search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223704"

    • புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
    • முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    கர்ப்பிணி பெண்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அட்சதை தூவி வாழ்த்தினார்.

    சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    விழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள். மற்றும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசுகையில், வளைகாப்பு என்பது பண்டைய தமிழர் சடங்கு மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் சடங்கு ஆகும்.

    ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஏழை, எளிய பெண்களுக்கு வளைகாப்பு நடத்த வசதி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப் படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்த வேண்டும் என 2013-ம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமுதாய வளைகாப்பு விழா இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மகிழ்ச்சியும், மன அமைதி யும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த சமுதாய வளைகாப்பு விழா சிறந்ததாக உள்ளது. என்றார். இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வ மணி, கோபி, செந்தில்குமார், சேதுபதி, விளார்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும்.
    • புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.தர்மத்தை காக்க, அதர்மத்தை அழிக்க இறைவன் மகா விஷ்ணு தோன்றி நரகாசுரன் என்னும் அரக்கனை அழித்த திருநாளே தீபாவளி திருநாளாகும். இத்திருநாள் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு வழங்கட்டும். அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும். அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடந்த 24-ந்தேதி பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானம் குடித்தார்
    • கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்த நகரை சேர்ந்தவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின். கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

    கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெரும் துயரத்தில் உள்ள மாணவன் அஸ்வின் வீட்டிற்கு கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதி 44 வது வார்டில் உள்ள கோம்பை தோட்டம் பகுதி பள்ளிவாசல் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ்,வடக்கு மாநகரக் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி செயலாளர் மு .க .உசேன் , 44 வது வட்ட செயலாளர் ரபிக், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திலகராஜ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புற மாணவ- மாணவிகளின் அறிவாற்றலை பெருக்க சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதனை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் டாக்டர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும்.
    • பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலெக்டர் வாயிலாக, முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும். பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி ஜி.என்., கிருஷ்ணா நகரில் புதிய சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.

    தெற்கு தொகுதிக்குள் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு பிர்காக்களை கொண்ட புதிய தாலுகா அலுவலகம் ,நெருப்பெரிச்சல் பகுதியில் ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும்.புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ,பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும். திருப்பூர் மருத்துவமனைக்கு, 30 கி.மீ., தூரம் சென்றுவர வேண்டியுள்ளது.எனவே பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் பால்உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால்கொள்முதல் செய்யும் சங்கமாகும். இந்த சங்கத்திற்கு உட்பட்ட பால்உற்பத்தியாளர்களுக்கு திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருப்புவனம்பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் , வியாபாரிகள் எடைக்கல் தராசு பயன்படுத்தி வருவதால் மின்னணு தராசு வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையினை ஏற்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் இன்று காலை உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று மின்னணு தராசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பூமி பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா்,உறுப்பினா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் எஸ்எம்.ரஹீம், முருகையா, பேபிரெசவுபாத்திமா, இசக்கித்துரைபாண்டியன், சுப்பிரமணியன், ஜெக நாதன், முத்துப்பாண்டி, இசக்கியம்மாள், சுடர் ஒளி, வேம்புராஜ், பொன்னு லிங்கம் (சுதன்), ராம்குமார், செண்பகராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகர செயலாளா் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சக்திவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் செந்தில் ஆறுமுகம், ராஜா கோபாலன், திலகர், ஞானராஜ், தி.மு.க. நகர துணைச்செயலாளா் குட்டி ராஜா, அவைத்தலைவா் மணிகண்டன், நகர இலக்கிய அணி மாடசாமி, வார்டு செயலாளா் கோபால்யாதவ், இசக்கி முத்து, வனத்துறை விக்னேஷ், சூர்யா, ஹரிஹர லெட்சுமணன், ஒப்பந்தகாரர் ஸ்ரீசபரி சாஸ்தா இன்ப்ரா பிரைவேட் லிமிடேட் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
    • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

    விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×