாங்கிய நிலத்தை ஒட்டி யும் சாலை தனக்கு சொந்தமானது என்றும் உரிமை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

    இதனால் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென்று நீதிமன்ற உத்தரவு பெற்று நிலத்தை சுற்றி சுவர் எழுப்பினார். அப்போது அந்த சாலை பகுதி முழுவதையும் சேர்த்து சுவர் எழுப்பி அடைத்து வைத்துள்ளார்.

    அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைப்பு சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கொக்கோட்டு மூலை ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாமல் குலசேகரம் வழியாக சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.அந்த பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் திருவரம்பு குலசேகரம் சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    திடீரென்று சாலை அடைக்கப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக் கப்பட்ட மக்கள் சாலை யை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கை ஏற்கப்படாததால் நேற்று மாலை 4 மணி அளவில் அைடக்கப்பட்ட சாலையை திறந்துவிடக் கோரி திருவட்டார் பேரூ ராட்சி கவுன்சிலர் பிரான்சிஸ் தலைமையில் பொது மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திருவட்டார் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர்.

    மறியல் போராட்டம் மாலை 7 மணி வரை நீடித்தது. இந்நிலையில் தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதன்பிறகு இரு தரப்பி னரையும் ஆவணங்களையும் பார்த்து முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து இன்று தக்கலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருத்த லங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கோவிலில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017 ஆண்டு சுமார் 70 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான தேக்கு மரம் கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அந்தக் கொடி மரத்தில் எண்ணையை ஊற வைத்து கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பாபி ஷேகத்திற்காக 200 கிலோ செம்பு பயன் படுத்தி 42 கலசங்கள் உருவாக்கப்பட்டது.

    இந்த கலசங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட் டது. பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டு வெள்ளியில் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட கருடாழ்வார் சிலையும் செய்யப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டது.

    இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது அதனையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்ட இந்த கொடிமரம் உள்ளது குமரி மாவட்டத்தில் அதிக உயரம் கொண்ட கொடி மரம் இந்த கொடி மரமாகும் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உச்ச பூஜை ஆகிய பூஜைகள் செய்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணமும் அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அத்தாழ பூஜை, அவஸ்சிராவம் தெளித்து ஸ்ரீ பூதபலி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், ஸ்ரீசாஸ்தா கோவில் ஸ்ரீ குலசேகரபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உபதேவன்மார் களுக்கு பிரதிஷ்டையும் நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு கோவிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது இரவு 7 மணிக்கு திருவட்டார் ஆரபி கலாலயம் குழுவி னரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து கும்பாபிஷேக பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கொடிமரத்துக்கு மாட்டுவதற்கு தயார் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், அதிவாசம்விடர்த்தி, உஷபூஜை, உச்சபூஜை, அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காணி மடம் மந்திராலயம் யோகிராம் சூரத்குமார் அவர்களின் காணி ஞானி நாமரிஷி தபஸ்வி பஜனை நடை பெறுகிறது.

    நேற்று மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை வந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பாதைகள், அன்னதானம் நடைபெறும் இடம், பக்தர்கள் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறநிலையத்துறை என்ஜினியர் ராஜ்குமார், கோவில் கண்காணிப்பாளர் ஆணந்த் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோவிலில் மாட்டப்படும் கண்காணிப்பு கேமராக்கள், பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவட்டார் பேரூராட்சி மூலம் தினமும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி ஆகியவற்றையும் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் காலை மாலை வேளைகளில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மை படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், செயல் அலுவலர் மகராஜன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    கோவில் தந்திரி சஜித்சங்கரநாராயணகுரு மற்றும் அவருடன் பொறுப்பில் இருந்த சுப்ரமணியகுருவிற்கும் குடும்ப சூழல் காரணமாக பூஜைகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில் தந்திரி அவகாசம் கொண்ட வஞ்சியூர் அத்தியற மடத்தை சார்ந்த கோகுல்தந்திரி இரவு பொறுப்பேற்று கொண்டார் அவரின் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது இன்று நான்காம் நாள் பூஜை நடைபெறுகிறது.

    இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முளபூஜை, நாயசாந்திஹோமம், சோர சாந்திஹோமம், ஹோமகலசாபிஷேகங்கள், உச்சபூஜை, ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6-மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு பிம்ப பரிக்கிரகம், ஜலாதிவாசம், அக்ஷஹோமம், குண்ட சுத்திஹோமம் முளபூஜை, அத்தாழ பூஜை, ஆகிய பூஜைகளும் 6.30க்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ குலசேகர பெருமாள் சன்னதிகளில் பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருவனந்த புரம் பாரத கலா ஆர்ட் அக்காடமியின் டாக்டர் பிந்துலெக்ஷ்மியின் கிருஷ்ணகதா நடனம் நடைபெறுகிறது.

    கிருஷ்ணன் கோவிலில் தயார் ஆன 7 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ பலி விக்கிரகம் மற்றும் கோவில் விமானத்தில் பொருத்தப்பட வேண்டிய 7 தங்க முலாம் பூசப்பட்ட கும்பகலசங்கள் உபய தாரரிடம் நேற்று மாலை ஆற்றூர் கழுவன் திட்டையில் ஒப்படைக்கபட்டது.

    பின்னர் அலங்கரிக் கப்பட்ட வாகனத்தில் சென்டை மேளம் முளங்க முத்துக்குடையுடன் கும்பகலச ஊர்வலம் புறப்பட்டது.

    திருவட்டார் பாலம் தபால் நிலைய சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு வழியாக கோவில் மேற்குவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த 7 ஆண்டுகளாக சாமி சிலைகள் பாலாலய சன்னதியில் இருந்து வந்தது. தற்போது கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி அங்கிருந்த சிலைகள் கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. பாலாலய சன்னதியில் இருந்த சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று சிவன் சன்னதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    • திருவட்டார் பேருராட்சி சார்பாக அறிவிப்பு
    • கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவன் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மெயின் ரோட்டில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்க கூடாது என்று பக்தர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கை ஏற்று பேருராட்சி சார்பாக அந்த பகுதியில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

      கன்னியாகுமரி:

      திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜூலை) 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

      கோவில் கருவறை விமானம், உதய மார்த்தாண்ட மண்டபம், மேற்கூரை, அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கலசங்கள் பொருத்தப்பட உள்ளது. கிருஷ்ணன் கோவிலில் செம்பிலான கும்ப கலசங்கள் உருவாக்கப்பட்டு ஒசூரில் தங்க முலாம் பூசுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.

      ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. கருவறை மூலவர் சன்னதியின் மேற்பகுதியில் 5 கலசங்களும், ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல்பகுதி கூரையில் ஒரு கலசமும் உதய மார்த்தாண்ட மணடபத்தின் மேல் ஒரு கலசமும் பொருத்தப்பட உள்ளது. முக்கிய கலசம் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நிறைவடைந்ததும் கும்ப கலசங்கள் திருவட்டாருக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் பொருத்தப்படும்.

      கோவில் பிரமாண்டமாக இருப்பதாலும், கோவில் வளாகத்தில் போதிய இட வசதிகள் குறைவாக இருப்பதாலும் கும்பாபி ஷேகத்தை பக்தர்கள் நேரில் காண்பதில் சிரமங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்புறங்களில் பல இடங்களில் பெரிய அளவிலான் எல்.இ.டி. டிவி.கள் அமைக்க அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் அகன்ற திரை டி.வி.க்கள் வைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

      நேற்று சுவாமியின் பாதத்தில் பூஜையில் வைக்க ப்பட்ட கும்பாபி ஷேக விழா அழைப்பிதழ் பக்தர்களுக்கு வினி யோகிக்கப்பட்டது. முதல் அழைப்பிதழை அறநிலையத்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து பக்தர்களுக்கு அழைப்பிதழ் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன் குமார், வள்ளலார் பேரவை பத்மேந்திரா சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் மகாதேவன் ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். திருவட்டார் நான்குமுனை சந்திப்பிலிருந்து கோவில் வரை குண்டு குழிகளுடன் இருந்த சாலைப்பகுதி நேற்று சரி செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

      • திருவட்டார் போலீசார் சோதனை நடத்தினர்.
      • டிரைவர் சாலின் என்பவரை கைது செய்தனர்.

      கன்னியாகுமரி:

      திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவட்டார் போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

      அப்போது 2 மினி வேன்களில் சிலர் செம்மன் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சாலின் என்பவரையும் கைது செய்தனர்.

      • திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர்.
      • திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

      கன்னியாகுமரி:

      திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில்ராஜ், மத்திய பாது காப்பு படை வீரர்.

      இவரது மனைவி லில்லிஜாய் (வயது 40). இவர்களது மகள்கள் ஷானியா (15) ஷம்ளா (12). சுனில்ராஜ் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு 6-ந் தேதி வேலைக்கு சென்றார்.மறுநாள் மதியம் மனைவிக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. வீட்டின் அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது 6-ம் தேதி மாலையில் லில்லிஜாய், மகள்களுடன் வெளியே போனதாக தெரிவித்தனர்.

      இதனால் கடந்த 18-ந் தேதி மீண்டும் ஊருக்கு வந்த சுனில்ராஜ் பல்வேறு இடங்களில் மனைவி மற்றும் மகள்களை தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சுனில்ராஜ் புகார் கொடுத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

      • இன்றும், நாளையும் சுகிர்த ஹோமம் நடக்கிறது
      • திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெறுகிறது

      கன்னியாகுமரி:

      திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ஜூலை 6-ந்தேதி நடைபெற உள்ளது.

      இந்நிலையில் பக்தர்கள் திரட்டிய நிதி ரூ.15 லட்சம் செலவில் புதியதாக வெள்ளியிலான கமலவாகனம் மற்றும் அனந்த வாகனம் ஆகியன நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் உரு வாக்கும் பணி கடந்த 6 மாத காலமாக நடந்து வந்தது.

      வாகனம் அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று காலை சிற்பி செல்வராஜ் தலைமையில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் மினி லாரியில் ஏற்றி திருவட்டார் தளியல் கருடாள்வார் சன்ன திக்கு கமல வாகனங்கள் கொண்டு வரப்பட்டது.

      பின்னர் மாலையில் சிறப்பு தீபாராதனை யைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ, நாம ஜெபத்துடன் ஊர்வலகமாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு வாகனங்களை கொண்டு வந்தனர். அங்கு கோவிலை வலம் வந்த பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் இரு கமல வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

      கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள்நடந்து வந்த நிலையில் இன்றும், நாளையும் காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.

      • ஆதிகே சவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 450 ஆண்டுகளுக்குப்பின்னர் நடைபெறுகிறது
      • பக்தர்கள் ரூ.4,93,992 உண்டியலில் காணிக்கையாக வழங்கியிருந்தனர்

      கன்னியாகுமரி:

      திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

      108 வைணவத்திருப்ப திகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகிய திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 450 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் ஜூலை மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

      இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மட ப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவ டைந்து விட்டது.

      பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று துவங்கி நடந்து வருகிறது. சுற்றுப்புற சுவர் காவி மற்றும் வெள்ளை வ ர்ணம் பூசப்பட்டு வருகிறது.

      கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்தை யொட்டி விளக்குகள் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்ப ட்டது.

      கோவிலின் கிழக்கு வாசலையொட்டிய பகுதியில் பந்தல் அமைப்பதற்காக பிரமாண்ட தூண்கள் நிறுவும் வேலை நேற்று துவங்கியது.

      மேலும் கிழக்கு வாசலை யொட்டி இடையூறாக இருந்த பழமையான கட்டிடம் இடித்து மாற்றப்பட்டது.

      வரும் ஜூன் 29.ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. ஜூன் 30.ந்தேதி பாலால யத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவ றைக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும்.

      ஜூலை மாதம் 5.ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

      ஜூலை மாதம் 6.ந்தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோவில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடை பெறும். ஜூலை9-ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும்.

      கோவிலில் 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும், 6 குடங்களும் திறக்கப்பட்டு. அதிலிருந்த பணம் எண்ணப்பட்டது. அறநிலையத்துறை சூப்பிரண்டு ஆனந்த், கோவில் மேலாளர் மோகன் குமார் முன்னிலையில் பக்தர்கள் கோவில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

      பக்தர்கள் ரூ.4,93,992 உண்டியலில் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      • வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
      • திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

      கன்னியாகுமரி:

      வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

      எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்க ரை, மணக்காவிளை,

      முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், 'ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு,

      திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

      இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

      ×